Category: இன்றைய சிந்தனை

பாவம் வளர வளர அவமானமும் வளரும்

அத்தொழிலாளர்களை ஒழித்துவிட்டுத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் ஒப்படைப்பார் (மாற்12:9) மனிதர்களாகிய நாம் பாவம் செய்வது இயல்பு. பாவத்திலிருந்து திரும்புவது இறை இயல்பு. தந்தையே நான் உமக்கும், எனக்கும் என் அயலாருக்கும் எதிராக பாவம் செய்தேன். இனி இந்த பாவத்தை செய்யமாட்டேன் என்ற வாக்குறுதி தான் வானளவு நம்மை உயர்த்தும். நம்மை பரிசோதித்து பார்த்து பாதையை திருத்தாத பயணம் நம்மை பாதாளம் வரை தாழ்த்தும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் திராட்சைத் தோட்டத் தொழிலாளர்கள் பாவத்திற்கு மேல் பாவங்களை தங்கள் மேல் குவித்து அவமானங்களை அள்ளுகின்றனர். முதல் பாவம் : ஒரு பணியாளரை நையப்புடைத்தது இரண்டாம் பாவம் : வோறொரு பணியாளரை தலையில் அடித்து அவமதித்தது மூன்றாம் பாவம் : மற்றொரு பணியாளரை கொலை செய்தது நான்காம் பாவாம் : சிலரை நையப்புடைத்தது, சிலரை கொன்றது ஐந்தாம் பாவம் : திராட்சைத் தோட்ட உரிமையாளரின் அன்பு மகனை கொன்றது எத்தனை பாவங்கள் பாருங்கள்....

வாக்குறுதிகள்

விடுதலைப்பயணம் 24: 3 – 8 இஸ்ரயேல் மக்களோடு கடவுள் மோசே வழியாக பேசுகிறார். தன்னுடைய வார்த்தைகளை மோசேக்கு அறிவித்து, அவர் வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு அறிவிக்கிறார். அவருடைய வார்த்தைகளைக் கேட்ட இஸ்ரயேல் தலைவர்கள் மற்றும் மக்கள் அனைவரும், ஒரே குரலாக, ”ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்” என்று பதில்மொழி தருகின்றனர். இஸ்ரயேல் மக்கள் கடவுள் மீது வைத்திருந்த பக்தி, நம்பிக்கை இந்த பகுதியில் வெளிப்படுவதை நாம் பார்க்கிறோம். அவர்கள் வெறும் வார்த்தைகளால் மட்டும் அதை சொல்லவில்லை. மாறாக, பலிபீடங்களை எழுப்பி, அதில் கடவுளுக்கு பலி செலுத்தி, தங்களது வாக்குறுதிகளைக் கொடுக்கின்றனர். பலி செலுத்துவது என்பது வாக்குறுதியின் அடையாளமாக இருக்கிறது. பொதுவாக, பலியிடுதலில் விலங்குகள் பலியிடப்படுகின்றன. அப்படி பலியிடப்படுகிறபோது, வாக்குறுதி கொடுக்கிறவர்கள் அந்த பலிபீடத்தைச் சுற்றி வருகிறார்கள். எதற்காக? அதனுடைய பொருள் இதுதான்: நாம் இருவரும் இங்கே வாக்குறுதி கொடுக்கிறோம். ஒருவேளை, யாராவது வாக்குறுதியை மீறினால், இந்த விலங்குகள்...

