Category: இன்றைய சிந்தனை

உணவருந்த வாருங்கள் !

உயிர்த்த இயேசு தம் சீடரிடம் காட்டும் பாசமும், பரிவும் நம் உள்ளத்தைத் தொடுகின்றன. அவர்கள் தம்மைக் கைவிட்டு ஓடிவிட்டதையோ, தமது உயிர்ப்பை நம்ப மறுத்ததையோ, தங்களின் பழைய வாழ்க்கைக்கே மீண்டும் திரும்ப முடிவு செய்ததையோ அவர் பொருட்படுத்தவில்லை. மாறாக, தந்தை தம் பிள்ளைகள்மேல் பரிவு காட்டுவதுபோல (திபா 103), இயேசு தம் சீடர்களுக்குப் பரிவு காட்டுகிறார். அவர்களுக்கு மீன்பாடு கிடைக்கவில்லை என்பதை அவர்களிடம் விசாரித்து அறியும்போதும், படகின் வலைப்பக்கத்தில் வலை வீசச்சொல்லி, பெரும் மீன்பாடு கிடைக்கச் செய்யும்போதும், களைப்போடும், பசியோடும் அவர்கள் கரைக்கு வரும்போது, அவர்களுக்கு உணவு தயாரித்து வைத்திருந்து, #8220;உணவருந்த வாருங்கள்” என்று அழைக்கும்போதும், உயிர்த்த இயேசுவின் பரிவை நாம் கண்கூடாகக் காண முடிகிறது. இந்தப் பாஸ்காக் காலத்தில் உயிர்த்த இயேசுவின் பாசத்தை நாமும் அனுபவிப்போம். நமது கடந்த கால வாழ்வை, குறைகளை, பாவங்களை அவர் நினைவுகூராமல், நம்மைப் பரிவுடன் பராமரிக்கும் அவரது பேரன்பைப் போற்றி மகிழ்வோம். மன்றாடுவோம்: கடந்த...

தந்தையைப் போல மகன் !

1. “என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார், நானும் செயலாற்றுகிறேன்” என்னும் வாக்கிலிருந்து ஓய்வுநாளிலும் இறைவன் செயல்படுவதைச் சுட்டிக்காட்டி, அவ்வாறே ஓய்வுநாளிலும் தாம் மீட்பின் பணியைச் செய்வதாக இயேசு வாக்குமூலம் தருகிறார். நாமும் நற்பணியாற்றுவதிலும், நேர்மையானவற்றைச் செய்வதிலும், ஓய்வின்றி உழைக்க வேண்டும். 2. “தந்தை செய்பவற்றையே மகனும் செய்கிறார்”. தந்தை இறைவன் தமது பேரன்பை, பேரிரக்கத்தை மீட்புச் செயல்களாக வெளிப்படுத்துகிறார். அவ்வாறே, இயேசுவும் பாவங்களை மன்னிப்பது, நோயிலிருந்து நலமளிப்பது போன்ற செயல்களை அல்லும் பகலும் ஆற்றிவந்தார். நாமும் இத்தகைய பணிகளை, மாந்தரை இறைவனுடனும், மனிதருடனும் ஒப்புரவாக்கும் பணியை எப்போதும் ஆற்றவேண்டும். 3. “தந்தை தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பதுபோல, மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்”. இயேசுவிடம் வந்தவர்கள் சாவிலிருந்து விடுதலைபெற்று, புதுவாழ்வைப் பெற்றுக்கொண்டனர். நாமும் வாழ்வின் வழிகாட்டிகளாகத் திகழவேண்டும். 4. “தந்தை சொற்படியே நான் தீர்ப்பிடுகிறேன். நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது, ஏனெனில் என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே...

