Category: இன்றைய சிந்தனை

இயேசுவோடு இருத்தல்

”ஊரோடு ஒத்து வாழ்” என்ற பழமொழியை நாம் கேட்டிருப்போம். இது இந்த உலகக் கண்ணோட்டத்தை நமக்கு அறிவிக்கக்கூடிய சொற்றொடராக இருக்கிறது. இந்த உலகப்போக்கு எப்படி இருக்கிறதோ, அதற்கேற்ப நாம் வாழ வேண்டும். விழுமியம், மனச்சான்று போன்றவைகளுக்கு அங்கு வேலை இல்லை. நீதி, நியாயத்திற்கா நிற்க வேண்டும் என்பதல்ல. பத்து பேர் அநியாயத்தை, நியாயம் என்று சொன்னால், அதற்கு நாம் துணை நிற்பதுதான், இந்த பழமொழியில் பொருள். இயேசுவின் வார்த்தைகளைப் பின்பற்றினால், நாம் ஊரிலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாகத்தான் இருப்போம். ஏனென்றால், இன்றைக்கு 99 விழுக்காடு மக்கள் ஊரோடு ஒத்துவாழ பழகிவிட்டார்கள். புதிதாக நாம், விழுமியங்களுக்கு ஆதரவாகப் போராடுகிறபோது, நாம் தனித்து விடப்படுவோம். மற்றவர்களிடமிருந்து விலக்கி வைக்கப்படுவோம். அப்படி இருக்கிறபோது, நாம் கவலைப்படுவதற்கு பதிலாக மகிழ்ச்சி அடைய வேண்டும். காரணம், நாம் இயேசுவின் அருகில் இருக்கிறோம். இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். உண்மையை எடுத்துரைத்தார். அவரை இந்த அதிகாரவர்க்கம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஆனால், அவர் கவலைப்படவில்லை....

வாழ்வு ஏற்படுத்தும் தாக்கம்

ஒரு மரத்தை நாம் நடுகிறோம்? எதற்காக? அதிலிருந்து பயன் பெறுவதற்காக, பலன் பெறுவதற்காக. எதை நாம் செய்தாலும், அதிலிருந்து பலன் எதிர்பார்க்கிறோம். இந்த உதாரணத்தைத்தான் நமது வாழ்விற்கு ஒப்பிட்டு இயேசு இன்றைய நற்செய்தியில் பேசுகிறார்? ”நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்”. இந்த இறைவார்த்தையில் இரண்டு அர்த்தங்களை நாம் பார்க்கலாம். 1. கனி தர வேண்டும். 2. அந்த கனி நிலைத்திருக்க வேண்டும். சீடர்களை இயேசு அழைத்தது இந்த இரண்டு காரணங்களுக்காகத்தான். சீடர்கள் அனைவரும் பலன் தர வேண்டும். சீடர்களின் வாழ்க்கை மற்றவர்களுக்கு பயன் உள்ளதாகவும், பலன் உள்ளதாகவும் இருக்க வேண்டும். அதாவது சீடர்கள் நற்செய்தி அறிவிப்பதற்காக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் நற்செய்தி மக்களுக்கு போய்ச் சேர வேண்டும். அந்த நற்செய்தி மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதேபோல, போதிக்கக்கூடிய சீடர்களின் வாழ்வும் மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த இரண்டு பலன்களையும் இயேசு சீடர்களிடம்...

மனிதரின் அழைப்பு

கடவுள் முன்னிலையில் நிற்பதற்கே நாம் தகுதியற்றவர்கள். அப்படியிருக்கக்கூடிய நமக்கு கடவுள் தகுதியைக்கொடுத்து, நம்மை தேர்ந்தெடுத்திருக்கிறார். எதற்காக நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்? நம்மைத் தேர்ந்தெடுத்தத்ற்கு ஏதாவது காரணம் உண்டா? நிச்சயம் உண்டு. கடவுள் நம்மை மகிழ்ச்சியாக இருப்பதற்காகத் தேர்ந்தெடுத்தார். கிறிஸ்தவ அழைப்பு என்பது மகிழ்ச்சியான வாழ்வுக்கான ஓர் அழைப்பு. மகிழ்ச்சி என்பது இந்த உலகம் தருகின்ற மகிழ்ச்சி அல்ல. மாறாக, கடவுள் கொடுக்கும் மகிழ்ச்சி. கடவுள் நம்மை ஒருவர் மற்றவரை அன்பு செய்வதற்காகவும் அழைத்திருக்கிறார். தந்தை மகனை அன்பு செய்வது போல, மகன் தந்தையை அன்பு செய்வது போல நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்ய வேண்டாம். நாம் அனைவரும் இந்த உலகத்திற்கு அன்பு செய்வதற்காகவே வந்திருக்கிறோம். மற்றவர்களோடு போட்டியிடுவதற்கு அல்ல, வாக்குவாதத்தில் ஈடுபட அல்ல, மாறாக, நாம் மற்றவர்களை அன்பு செய்வதற்காக பிறந்தவர்கள் என்பதை வாழ்ந்து காட்டுவதற்காகத்தான் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். அதை நாம் வாழ்ந்து காட்ட வேண்டும். ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம் என்றில்லாமல்,...

