கொடுப்பதை இறையாசீராக எண்ணுவோம்
யூதர்களுக்கு என்று ஒரே ஒரு ஆலயம் தான். அதுதான் யெருசலேம் தேவாலயம். மற்றநாட்களில் செபிப்பதற்கும், இறைவார்த்தையைக் கேட்பதற்கும் அவர்கள் செபக்கூடங்களைப் பயன்படுத்தினர். யெருசலேம் ஆலயத்தை நிர்வகிப்பதற்கு ஏராளமான பணம் தேவைப்பட்டது. ஏனெனில், ஒவ்வொருநாளும் காலையிலும், மாலையிலும் இளம்செம்மறி ஆடு பலியிடப்பட வேண்டும். பலிப்பொருளுக்கு ஏராளமான மாவும், எண்ணெயும் தேவைப்பட்டது. சாம்பிராணியும், குருக்களுக்கான ஆடம்பர உடைக்கும் செலவு அதிகமாக இருந்தது. இவற்றிற்கெல்லாம் பணம் வேண்டும். இவற்றிற்கெல்லாம் பணம் வேண்டும். எனவேதான், விடுதலைப்பயணம் 30: 13 கூறுவது போல, 20 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் ஒவ்வொருவரும், வருடத்திற்கு ஒருமுறை 2 திராக்மா, கோவில் வரியாக செலுத்த வேண்டும். இது இரண்டு நாள் கூலிக்கு இணையான கிரேக்க வெள்ளி நாணயம். ஒவ்வொரு ஆண்டும், ஆதர் மாதத்தில்(நமக்கு மார்ச் மாதம்), பாலஸ்தீன நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், கோவில் கட்டுவதற்கென நினைவூட்டும் அறிவிப்பு சொல்லப்படும். 15 வது நாளில் கோவில் வரி கட்டுவதற்கென ஒவ்வொரு ஊரிலும் அலுவலகங்கள் திறக்கப்படும்....