Category: இன்றைய சிந்தனை

A GOOD DAY’S WORK

“John had told Herod, ‘It is not right for you to live with your brother’s wife.’ ” –Mark 6:18 In today’s Gospel, St. John the Baptizer preaches the Good News. This means not just a pat on the back but the ultimate Good News of repentance, freedom, healing, and restoration through Jesus’ death and Resurrection. Our job is to build God’s kingdom on earth as it is in heaven (Mt 6:10). When we die, planet earth should be more in line with God’s order than when we were conceived. We should leave the earth better than we found it. We...

புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு

புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் இருந்து பார்ப்போமா… சந்தித்து சாதிப்போமா.. மாற்கு 6:17-29 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துதுகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்புமிக்கவர்களே! இன்று நாம் புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் பற்றி சிந்திக்கிறோம். ஐயோ பாடுகளா? என பாடுகளைப் பார்த்ததும் பயந்து ஒளிந்துக் கொள்ளும் மனிதர்கள் வாழும் உலகம் இது. இன்றைய திருவிழா பாடுகளை மகிழ்வோடு ஏற்ற புனித திருமுழுக்கு யோவானை சுட்டிக்காட்டுகிறது. அவருக்கு எதற்காக பாடுகள்? எதற்காக அச்சுறுத்தல்கள்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவர் நேர்மையோடும் தூய்மையோடும் இருந்தார். ஆகவே அவர் பாடுகளை சந்தித்தார். அதற்காகவே அவர் கொலை செய்யப்பட்டார். நாமும் அவரைப் போல இருந்து பாடுகளை சந்திப்பதே, கிறிஸ்துவுக்கு சாட்சியாவதே இந்த விழாவின் நோக்கமாகும். பொய்யிலிந்து...

பதவி உயர்வுக்காக காத்துக்கொண்டிருக்கிறீர்களா?

மத்தேயு 24:42-51 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துதுகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நம்முடைய நிலையில் அப்படியே இருக்க யாரும் விரும்புவதில்லை. எல்லாருக்கும் இருக்கும் நிலையிலிருந்து ஒரு முன்னேற்றம் வேண்டும் என்பது அனைவரின் ஆசை. இருக்கும் நிலையில், பணியில் ஒரு பதவி உயர்வு கிடைக்குமா என்பது நம் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற உதவியாக வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். பதவி உயர்வுக்காக இரண்டு பாடங்களை நாம் படிக்க வேண்டும். படித்து பயிற்சியாக்க வேண்டும் முதல் பாடம்: விழிப்பு முதல் பாடம் மிகவும் முக்கியமானது. விழிப்போடு இருப்பவர்கள் தான் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க முடியும். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது, நாம் இருக்கும் இடத்தில் என்ன நடக்கிறது, பணியிடத்தில் என்ன நடக்கிறது...

புனித பர்த்தலொமேயு திருவிழா

இதைவிட பெரியவற்றைக் காண்பீர்கள்… யோவான் 1:45-51 இறையேசுவில் இனியவா்களே! தூய பர்த்தலொமேயு திருவிழா திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் மேலும் நீயே ஆசியாக விளங்குவாய் போன்ற ஆசீர்வாதமான வார்த்தைகளைக் கேட்கும்போது நம் அகம் குளிர்கிறது. உடல்முழுவதும் ஊக்கமருந்து செலுத்தப்பட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதே போன்று இன்றைய நற்செய்தியில் வருகின்ற வார்த்தையும் நம்மை புல்லரிக்க வைக்கின்றது. அந்த வார்த்தை, “இதைவிட பெரியவற்றைக் காண்பீர்” இது புனித பர்த்தலமேயுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதமான வார்த்தை. இந்த ஆசீர்வாதமான வார்த்தைகளை நாம் பெறலாமா? கண்டிப்பாக பெறலாம். அதற்காக தூய பர்த்திலொமேயு எடுத்த இரண்டு முயற்சிகளை நாமும் எடுக்க வேண்டியதிருக்கிறது. முயற்சி 1: அவரோடு அமர்ந்தார் ஒரு சீடன் தன் குருவோடு அமர்ந்து அவர்...

கடவுள் தரும் மீட்பு

யார் தான் மீட்புப் பெற முடியும்? என்பதுதான் இயேசுவிடம் கேட்கப்பட்ட கேள்வி. இந்த உலகத்தில் ஆன்மீகச்சிந்தனையோடு வாழும் அனைவருமே, தங்களது இலக்காகக் கொண்டிருப்பது, மீட்பு. அனைத்து மதங்களும் இந்த மீட்பைப் பற்றித்தான் வெளிப்படையாக பேசுகின்றன. மதங்களின் கோட்பாடுகளும், அனைவரும் மீட்பு பெற வேண்டும் என்கிற ஒற்றை இலக்கில் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கின்றன. மீட்பு பெறுவது என்பது, நாம் வாழும் உலகில் எளிதானது அல்ல. மீட்பு என்பது நிலைவாழ்வைக் குறிக்கக்கூடிய சொல்லாக இருக்கிறது. இந்த உலகம் நிலையானது அல்ல என்பதுதான், பெரும்பாலான மதங்களின் கருத்தாக இருக்கிறது. அந்த நிலையான வாழ்வு நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. அந்த நிலையான வாழ்வை, நாம் பெறுவதற்கு தகுதி பெற வேண்டும். அதற்கு நாம் கடுமையாக, கடினமாக உழைக்க வேண்டும். பல தடைகளைத் தாண்ட வேண்டும். சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அதுதான் நமது இலட்சியமாக இருக்க வேண்டும். இன்றைக்கு வாழும் மக்கள், சவால்களை சந்திப்பதற்கோ, தோல்விகளை வெற்றிப்படிகளாக மாற்றுவதற்கோ தயாராக...