Category: இன்றைய சிந்தனை

இறையாட்சியின் சவால்கள்

”திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள் வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்” என்று, 12 வது இறைவார்த்தைச் சொல்கிறது. இதே வார்த்தையின் பொருள் லூக்கா 16: 16 ல், வெளிப்படுகிறது. ”திருச்சட்டமும் இறைவாக்கினர்களும் யோவான் காலம் வரையிலும்தான். அதுமுதல் இறையாட்சி பற்றிய நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. யாவரும் இறையாட்சிக்குட்பட நெருக்கியடித்துக்கொண்டு வருகிறார்கள்”. இதனுடைய பொருள் என்ன? இயேசு இதன் வழியாக சொல்லவிரும்புகிற கருத்து என்ன? விண்ணரசு எப்போதுமே வன்முறையைச் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறது. இங்கே விண்ணரசு என்று சொல்லப்படுவது, அதை அறிவிக்கிறவர்கள். திருமுழுக்கு யோவான் வந்தார். ஆண்டவருடைய அரசை அறிவித்தார். அவர் கொல்லப்பட்டார். யாரெல்லாம் ஆண்டவருடைய அரசை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவா்கள் அனைவருக்கும், இதுதான் கதியாகும். விண்ணரசை எதிர்க்கிறவர்கள் எப்போதுமே மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கிறார்கள். ஆனால், அதையும் துணிவோடு சந்திக்கிறவர்களால் தான், இன்றைக்கும் விண்ணரசு அழியாமல் உறுதியாக நிற்கிறது. நாம் அனைவருமே இறையாட்சியின் தூண்கள். நாம்...

இயேசுவே நமது வாழ்வின் அருமருந்து

கடவுளை பலவிதமான வழிகளில் களைப்புறாமல் தொடர்ந்து தேடிக்கொண்டிருப்பவர்களுக்கும், வாழ்வில் எப்போதும் நன்மையே செய்ய வேண்டும் என்று எண்ணி, அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கும் இயேசுவின் வார்த்தைகள் ஆறுதலாக அமைகிறது. கிரேக்கர்கள், ”கடவுளைக்காண்பது அரிது. கடவுளைக்கண்டாலும் அதனை மற்றவர்களுக்கு விளக்கிக்கூறுவது அரிதிலும் அரிது” என்று சொல்வார்கள். யோபு புத்தகத்திலே சோப்பார், யோபுவிடம் கேட்பதும் இதுதான், ”கடவுளின் ஆழ்ந்த உண்மைகளை நீர் அறிய முடியுமா?” (யோபு 11: 7). அப்படியென்றால், கடவுளைக்காணவே முடியாதா? நன்மை செய்கிறவர்களுக்கு சோதனை மேல் சோதனைதான் கிடைக்குமா? அவர்கள் ஆறுதல் கூட பெற முடியாதா? என்கிற கேள்விகள் நமக்குள்ளாக எழலாம். அதற்கு பதில்தான் இயேசுவின் அமுதமொழிகள். கடவுளைப்பற்றிய தேடல் இயேசுவில் நிறைவடைகிறது. வாழ்வில் நன்மையே செய்ய வேண்டும் என்று எண்ணுகிறவர்களுக்கு நிறைவு இயேசுவில் கிடைக்கிறது. இயேசு சொல்கிறார், ”பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”. இந்த வார்த்தைகள் கடவுளைப்பற்றிய தேடல் உள்ளவர்களுக்கும், வாழ்வில் நன்மையே...

நமது பணி யாருக்காக?

ஒரு அருட்பணியாளரின் வாழ்க்கையில் பங்கில் பணிபுரிவது என்பது சவாலான ஒன்றாக இருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எல்லா பங்குகளிலும் பொதுவான ஒரு தோற்றம் இருக்கும். அது என்ன தோற்றம்? பங்கில் இரண்டு வகையான மக்கள் இருப்பார்கள். முதல் வகையான மக்கள் அருட்பணியாளரின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறவர்கள். வழிபாட்டில் ஆர்வமுடன் பங்கெடுக்கிறவர்கள். இரண்டாவது வகையான மக்கள் மிகச்சிறிய விழுக்காடு உள்ளவர்கள். ஆலயத்தின் வழிபாடுகளில் நாட்டம் கிடையாது. ஆலயத்தின் பக்கமே திரும்பிப்பார்க்காதவர்கள். ஆனால், பங்கில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் தங்களை முதன்மைப்படுத்திக் கொண்டு இவர்களைப் பகைத்தால், பங்கில் அருட்பணியாளர் பணிபுரிய முடியாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு தங்களை வலிமையாகக் காட்டிக்கொள்கிறவர்கள். அருட்பணியாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறவர்கள். இவர்கள் செய்வது அநீதி என்று தெரிந்தாலும், மற்ற பெரும்பான்மையினர் இவர்களை எதிர்த்து நிற்பதில்லை. ஆனால், மறைமுகமாக அருட்பணியாளர்களைப் பார்த்துப் பரிதாபப்படுகிறவர்கள். இது எல்லா பங்கிலும் காணப்படக்கூடிய பொதுவான தோற்றமாக இருக்கிறது. இப்போது நம்மிடம் எழக்கூடிய கேள்வி: இவர்களுள்...