தூக்கி எறிபவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்

மாற்கு 11: 27-33 ஒரு அருமையான பொன்வரி இப்படி ஆரம்பமாகிறது, ”தூக்கி எறிபவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். ஏனெனில் அவர்களே உங்களை முளைக்கவைப்பர்கள்”. நம்முடைய மனது நம்மை தூக்கி எறிபவர்களை தூரே வைக்க வேண்டும் என துடியாய்த் துடிக்கிறது. அவர்களை விரோதியாய் பார்க்கிறது. பகைமையை போகும் இடமெல்லாம் வளர்க்கிறது. இதனால் பல பகைவர்கள் நம் வாழ்க்கையின் வட்டத்திற்குள் வருகிறார்கள். இதனால் வாழ்க்கையின் வசந்தக்காற்று நம் பக்கம் வீசாமலேயே போகிறது. இப்படி வாழ்க்கையை களிக்கிற நமக்கு இன்றைய நற்செய்தி வாசகத்தில் கனிவான பாடத்தை புகட்டுகிறார் நம் ஆண்டவர் இயேசு. தலைமைக்குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் இயேசுவை தங்கள் அதிகாரத்தால் விரோதியாக பார்த்தனர். பல தொல்லைகளை கொடுத்துக்கொண்டே இருந்தனர். விரோதியாய் பார்த்து வாழ்கையை அனுபவிக்காமலேயே இந்த உலகத்தை விட்டு காணாமல் போய்விட்டனர். ஆனால் இயேசு விரோதியாய் வந்தவர்களை தன் கனிவால் உருக வைத்தார். தன் அன்புக் கலந்த அதிகாரத்தால் தன் ஊழியர் ஆக்கினார். தூக்கி...

ஜெபிக்காத நாட்கள் வீணான நாட்கள்

மாற்கு 11: 11-26 வாழ்க்கையில் எல்லா மனிதர்களும் எல்லா நாட்களையும் பலன்தரும் வகையில் வாழ்வதில்லை. பல நாட்கள் வீணான நாட்களாகவே கடந்து போகின்றன. வீணான நாட்கள் அனைத்தும் குற்றயுணர்வை நமக்குள்ளே ஏற்படுத்தி நம்மை குத்துகின்றன. வீணான நாட்கள் அனைத்தும் நம்மை பார்த்து முறைத்துப் பாத்ததுண்டு. ஏன் இப்படி வீணாக்கிவிட்டாய் என்று. எல்லா நாட்களையும் பலன் கொடுக்கும் வகையில் வாழ வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. அந்த நம் ஆசை இன்றைய நற்செய்தி வாசகத்திலே அடங்கிப்போகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம் ஆண்டவர் இயேசு ”நீங்கள் இறைவனிம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள், நீங்கள் கேட்டபடியே நடக்கும்(மத்11:24) என்கிறார். நாம் ஒவ்வொரு நாளும் இறைவனை நோக்கி ஜெபித்து விட்டு நாளைத் தொடங்குகிற போது அந்த நாள் பலன்தரும் நாளாகவும் குற்றயுணா்வை போக்குகிற நாளாகவும் நம் குறிக்கோளை விரட்டி பிடிக்கிற நாளாகவும் அமைகிறது. ஆசையை ஜெபிப்பதில் காட்டுவோம். ஆர்வத்தை...

ஆண்டவரே என் ஆற்றல்

எசாயா 12: 2 – 3, 4, 5 – 6 ”ஆண்டவரே என் ஆற்றல்” ஒவ்வொருநாளும் நாம் உணவு உண்கிறோம். அந்த உணவு தான் நாம் இயங்குவதற்கு, செயல்களைச் செய்வதற்கு ஆற்றலைத்தருகிறது. ஒரு வாகனம் இயங்க வேண்டுமென்றால், அதில் இருக்கிற எரிபொருள் எரிக்கப்பட்டு, அதிலிருந்து பெறப்படும் ஆற்றலால் வாகனம் இயங்குகிறது. ஆக, ஆற்றல் என்பது நம்மை இயக்குவதாக அமைகிறது. அது உணவாக இருக்கலாம், எரிபொருளாக இருக்கலாம். எல்லாமே இயக்கத்திற்கான அடிப்படைக் காரணமாக இருக்கிறது. இங்கே, ஆண்டவர் ஆசிரியரின் ஆற்றலாக இருக்கிறார் என்பதையும், ஆண்டவர் நம் ஆற்றலாக இருக்க வேண்டும் என்கிற செய்தியும் சொல்லப்படுகிறது. ஆண்டவர் எப்படி ஒருவரின் ஆற்றலாக இருக்க முடியும்? இந்த உலகத்தில் அநீதி ஏராளமாக நடக்கிறது. அந்த அநீதியை பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்டு, சமரசம் செய்யக்கூடியவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலர் அதனை எதிர்க்கிறார்கள். தங்களால் இயன்ற மட்டும் எதிர்க்கிறார்கள். அதனால் பலவிதமான எதிர்ப்பையும் நம்பாதிக்கிறார்கள். ஒரு...