கறைபடாத வாழ்வு வாழ்வோம்
தன் சகோதரரையோ, சகோதரியையோ ”அறிவிலியே” என்பவர் எரிநரகத்திற்கு ஆளாவார் என்று இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்கிறார். எரிநரகம் என்பதன் பொருள் என்ன? யூதர்களுக்கு மத்தியில் இந்த வார்த்தை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. இது யெருசலேமின் தென்மேற்கில் இருக்கக்கூடிய, பென் இன்னோம் பள்ளத்தாக்கைக் குறிக்கிறது. இங்குதான் ஆகாஸ் மன்னன் பாகால் தெய்வங்களுக்கு வார்ப்புச்சிலைகளைச் செய்தான். இந்த பள்ளத்தாக்கில், அந்த தெய்வங்களுக்கு தூபம் காட்டினான். ஆண்டவர் முன்னிலையில் அருவருக்கத்தக்கவகையில், தனது புதல்வர்களையே தீயிலிட்டு எரித்தான். (2குறிப்பேடு 28: 1 – 4) ஆகாசிற்கு பிறகு வந்த, யோசியா அரசர் இதை அடியோடு அழித்தார். பாகால் தெய்வமான மோலேக்கு சிலைக்கு யாரும் தங்கள் புதல்வர்களை பலியிடாதவாறு, அதை அப்புறப்படுத்தினான். அனைத்தையும் தகர்த்தெறிந்தார். பீடங்களை உடைத்து, மனித எலும்புகளால் நிரப்பினார். இவ்வாறாக, அந்த இடமே மாசுபட்ட இடமாக, மனிதர்கள் வாழ்வதற்கே தகுதியற்ற இடமாக, அருவருக்கத்தக்க இடமாக மாற்றப்பட்டது. (2 அரசர்கள் 23: 10 முதல்). இந்த இடம் அணையாத...