Category: இன்றைய சிந்தனை

உண்மை கிறிஸ்தவர்களாக வாழ…

ஒரு மரம் அதன் கனியால் அறியப்படுகிறது என்பது, யூதர்கள், கிரேக்கர்கள் மற்றும் உரோமையர்கள் ஏற்றுக்கொண்ட பொது சிந்தனை. மத்திய கிழக்குப்பகுதிகளில் “வேரைப்போல அதன் கனி” என்கிற பழமொழி மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. இன்றைய நற்செய்தியில் இயேசு ”முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையோ பறிக்க முடியுமா?” என்று கேட்கிறார். முட்செடிகளுக்கும் திராட்சைப்பழங்களுக்கும் என்ன தொடர்பு? முட்பூண்டுகளுக்கும், அத்திப்பழங்களுக்கும் என்ன ஒற்றுமை? பாலஸ்தீனப்பகுதியில் ஒரு சில முட்செடிகள், சிறிய பழங்களைக் கொண்டிருந்தது. அது திராட்சைப் பழங்களைப் போன்ற தோற்றம் உடையதாக இருந்தது. அதேபோல முட்பூண்டுகளில் இருக்கும் பழங்கள், அத்திப்பழங்களை நினைவுபடுத்துவது போன்று இருந்தது. எவ்வளவுதான் அவைகள் தோற்றத்தில், திராட்சைப் பழங்களையும், அத்திப்பழங்களையும் நினைவுபடுத்துவது போல இருந்தாலும், அவைகள் திராட்சைப்பழங்களாகவோ, அத்திப்பழங்களாகவோ மாறிவிட முடியாது. அதேபோலத்தான் போலி இறைவாக்கினர்களும். அவர்கள் இறைவாக்கினர்களைப் போல உடையில் காணப்பட்டாலும், அவர்கள் இறைவாக்கினர்கள் ஆகிவிட முடியாது. எனவே, அவர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்க, இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார்....

இடுக்கமான வாயில் !

இயேசுவின் போதனைகள் எளிதானவை அல்ல. அவை நம்மை மலர்த் தோட்டத்திற்கு இட்டுச் செல்வதில்லை. மாறாக, சிலுவைப் பாதைக்கு அழைக்கின்றன. இறைவார்த்தையை இன்று ஒரு சிலர் அற்புதங்கள், அருங்குறிகள், குணமாக்குதல் நடத்தும் கருவியாக மட்டுமே பார்ப்பது வேதனையாக இருக்கிறது. இறைவார்த்தை நமக்கு நலமும், ஆறுதலும் தருவதுபோலவே, நம்மை அறைகூவலுக்கும், சவாலுக்கும் அழைக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இயேசுவின் போதனைகள் பலவும் கடினமானவை. எனவேதான், இடுக்கமான வாயில் வழியே நுழையப் பாடுபடுங்கள் என இன்றைய வாசகம் வழியாக நாம் நினைவூட்டப்படுகிறோம். ஆனால், இந்த இடுக்கமான வாயில் வழியே நமக்கு முன்னால், இயேசுவும் அவரைத் தொடர்ந்து ஏராளமான புனிதர்களும், மறைசாட்சிகளும் பயணம் செய்திருக்கிறார்கள் என்பது நமக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் தருகிறது. எனவே, நாமும் அவர்களைப் பின் தொடர்ந்து, சவால்கள் நிறைந்த, இடுக்கமான இறைவார்த்தைப் பாதையில் பயணம் செய்வோம். மன்றாடுவோம்: ஒப்பற்ற செல்வமான இயேசுவே, உமக்கு நன்றி கூறுகிறோம். உம்முடைய போதனைகள் கடினமாக இருக்கின்றன என்று நாங்கள்...

