Category: இன்றைய சிந்தனை

இறையாட்சியைப் பற்றிக்கொள்வோம்

இயேசு வாழ்ந்த காலத்தில் பணத்தை சேமித்து வைப்பதற்கு வங்கிகள் இல்லாமல் இல்லை. ஆனால், சாதாரண மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்றார்போல வங்கிகள் இல்லை. செல்வந்தர்கள் மட்டுமே இவற்றைப் பயன்படுத்த முடியும். சாதாரண மக்கள் நிலத்தில் தாங்கள் சேர்த்து வைத்ததைப் புதைத்து வைப்பது வழக்கமாக இருந்தது. இதில் அவர்களுக்கு வேறு ஒரு நன்மையும் இருந்தது. பாலஸ்தீனப்பகுதி அடிக்கடி போரினால் தாக்கப்படும் பகுதியாக இருந்தது. பகைநாட்டவர் வரும்போது தங்களின் நிலங்களை விட்டுவிட்டு மக்கள் ஓடினாலும், திரும்பிவந்து, தங்கள் நிலத்தில் புதைத்து வைத்திருக்கிற பணத்தை பாதுகாப்பாக எடுக்க முடியும். எனவே, சாதாரண எளிய மக்கள், நிலத்தில் பணத்தைப் புதைத்து வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இயேசு இந்த நற்செய்தியின் மூலம் நமக்குக் கற்றுத்தரும் செய்தி இறையாட்சிக்கு நம்மை தகுதிபடுத்திக்கொள்ள நம்மையே இழக்க முன்வர வேண்டும். இந்த உலகத்தில் நாம் அடைய வேண்டிய இலக்கு இறையாட்சி. அதுதான் நமது முதன்மையான நோக்கம். ஆனால் இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் எதை...

நல்ல சிந்தனைகள்

வாழ்க்கை என்பது கடவுள் நமக்கு கொடுத்திருக்கிற நிலம். நிலம் பலனைக் கொடுக்க வேண்டும் என்று தான், நாம் எதிர்பார்ப்போம். அதேபோல, கடவுளும் நம்மிடமிருந்து பலனை எதிர்பார்க்கிறார். இந்த நிலத்தில் பலர் வந்து, தங்களது கருத்துக்களை, சிந்தனைகளை நாம் வாழக்கூடிய சமுதாயத்திலிருந்து விதைக்கிறார்கள். அந்த சிந்தனைகள் நல்ல சிந்தனைகளாகவும் இருக்கலாம். கெட்ட சிந்தனைகளாகவும் இருக்கலாம். ஆனால், இரண்டுபட்ட சிந்தனைகளும் நமது உள்ளத்தில் விதைக்கப்படுகிறது. நமக்குள்ளாக விதைக்கப்படுகிற விதைகளில், களைகளும் காணப்படுகின்றன. அந்த களைகளை நாம் அடையாளம் கண்டுகொண்டு, அவற்றை கவனமாகப் பிடுங்கி எறிய வேண்டும். நமக்குள்ளாக விதைக்கப்படுகிற விதைகளை நாம் வடிகட்ட வேண்டும். நல்ல சிந்தனைகளையும், கெட்ட சிந்தனைகளையும் தரம் பிரிக்க வேண்டும். நல்ல சிந்தனைகளை நமது உள்ளத்தில் இன்னும் ஆழமாக வேரூன்றும் வண்ணம், தொடர்ந்து சிந்தித்து தெளிவு பெற வேண்டும். கெட்ட சிந்தனைகளை நம்முடைய சிந்தனைகளின் நினைவிலிருந்து முற்றிலுமாக அகற்ற வேண்டும். வாழ்வின் வெற்றி பெறுவதற்கான வழி, நமது சிந்தனைகளை நாம்...

இறைவார்த்தையின் மகத்துவம்

பாலஸ்தீனத்தில் வாழ்ந்த விவசாயிகள் விதைகளை விதைப்பதற்கு இரண்டு முறைகளைப் பயன்படுத்தினர். இந்த விதைக்கும் முறையைப் பயன்படுத்தி, இயேசு மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், அழகான ஒரு உவமையை நமக்குத் தருகிறார். நிலத்தில் இறங்கி விதைகளைத்தூவுவது முதல்முறை. ஒரு கழுதையின் மீது விதைப்பையை வைத்து, இரண்டு பக்கங்களிலும் சிறிய துளையிட்டு, கழுதையை நிலம் முழுவதும் நடக்கச்செய்வது இரண்டாம் முறை. ஆனால், இரண்டாம் முறை வெகு அரிதாக நடைமுறையில் இருந்தது. முதல் முறைதான் விதைக்கும் முறையாக பரவலாக இருந்தது. இன்றைய நற்செய்திப் பகுதியில் விதைப்பவர் விதைகளைத் தூவுகிறார். இயேசு மக்களுக்குப் போதித்துக்கொண்டிருக்கின்ற போது, இந்த நிகழ்வு நடந்திருக்க வேண்டும். அந்த நிகழ்வை அப்படியே தனது போதனையாக மாற்றுகிறார். எளிய மக்களின் வாழ்வுமுறையிலிருந்து போதிப்பது, இயேசுவின் தனிச்சிறப்பு. இயேசுவின் போதனை இரண்டு அடித்தளத்தை உள்ளடக்கியது. முதலாவது இறைவார்த்தையைக் கேட்பவர்களுக்கானது. இரண்டாவது இறைவார்த்தையைப் போதிப்பவர்களுக்கானது. இரண்டு பேருமே இறைவார்த்தையின் மீது ஆர்வம் உள்ளவர்களாக, நம்பிக்கை உள்ளவர்களாக, செயல்படுத்துகிறவர்களாக இருக்க...