கடவுளுக்கு நாம் செவிமடுப்போம்

இயேசு மக்களுக்கு அப்பங்களைப் பகிர்ந்து கொடுக்கிறார். இயேசுவின் புதுமை செய்யும் ஆற்றலைப்பார்த்த மக்கள், ”உலகிற்கு வரவிருநத உண்மையான இறைவாக்கினர் இவரே” என்று இயேசுவைப் புகழ்கிறரர்கள். எதற்காக இயேசுவை மக்கள் இறைவாக்கினராகப் பார்க்கத் தொடங்கினார்கள் என்பதற்கு இணைச்சட்ட நூல் ஓர் ஆதாரத்தைத் தருகிறது. ”உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப்போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு”(18: 15). இந்த இறைவார்த்தை இயேசுவில் உண்மையாவதை மக்கள் பார்க்கத் தொடங்கினார்கள். அந்த நேரத்தில் அவர்கள் இயேசுவை தாங்கள் எதிர்பார்த்த மெசியாவாக ஏற்றுக்கொள்ளத்தொடங்கினார்கள். ஆனால், சிலநாட்களில், அதே மக்கள், ”அவனைச்சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்” என்று கத்தத்தொடங்கினார்கள். ஏன் மக்கள் மனதில் உடனடி மாற்றம்? அதற்கான காரணம் இதோ: இயேசு நோயுற்றவர்களைக் குணமாக்கியபோதும், முடவர்களை நடக்கச்செய்தபோதும், செவிடர்களைக் கேட்கச்செய்தபோதும், இயேசுவை மெசியாவாகத்தான் மக்கள் நினைத்தனர். ஆனால், தங்கள் விருப்பப்படிதான் இயேசு இருக்க வேண்டும் என்றும் , தங்களது எண்ணத்திற்கேற்ப இயேசு இருக்க...

இயேசுவின் நற்செய்தி தரும் படிப்பினை

யோவான் நற்செய்தியாளரின் முக்கியமான கவலைகளில் ஒன்று, இயேசுவை ஒருசிலரே நம்புகிறார்கள் என்பது. ஒரு சிலரே இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதும், அவரது கவலையாக இருந்தது. ஆனால், இயேசுவை நம்புகிறவர்கள், உடனே அவரது வார்த்தையையும் நம்புகிறவர்களாக இருந்தது அவருக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது. முற்காலத்தில் ஒரு ஆவணத்தை ஒருவர் ஏற்றுக்கொள்வதாக இருந்தால், அந்த ஆவணத்தின் கீழே, தான் ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக, தனது அச்சைப் பதிப்பார். அந்த அச்சு, ஒருவர் அந்த ஆவணத்தை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக இருந்தது. அந்த அச்சு தான், அந்த ஒப்பந்ததத்திற்கு, குறிப்பிட்ட நபர் கட்டுப்பட்டவர் என்பதை அறிவிப்பதாக இருந்தது. அதேபோல, இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறவர்கள், அவரையும், அவரது வாழ்வையும், தாங்கள் மேற்கொள்ள வேண்டிய வாழ்வையும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் அர்த்தம். இன்றைக்கு நாம் இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறவர்களாக இருந்தால், அவரையும், அவர் நமக்கு காட்டுகிற, அறிவுறுத்துகிற வாழ்வையும் ஏற்றுக்கொள்வதாகத்தான் அர்த்தமாக இருக்கும். அத்தகைய ஒரு வாழ்வை நாம் நேர்மறையான எண்ணத்தோடு வாழ,...

எல்லையற்ற கடவுளின் அன்பு

”தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்” என்கிற இந்த இறைவார்த்தை, கடவுள் எந்த அளவுக்கு இந்த உலகத்தை அன்பு செய்கிறார் என்பது நமக்குத் தெரியவருகிறது. கடவுள் யாரை அன்பு செய்தார்? இந்த உலகத்தை அன்பு செய்தார். உலகம் என்பது எதைக்குறிக்கிறது? ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிப்பிடவில்லை. ஒரு குறிப்பிட்ட மனிதரைக் குறிப்பிடவில்லை. மாறாக, ஒட்டுமொத்த மனிதகுலத்தை அது குறிப்பதாக இருக்கிறது. இந்த உலகத்தில் நல்லவர்களும் கெட்டவர்களும் இணைந்தே வாழ்கிறார்கள். கடவுள் நல்லவர்களை மட்டும் அன்பு செய்து, கெட்டவர்களை விலக்கிவைக்கவில்லை. அனைவரையும் அன்பு செய்கிறார். தன்னை நினைக்கிறவர்களை மட்டும் கடவுள் நினைக்கவில்லை. தன்னைப்பற்றிய அறியாதவர்கள், தன்னை ஒரு பொருட்டாக மதிக்காதவர்கள், தன்னை குறைகூறுகிறவர்கள் என அனைவரையும் கடவுள் அன்பு செய்கிறார். இதுதான் கடவுளின் பரந்துபட்ட அன்பு. இதுதான் முழுமையான அன்பு. இதுதான் நிலையான...