நிறைவோடு வாழ குறைகளைக் களைவோம்

கற்றுக்கொள்வதை வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற ஆர்வத்தைவிட, கற்றுக்கொள்வதை பல இடங்களில் சொல்லி பாராட்டு பெற வேண்டும் என்பதுதான், கற்றுக்கொள்கிறவர்களின் தாரக மந்திரமாக இருக்கிறது. பலவற்றை நாம் கற்றுக்கொள்கிறோம். பல கருத்துக்கள் நமது மனதுக்கு இதமாக இருக்கிறது. கருத்துக்களின் பொருளை நாம் வியந்து பார்க்கிறோம். ஆனால், அதனை வாழ்வாக்குவதற்கு எடுக்கிற முயற்சியைவிட, அதனை வெறுமனே பயன்படுத்த மட்டுமே நினைக்கிறோம். உலகத்தின் அடிப்படைப் பிரச்சனைகள் பலவற்றிற்கு இதுதான் காரணம். இன்றைய நற்செய்தி வாசகம், எப்படி நாம் கற்றுக்கொள்வதை வாழ்ந்தால், சிறப்பாக மகிழ்ச்சியாக நாமும் வாழ முடியும், மற்றவர்களையும் வாழ வைக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இன்றைக்கு வெறுமனே மற்றவர்களை குறைகூருவதும், தாங்கள் தான் நேர்மையாளர்கள் என்று காட்டிக்கொள்வதும், இத்தகைய பகட்டால் வரக்கூடிய நோயாக இருக்கிறது. ஒருவேளை, நாம் கற்றுக்கொள்வதை நமது வாழ்வில் வாழாவிட்டாலும், வாழ முயற்சியாவது எடுத்தால், நிச்சயம் நாம் மற்றவர்களைப் பற்றியோ, அவர்களின் குறைகளைப் பற்றியோ தவறாக பேச மாட்டோம். நமது...

சிறந்த வாழ்வு

நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்று அறிய விரும்புவது இயற்கை. மற்றவர்களுக்கு நான் எப்படி தெரிகிறேன்? என்று நாம் அனைவருமே தெரிய விரும்புகிறோம். இயேசு கடவுளின் மகனாக இருந்தபோதிலும், தன்னைப்பற்றி மற்றவர்கள் நினைப்பதை அறிய விரும்புகிறார். இதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். அவர் முழுமையாக மனிதராக வாழ்ந்தார் என்பதற்கு சான்றாகவும் இதனை எடுக்கலாம். எது எப்படி இருந்தாலும், இயேசு தனது வாழ்வை செம்மைப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இதனை கருதியிருக்கலாம் என்பது ஒரு முக்கியமான காரணமாக இருந்திருக்கலாம். இயேசு தன்னை மற்றவர்கள் யார் என நினைக்கிறார்கள்? என்று கேட்பதன் வாயிலாக தன்னை பெருமைபாராட்ட வேண்டும் என்று விரும்பவில்லை. அப்படி விரும்பியிருந்தால், கடவுள் கொடுத்த வல்லமையைப் பயன்படுத்தி அவர் வெகு எளிதாக தனது பெருமையை நிலைநாட்டியிருக்கலாம். மாறாக, தனது பாதையை, தான் வாழக்கூடிய வாழ்வை செம்மைப்படுத்த இந்த கேள்வியைக் கேட்கிறார். இது இயேசுவின் தாழ்ச்சியையும், சரியான வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற ஆவலையும்...

மீண்டு(ம்) எழுவோம்

இந்த உலகத்தில் கவலைகொள்ளாத மனிதர்கள் இல்லை. கவலைப்படுவதினால் நாம் ஒன்றும் செய்துவிட முடியாது, என அறியாதவர்களும் யாரும் இல்லை. ஆனாலும், ஒவ்வொருநாளும் கவலை என்கிற கரையான், நம்மை அரித்துக்கொண்டே இருக்கிறது. இத்தகைய சூழலில் இயேசுவின் வார்த்தைகள் மீண்டும் ஒருமுறை, நமது சோகமயமான வாழ்வை சிந்தித்துப் பார்த்து, மகிழ்ச்சியான வாழ்வு வாழ அழைப்புவிடுக்கிறது. அடிப்படையில் கவலை கொள்வது என்பது, கடவுள் நம்பிக்கையற்ற தன்மையைக் குறிக்கிறது. நாம் கடவுளை நம்புகிறோம். அவர் நம்மை கரம்பிடித்து வழிநடத்துகிறார் என்று விசுவசிக்கிறோம். அந்த விசுவாசத்தைத்தான் நாம் வாழ்ந்து கொண்டு, அறிக்கையிடுகிறோம். ஆனாலும், பல வேளைகளில் கவலை, அந்த நம்பிக்கையை, காட்டாற்று வெள்ளம் போல, அடித்துச்சென்று விடுகிறது. அதனை எப்படி எதிர்கொள்வது? விடாமுயற்சி. மீண்டும், மீண்டும் நாம் விழுந்தாலும், மீண்டும், மீண்டும் நாம் எழ வேண்டும். நமது முயற்சியை எக்காரணத்தைக்கொண்டும், எந்த காலத்திலும் விட்டுவிடக்கூடாது. இயேசு எவ்வாறு தனது கல்வாரி பயணத்தின்போது, கீழே விழுந்தாலும், மீண்டும், மீண்டும் எழுந்தாரோ,...