இயேசுவுடனான நெருக்கம்

இயேசுவோடு நெருங்கியிருப்பது, இணைந்திருப்பது எந்த அளவுக்கு, நமது வாழ்வை பக்குவப்படுத்தக்கூடிய அனுபவமாக இருக்கிறது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தான், இன்றைய நற்செய்தி வாசகம். சீடர்கள் சாதாரணமானவர்கள். அறிவிலோ, திறமையிலோ சிறந்தவர்கள் அல்ல. சாதாரணமான பாமரரர்கள். அவர்கள் பல இடங்களுக்குச் சென்று மிகத்திறமையாகப் போதிக்கிறார்கள். பல சவால்களையும், சங்கடங்களையும் துணிவோடு எதிர்கொள்கிறார்கள். இந்த அளவுக்கு அவர்களைப் பக்குவப்படுத்தியது எது? என்று பார்க்கிறபோது, இயேசுவோடு இருந்த நெருக்கம் தான் அது. வாழ்க்கையில் நாம் சந்திக்கக்கூடிய சவால்கள் எளிதானது அல்ல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான வாழ்க்கைச்சூழல். அவர்கள் சந்திக்கும் சவால்களும் தனித்துவம் வாய்ந்தவை. யாரும், மற்றவருடைய பிரச்சனைகளுக்கு அவரவர் அனுபவத்தைக்கொண்டு தீர்வு காண முடியாது. குறைந்தபட்ச ஆலோசனைகளை மட்டுமே சொல்ல முடியும். ஆனால், எந்த பிரச்சனைகள் வந்தாலும், நாம் இயேசுவோடு நெருங்கியிருக்கிறபோது, கண்டிப்பாக நம்மால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். வாழ்வை மகிழ்வோடு நகர்த்த முடியும். நமது வாழ்வில் இயேசுவோடு இணைந்திருப்பதற்கு முயற்சி எடுப்போம். நமது வாழ்வின்...

உன்னத இறைவார்த்தை

இன்றைய நற்செய்திப்பகுதியில் வருகிற விதைப்பவர் உவமை பாலஸ்தீனப்பகுதியில் வாழ்ந்த அனைத்து மக்களுக்கும் தெரிந்த ஒரு பிண்ணனியைக் கொண்டதாக இருக்கிறது. பொதுவாக பாலஸ்தீனத்தில் விதைகளை விவசாயிகள் இரண்டு விதமாக விதைத்தனர். நிலத்தில் இறங்கி விதைகளைத்தூவுவது முதல் முறை. ஆனால், சற்று சோம்பேறித்தனமாக என்றால், ஒரு கழுதையின் மீது விதைப்பையை வைத்து, இரண்டு பக்கங்களிலும் சிறிய துளையிட்டு, கழுதையை நிலம் முழுவதும் நடக்கச்செய்வது இரண்டாம் முறை. ஆனால், இரண்டாம் முறை வெகு அரிதாக இருந்தது. இயேசுவின் இந்தப்போதனை இரண்டு அடித்தளத்தை உள்ளடக்கியது. முதலாவது, இறைவார்த்தையைக் கேட்பவர்களுக்கு. இறைவார்த்தையை கேட்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை எவை என்பது பற்றியதாகும். இறைவார்த்தை நமக்கு தரப்படுவது மிகப்பெரிய கொடையாகும். அது கிடைப்பதற்கு அரிய பொக்கிஷமாகும். அதை நாம் கேட்டு, உணர்ந்து நமது வாழ்வாக்க வேண்டும். இரண்டாவது இறைவார்த்தையைப் போதிப்பவர்களுக்கு உள்ளதாகும். இறைவார்த்தையைப் போதிப்பதும் சாதாரண, எளிய பணியல்ல. அது ஒரு கொடையாக இருந்தாலும், மிகப்பெரிய பொறுப்பாகும். அந்தப் பொறுப்பை செயல்படுத்துவதற்கு...