Category: இன்றைய சிந்தனை

துணிவும் நம்பிக்கையும்!

பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய ஒரு பெண்ணை இயேசு நலப்படுத்தும் நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம். இயேசு ஏன் அந்தப் பெண்ணிடம் “மகளே, துணிவோடிரு. உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று””“ என்றார்? காரணம், அந்தப் பெண் இயேசுவின் முன்னால் வர அஞ்சி, “அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்“. இயேசுவின் முன்னே வர நம்பிக்கையும், துணிவும் இல்லாத காரணத்தை இயேசு உணர்ந்து அவரை ஊக்குவிக்கும் வண்ணம் “துணிவோடிரு“ என்கிறார். அந்தப் பெண் தம்மைத் “தகுதியற்றவர்“ எனக் கருதியிருக்கலாம். ஆனால், இயேசு அவரது தயக்கத்தைப் போக்குகிறார். நாமும்கூட சில வேளைகளில் நம்பிக்கைக் குறைவினாலும், தயக்கத்தினாலும், பாவ உணர்வினாலும் இயேசுவின் முன் செல்லத் தயங்குகிறோம். நம் போன்றவர்களுக்குத்தான் எபிரேயர் திருமடல் பின்வரும் அறிவுரையை வழங்குகிறது: “நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்லர். மாறாக, எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர். எனினும், பாவம் செய்யாதவர்....

ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகள் !

எழுபத்திரண்டு சீடர்களை ஆண்டவர் இயேசு இருவர் இருவராக நற்செய்தி அறிவிக்க அனுப்புகின்ற நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம். அவர்களுக்கு அறிவுரை பகர்கின்ற பொழுது இயேசு கூறிய வார்த்தைகள்: புறப்பட்டுப் போங்கள். ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். இவை எச்சரிக்கை விடுக்கின்ற சொற்கள். இயேசுவின் சீடர்கள் ஆட்டுக்குட்டிகள் போன்றும், இந்த உலகின் மக்கள் ஓநாய்கள் போன்றும் இங்கே உருவகப்படுத்தப்பட்டுள்ளனர். உலகம் பல்வேறுவிதமான தீமைகளை, தந்திரங்களை, இருளின் படைக்கலங்களாகக் கொண்டிருக்கிறது. இயேசுவின் காலத்தில் இருந்தது போன்றுதான் இன்றைய உலகமும், இருளின் மக்களும் இருக்கின்றனர். ஆட்டுக்குட்டிகளைச் சுற்றி வளைத்துக் காயப்படுத்தும் ஓநாய்கள் போன்று இன்றைய ஊடகங்கள், வணிக மையங்கள், அநீத அமைப்புகள், ஏன் அரசுகளும்கூட அமைந்திருக்கின்றன. இவர்களின் மத்தியில்தான் சீடர்கள் நற்செய்தி அறிவிப்பவர்களாக, அமைதியை அருள்பவர்களாக, நோய்களைக் குணமாக்குபவர்களாகச் செயல்படவேண்டும். எனவே, விழிப்பாய் இருப்போம். இறையருள் வேண்டுவோம். மன்றாடுவோம்: அன்பே உருவான ஆண்டவரே, எங்களை நீர் உம் சீடர்களாக அழைத்து, அமைதியின் கருவிகளாகச் செயல்பட...

மகனே, துணிவோடிரு, உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன

இன்றைய நற்செய்தி வாசகம் (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-17)நோன்பைப் பற்றிப் பேசுகின்றது. இயேசு தன் சீடர்கள் நோன்பிருக்காததை நியாயப்படுத்திப் பேசுகிறார். அதே வேளையில், தேவையான நேரத்தில் அவர்களும் நோன்பிருப்பார்கள் என்று பதில் கூறி, அவர்களையும் தயாரிக்கின்றார். நோன்பு என்பது தேவை மற்றும் சூழலின் அடிப்படையில் செய்ய வேண்டிய ஒன்று என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார். இயேசுவே தன் வாழ்வில் அதை வாழ்ந்துகாட்டினார். தனது பணி வாழ்வின் தொடக்கத்தில் 40 நாள்கள் தொடர்ந்து நோன்பிருந்தார். தனது பணி வாழ்வின்போது உணவு உண்ணக்கூட நேரமில்லாத வேளைகள் வந்தபோது, அவர் நோன்பிருந்தார். அதே வேளையில் விருந்து உண்ண அழைப்புகள் வந்தபோது, அதை ஏற்று நன்கு உண்ணவும் செய்தார், உறவை வளர்த்தார். இயேசுவின் இந்த மனநிலையை புனித பவுலடியார் நன்கு விளக்குகிறார். எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும், வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப்...