பிணி தீர்ப்பதற்கான வல்லமை !

இயேசு போதித்துக்கொண்டிருந்தபொழுது முடக்குவாதமுற்ற ஒருவரை சிலர் கொண்டு வருகிறார்கள். பிணி தீர்ப்பதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார் என்று இயேசுவைப் பற்றிச் சொல்கிறார் நற்செய்தியாளர் லூக்கா. பிணிகளைத் தீர்ப்பதற்கு ஒரு வல்லமை தேவை. அதைக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே நோய்களைக் குணப்படுத்த முடியும். இயேசுவிடம் அந்த வல்லமை இருந்தது. காரணம், அவர் தூய ஆவியால் அருள்பொழிவு செய்யப்பட்டிருந்தார். தந்தை இறைவனின் அன்புக்கு உரியவராக இருந்தார். அந்த வல்லமையைக் கொண்டே இயேசு பேய்களை ஓட்டினார். நோய்களைக் குணப்படுத்தினார். நம்மிடம் அந்த வல்லமை இருக்கிறதா? நோய்களைப் போக்கும், தீமைகளை விரட்டும், துயரங்களைப் போக்கி மகிழ்ச்சியைத் தரும் வல்லமை நம்மிடம் உண்டா? இருந்தால்தான், நாம் கிறித்தவர்கள். இல்லாவிட்டால், நாம் வலிமையற்ற பெயர்க் கிறித்தவர்கள் மட்டுமே. கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதவர் கிறிஸ்தவரே அல்லர். எனவே, நாமும் தூய ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டு, சான்றுகளாய் வாழ்வோம். மன்றாடுவோம்: தூய ஆவியின் வல்லமையைக் கொண்டவரான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். பிணி போக்கும்...

இயேசுவின் வருகைக்காக தயாரிப்போம்

மாற்கு நற்செய்தியாளர் தனது நற்செய்தியை இயேசுவின் பணிவாழ்விலிருந்து தொடங்குகிறார். அவரது குழந்தைப்பருவ நிகழ்ச்சிகள் தரப்படவில்லை. திருமுழுக்கு யோவான் பாலைவனத்தில் இருந்த நிகழ்விலிருந்தும் தொடங்கவில்லை. மாறாக, இறைவாக்கினர்களின் கனவு வார்த்தைகளோடு தனது நற்செய்தியைத்தொடங்குகிறார். மாற்கு நற்செய்தியாளர் இறைவாக்கினரின் வார்த்தையோடு தொடங்குவதின் பொருள் என்ன? என்று பார்ப்போம். ”இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன். அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது. ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்” என்கிற இந்த இறைவார்த்தை மலாக்கி 3: 1 ல் காணப்படுகிற வார்த்தைகள். மலாக்கி இறைவாக்கினர் காலத்தில், குருக்கள் தங்கள் கடமையில் தவறினார்கள். பலிப்பொருட்கள் இரண்டாம் தரமானதாகவும், குறைபாடுள்ளதாகவும் இருந்தது.ஆலயப்பணி அவர்களுக்கு களைப்பை தருவதாகவும், சுமையாகவும் இருந்தது. எனவே, தூதர் வந்து, இந்த வழிபாட்டு முறைகளின் குறைபாடுகளை அகற்றி, மீட்பர் வருவதற்காக வழியை ஆயத்தம் செய்வார் என்று, இறைவாக்குரைக்கப்பட்டது. அதாவது, மீட்பரின் வருகை தகுந்த தயாரிப்போடு இருக்க வேண்டும் என்ற செய்தியை நாம்...