உண்மையான வாழ்வு

நானே உண்மையான திராட்சைச் செடி என்று இயேசு கூறுகிறார். “உண்மையான“ என்கிற வார்த்தை எதைக்குறிக்கிறது? அதனுடைய விவிலியப்பிண்ணனி என்ன? என்பதை இங்கு பார்க்கலாம். பழைய ஏற்பாட்டில் எப்போதெல்லாம், திராட்சைச்செடி பற்றிய செய்தி வந்திருக்கிறதோ, அப்போதெல்லாம் எதிர்மறையாகத்தான் பெரும்பாலும் சொல்லப்பட்டிருக்கிறது. திராட்சைச்செடி இஸ்ரயேலுக்கு ஒப்பிடப்பட்டாலும், இஸ்ரயேலின் தவறான அணுகுமுறைதான் இறைவாக்கினர்களால், திராட்சைச்செடியோடு ஒப்பிடப்படுகிறது. உதாரணமாக, இறைவாக்கினர் எரேமியா, இஸ்ரயேலை காட்டுத்திராட்சைக்கு ஒப்பிடுகிறார். அதிலிருந்து உண்பதற்கான பழங்களைப் பார்க்கமுடியவில்லை என்றும் கூறுகிறார். இதே கருத்தைத்தான் இறைவாக்கினர் எசாயாவும் முன்வைக்கிறார். ஆக, இங்கே திராட்சைச்செடி போலியானதாக சித்தரிக்கப்படுகிறது. இயேசு சொல்ல வருகிற செய்தி இதுதான்: இஸ்ரயேல் கடவுளின் உண்மையான திராட்சைச்செடியாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல. இஸ்ரயேலின் நடத்தையைப் பார்க்கிறபோது, அது உண்மையான திராட்சைச்செடியாக இல்லை. இயேசு தான் உண்மையான திராட்சைச்செடி. யூதர்கள் என்பதால் யாரும் மீட்பு பெற்றுவிட முடியாது. யூதராக இருந்தாலும், அதற்கேற்ற வாழ்வை வெளிப்படுத்த வேண்டும். யூத நம்பிக்கை வாழ்ந்து...

விண்ணக வாழ்வு

இறப்பு என்பது இந்த உலகத்தின் கொடுமையான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஒருவிதத்தில் நம்முடைய அனுபவத்தில் அது உண்மையும் கூட. ஒருவருடைய இழப்பு எந்த விதத்திலும் ஈடுசெய்ய முடியாத ஒன்று. இது இந்த உலக கண்ணோட்டம். அதே வேளையில், நாம் அடைய வேண்டிய இலக்கைப்பற்றிய தெளிவு நம்மிடம் இருந்தால், இந்த இழப்பின் ஆழம், ஓரளவுக்கு நம்மை பாதிக்காமல் இருக்கும் என்பதுதான் உண்மை. அதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தி வாயிலாக கற்றுத்தருகிறார். இந்த உலகம் நாம் அடைய வேண்டிய இலக்கு அல்ல. இந்த உலகத்தைத் தாண்டிய இலக்கு தான் நமது இலக்கு. ஆனால், இந்த உலகத்தை நாம் இலக்காக வைத்திருக்கிறோம். இயேசு இன்றைய நற்செய்தியில் தெளிவாகச் சொல்கிறார்: ”நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால், நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி அடைவீர்கள்”. ஆக, இயேசு சீடர்களைவிட்டு பிரிந்து செல்லக்கூடிய அனுபவம், அவர்களுக்கு மகிழ்ச்சியைத்தர வேண்டும் என்று, கூறுகிறார். தந்தையிடம் செல்வதுதான் அனைவரின் இலக்கு. தந்தையிடம் செல்வது...