பணிவாழ்வு
இன்றைய நற்செய்தியிலே (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-6), இயேசு கிறிஸ்து தனது சீடர்களை பணிவாழ்விற்கு தயாரிப்பாக, அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள அனுப்புகிறார். இயேசு அவர்களை அனுப்புகிறபோது, பயணத்திற்காக எதையும் எடுத்துச்செல்ல வேண்டாம் என்று சொல்கிறார். எதற்காக பயணத்திற்காக எதையும் எடுத்துச்செல்ல வேண்டாம் என்று இயேசு சொல்கிறார்? ஒரு வழிப்பயணத்தில் நமக்கு பல தேவைகள் நிச்சயம் இருக்கும். அந்த தேவைகளை நிறைவேற்றுகின்ற வகையில் சென்றால், அந்த பணியை இன்னும் அதிக ஆர்வத்தோடு, நேர்த்தியோடு செய்து முடிக்கலாம். அப்படியிருக்கிறபோது, இயேசு ஏன் பொருள் இல்லாத பயணத்தை ஊக்குவிக்கிறார். இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்ல முடியும். முதலாவது, பணிவாழ்வில் தன்னை இணைத்துக்கொள்கிற ஒவ்வொருவரும், கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை வைக்க வேண்டும். செய்வது நாமாக இருந்தாலும், நம் வழியாகச் செய்து முடிப்பவர், தந்தையாகிய கடவுள். நாம் வெறும் ஊழியர்கள். அவ்வளவுதான். நமக்கே கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை இல்லையென்றால், நாம் எதைப்பற்றி மக்களிடையே போதிக்கப்போகிறோம்? நமது அனுபவமே...