Category: இன்றைய சிந்தனை

இழப்பே மகிழ்வு !

மானிட வாழ்வின் மிகப் பெரிய மறைபொருள்களில் ஒன்று இழப்பு. யாரும் எதையும் இழக்க விரும்புவதில்லை. ஆனால், சிலவற்றை சில நேரங்களில் இழக்கும்போது, அந்த இழப்புக்கு கைம்மாறாக நாம் பெறும் இன்பம் இழந்ததைவிட பன்மடங்கு மதிப்பு மிக்கது, மேலானது என்பதை அனுபவத்தின் மூலமாகத்தான் அறிய முடியும். ஞானிகள், அறிஞர்கள், மாமனிதர்கள் இந்த மறைபொருளை, வாழ்வின் இரகசியத்தை அறிந்திருக்கின்றனர். எனவே, இழப்பதற்கு அஞ்சாமல் இழக்க முன் வந்தனர், சில வேளைகளில் தம் உயிரையும்கூட! இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் இந்த ஞானத்தை நமக்குக் கற்றுத் தருகிறார். தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டு தம்மையே அழித்துக்கொள்கிற எவரும் வாழ்வடைவர் என்கிறார். இயேசுவின் பொருட்டுக் கடந்த 21 நுhற்றாண்டுகளில் ஆயிரக்கணக்கானவர்கள் தம் உயிரை இழக்க முன்வந்துள்ளனர். நிலைவாழ்வைப் பெற்றுக்கொண்டுள்ளனர். நாம் உயிரை இழக்க வேண்டாம். சிறிய இன்பங்களை, சிறிய ஆதாயங்களை, நேரத்தை, ஓய்வை, பொழுதுபோக்கை இழக்க முன்வருவோம். மன்றாடுவோம்;...

வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறை

ஒரு தாலந்து என்பது வெள்ளி நாணய அடிப்படையில் ஒரு தொழிலாளியின் 15 வருட கூலிக்கு சமம். முதல் இரண்டு நபரும் தலைவர் கொடுத்த தாலந்தை வைத்து இன்னும் அதிகமாக சம்பாதிக்க முயற்சி எடுக்கிறார்கள். தலைவர் அந்த முயற்சியை பாராட்டுகிறார். ஒருவேளை அவர்கள் அதில் நஷ்டம் அடைந்திருந்தாலும், தலைவர் அவர்களின் முயற்சியை நிச்சயமாகப்பாராட்டியிருப்பார். தலைவர் கோபப்படுவது மூன்றாவது ஊழியரை. அதற்கு காரணம் அவரின் முயற்சியின்மை, சோம்பேறித்தனம். கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வு என்னும் கொடையைத் தந்திருக்கிறார். இந்த வாழ்வில் நமக்கென்று குறைகள் இருக்கலாம், நமக்கென்று பலவீனங்கள் இருக்கலாம். ஆனால், அந்த வாழ்வை எந்த அளவுக்கு முயற்சி எடுத்து நாமும் பயன்பெற்று, மற்றவர்களின் வாழ்விலும் ஒளியேற்றுகிறோம் என்பதுதான் கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது. நான் குறையுள்ளவன், எத்தனைமுறை முயன்றாலும், நான் வெற்றி பெற மாட்டேன் என்கிற முயற்சியின்மையை தலைவர் வெறுக்க மட்டும் செய்யவில்லை. அவனுக்கு தண்டனையும் கொடுக்கிறார். கடவுள் நமக்கு கொடுத்திருக்கிற கொடை மூலமாக எவ்வளவோ...

வாழ்வின் முக்கிய தருணங்கள்

ஒரு சில தருணங்கள் வாழ்வில் முக்கியமானவை, திருப்பங்களை ஏற்படுத்தக்கூடியவை. அந்த தருணங்களை இழந்துவிட்டால், அது மீண்டும் கிடைக்காது. நமது வாழ்வில் நாம் உயர்வடைய கொடுக்கப்பட்ட வாய்ப்பாகக் கூட அது இருந்திருக்கலாம். அந்த வாய்ப்பை இழந்ததால், நமது வாழ்க்கை துன்பங்களோடு முடிந்துவிட்ட ஒன்றாகக்கூட மாறலாம். எனவே, வாழ்வைப் பற்றிய அக்கறை, உயர வேண்டும் என்கிற எண்ணம், எப்போதும் நமது சிந்தனைகளை கூர்மையாக வைத்திருக்கக்கூடிய உணர்வு நமக்கு இருப்பதற்கு இன்றைய வாசகம் அழைப்புவிடுக்கிறது. மனிதர்களில் இரண்டுவிதமானவர்கள் இருப்பதை இந்த உவமை எடுத்துக்காட்டுகிறது. கிடைக்கிற சிறிய வாய்ப்பையும் பயன்படுத்தி, வாழ்வில் முன்னேறிக்கொண்டிருக்கிறவர்கள். பெரிதாக வாய்ப்பு கிடைத்தாலும் வீணடிக்கிறவர்கள். இரண்டுவிதமான மணமகளின் தோழியர் இதற்கு நல்ல எடுத்துக்காட்டாய் இருக்கிறார்கள். மணமகன் வருகிறபோது, அவர்கள் தயாராக இருக்க வேண்டும், எண்ணெய் குறைவில்லாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும், விழிப்பாக இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாதது அல்ல. நிச்சயம் தெரியும். நிச்சயம் மணமகன் வந்தே தீருவார். ஆனால், விரைவில்...

