இயேசுவின் கடைசிப்பயணம்
இயேசு தனது கடைசிப்பயணத்தை மேற்கொள்வதற்காக, யெருசலேமை நோக்கி தனது சீடர்களுடன் சென்று கொண்டிருக்கிறார். தனது கடைசிப்பயணம் இதுதான் என்பது, இயேசுவுக்குத் தெளிவாகத்தெரிகிறது. ஏனென்றால், இயேசு இந்த பயணத்தை பலமுறை தவிர்த்திருக்கிறார். சிலசமங்களில் வடக்கிற்கும், செசரியா, பிலிப்பு பகுதிக்கும், கலிலேயாவிற்குமாகச்சென்று .கலிலேயப்பயணத்தைத் தவிர்த்த இயேசு, இப்போது, யெருசலேம் செல்வதற்கு ஆயத்தமாகிறார். தனது கடைசி பயணத்திற்கு தயாராக இருப்பதை, அவரது பேச்சின் உறுதி நமக்கு அறிவுறுத்துகிறது. இயேசு தனது சீடர்களுக்கு முன்னால் சென்று கொண்டிருப்பதாக நற்செய்தியாளர் எழுதுகிறார். எதற்காக அவர் சீடர்களோடு செல்லவில்லை. சீடர்களுக்கு முன்னால் தனிமையாக ஏன் செல்கிறார்? சீடர்களும் அவரிடத்தில் கேள்வி கேட்கவோ, நெருங்கவோ தயங்குகிறார்கள். இயேசுவின் தனிமைக்குக் காரணம், அவர் தனது பாடுகளை ஏற்றுக்கொண்டதற்காக அடையாளம். தனது பாடுகளை எண்ணிப்பார்ப்பதற்கான தருணம். சிலசமயங்களில் நமக்கு தனிமை தேவை. நம்மை உறுதிப்படுத்திக்கொள்ள, வரக்கூடிய துன்பங்களை ஏற்றுக்கொள்ள தனிமை தேவை. ஒருவேளை, சீடர்களின் உடனிருப்பு, இயேசுவின் கடைசிப்பயணத்திற்கு தடைக்கல்லாக இருந்திருக்கலாம். எனவேதான், தனது...