அழைத்தலும், அறிவிப்பும் !

இன்று நற்செய்தியாளரும், திருத்தூதருமான புனித மத்தேயுவின் விழாவைக் கொண்டாடுகிறோம். அவருடைய அழைப்பையும், நற்செய்தி அறிவிப்பையும் இன்று நினைவுகூர்ந்து அவருக்காக இறைவனைப் போற்றுவோம். மத்தேயு சுங்கச் சாவடியில் வரி தண்டுபவராகப் பணியாற்றியவர். எனவே, பாவி என்று கருதப்பட்டவர். இருப்பினும், அவரையும் இயேசு தம் சீடருள் ஒருவராக அன்புடன் தேர்ந்துகொண்டார். நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் என்று அறிக்கையிட்டார். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட மத்தேயு, அழைப்பிற்குத் தகுதியுள்ளவராக வாழ்ந்தார். நற்செய்தியை வார்த்தையாலும், எழுத்தாலும் அறிவித்தார். இன்றும் அவர் எழுதிய நற்செய்தி நமக்கெல்லாம் ஊக்க மருந்தாகத் திகழ்கிறது. நமது அழைப்பும், அறிவிப்பும் பற்றிச் சிந்திப்போம். நாம் பாவிகளாய் இருந்தபோதே நம்மை அழைத்த இறைவனுக்கு நன்றி கூறுவோம். அழைப்பை ஏற்று நற்செய்தியாளர்களாய் வாழ்வோம். நமது வாழ்வே ஒரு நடமாடும் நற்செய்தி நூலாக அமையட்டும். நம்மையும், நமது பணியையும் பார்க்கிறவர்கள் இயேசுவின் மதிப்பீடுகளை நம்மிடமிருந்து கற்றுக்கொள்ளட்டும். இது நம்மேல் சுமத்தப்பட்ட கடமை என்று ஏற்றுக்கொள்வோமா? மன்றாடுவோம்: நற்செய்தியின்...

இறைவனின் மன்னிப்பு

எண்ணங்களுக்கும் நமது உடல் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உண்டு என்பது அனைவருமே ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை. நமது நினைவுகள் தான், நமது வாழ்வாக மாறுகிறது. இன்றைய நற்செய்தியில் வருகிற முடக்குவாதமுற்ற மனிதனின் வாழ்விலும், அவனுடைய குற்ற உணர்வு, அவனை இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது என்றால், அதுதான் உண்மை. யூதமக்களின் மனதில் பாவங்கள் தான், உடல் நோய்களுக்கு மூல காரணம் என்ற நம்பிக்கை இருந்தது. எனவே, உடல் நோயினால், குறிப்பாக, முடக்குவாத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைக்கு, பாவங்கள் தான் காரணம், என்று உறுதியாக நம்பினர். இன்றைய நற்செய்தியில் வரும், முடக்குவாதமுற்ற மனிதனுக்கு, தனது நிலைக்கு யார் காரணம்? என்பது தெரியாமல் இருந்திருக்காது. தனது பாவங்கள் தான், தன்னை இந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது என்பதை நிச்சயம் அவன் உணர்ந்திருப்பான். ஆனாலும், அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. தான் செய்த பாவத்திற்கு கடவுள் தண்டனை தந்திருக்கிறார். இதற்கு முடிவு கிடையாது, அதனை தான் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும், என்று தனது வாழ்வையே...