வாழ்க்கையைப் பற்றிய தெளிவு

இந்த உலகத்தில் நடக்கும் மரணங்களை இயற்கை மரணம், எதிர்பாராத மரணம், தற்கொலை மரணம் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். மரணம் எப்படி வந்தாலும், நமக்கு அது பயங்கரமான அனுபவத்தைத் தருகிறது. நன்றாக வாழ்ந்து, வயதாகி நேரக்கூடிய மரணமே நமக்கு கசப்பான அனுபவத்தைத் தருகிறபோது, மற்ற வகையான மரணங்களை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒவ்வொரு மரணமும், நாம் எந்த வேளையிலும் தயாராக இருக்க வேண்டும் என்ற செய்தியைத் தந்தாலும், மனித மனம் அந்த செய்தியை உள்வாங்குவது கிடையாது. வெகு விரைவாகவே, அதனை மறந்துவிடும். இந்த விழிப்புணர்வு மரணத்தைப் பற்றி நாம் பயப்படுவதற்காக அல்ல, மாறாக, நமது நிலையை நாம் எப்போதும் உணர வேண்டும் என்பதற்காகவே என்று, இன்றைய நற்செய்தி வாசகம் கூறுகிறது. வாழ்வைப் பற்றிய விழிப்புணர்வு, புரிதல், தெளிவு மக்களிடையே காண்பது அரிதிலும் அரிதாகவே காணப்படுகிறது. எதற்காக வாழ்கிறோம்? என்கிற சிந்தனையே அற்றவர்களாகத்தான், பலபேர் இருக்கிறோம். இந்த தெளிவு இருந்தால், நாம்...

அகத்தைத் தூய்மைபடுத்துவோம்

எண்ணிக்கை 19: 16 ல் நாம் பார்க்கிறோம்: இறந்தவர்களையோ, கல்லறையையோ தொடுகிறவன் தீட்டுப்பட்டவனாயிருப்பான், என்று சொல்லப்பட்டிருக்கிறது. பாலஸ்தீனப்பகுதியில் பாஸ்கா விழாவின்போது, சாலையோரம் முழுவதும் திருப்பயணிகள் வெள்ளம் திரண்டிருக்கும். நாட்டின் பல பகுதிகளிலிருந்து யெருசலேம் நோக்கி தங்கள் பயணத்தை மக்கள் தொடர்வார்கள். அப்படி அவர்கள் பயணிக்கிறபோது, கல்லறைகளைத் தெரியாமல் தொட்டுவிட்டால், தீட்டாகிவிடுவார்கள். அவர்களது பயணம் தடைபடும். எனவே, ஆதர் மாதத்தில் கல்லறைகள் அனைத்தும் வெள்ளையடிக்கப்படும். இதைப்பார்ப்போர் எச்சரிக்கையோடு விலகிச்செல்வதற்கு இந்த வெள்ளை நிற அடையாளம் உதவியது. கல்லறைகள் வெளியே பார்ப்பதற்கு அழகாக, வெள்ளையாக, பளபளப்பாக இருந்தாலும், கல்லறைக்கு உள்ளே அழுகிய உடல்கள் தான் இருக்கும். நம்மைத் தீட்டுப்படுத்துவதாகத்தான் இருக்கும். இதுபோலத்தான் பரிசேயர்களுடைய வாழ்வும் என்று, இந்த வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளோடு இயேசு ஒப்பீடு செய்கிறார். பரிசேயர்கள் வெளியே தங்களை நல்லவர்களாக, சட்டங்களைக் கடைப்பிடிப்பவர்களாக, மதிப்பீடுகள் உள்ளவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டாலும், அவர்களுடைய உள்ளமோ மதிப்பீடுகள் இல்லாத உள்ளமாக உள்ளது. அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு, சுயநலம், அகங்காரம்,...