Category: இன்றைய சிந்தனை

ஆண்டவரின் தோற்றமாற்ற விழா

மாற்றத்ததை ரசித்து ருசித்து பார்க்கலாமே! மாற்கு 9:2-10 இன்று நாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உருமாற்ற விழாவினைக் கொண்டாடுகின்றோம். இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு வித்தியாசமான நிகழ்வு இது. தம் சீடர்களில் மிகவும் நெருக்கமான மூவரை மட்டும் அழைத்துக்கொண்டு மலையேறும் இயேசு அங்கே செபிக்கிறார். செபிக்கும்போதே அவரது தோற்றம் மாறுகிறது. அவரது மனித சாயல் மறைந்து, இறைச் சாயல் வெளிப்படுகிறது. அவரது ஆடை வெண்ணிறத்தில் ஜொலிக்கிறது. விண்ணகக் காட்சியாக அது மாறுகிறது. பழைய ஏற்பாட்டின் இரு பெரும் தூண்களான மோசேயும், எலியாவும் தோன்றி அவருடன் உரையாடுகிறார்கள். ஒரு மேகம் வந்து அவர்களைச் சூழ்கிறது. “இவரே என் மைந்தர்” என்று ஒரு குரல் விண்ணிலிருந்து ஒலிக்கிறது. இதுதான் இயேசுவின் உருமாற்ற நிகழ்வு. உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா? என்பது கோல்கேட் விளம்பரம். உங்க வாழ்க்கையில மாற்றம் இருக்கா? இது இன்றைய நற்செய்தி வாசகத்தின் விளம்பரம். பழைய வாழ்க்கையில் படுத்து சுகம் கண்டுக்கொண்டிருக்கிற...

ஆன்மீகத்தேடல்

இந்த உலகத்திலே வாழக்கூடிய மனிதர்களுக்கு இரண்டு வகையான பசி இருக்கிறது. முதலாவதாக, உடல் பசி. இரண்டாவதாக ஆன்மீகப்பசி. உணவு உடல் பசியைப் போக்கிவிடும். ஆனால், அதே உணவால் ஆன்மீகப்பசியைப் போக்க முடியாது. அதனால் தான், உடல் பசியைப்போக்க எவ்வளவு ஆடம்பரம் இருந்தாலும், பணத்தில் கொழித்தாலும், ஆன்மீகப்பசியைப் போக்க முடியாததாக, பலபேருக்கு இருக்கிறது. அவர்களால் பணத்தால் ஆன்மீகப்பசியைப் போக்க முடியாது. கி.பி. 60 ம் ஆண்டில், உரோமை சமுதாயம் ஆடம்பரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. ஏராளமான விருந்துகளும், கேளிக்கைகளும் நிறைந்த சமுதாயமாக அது காணப்பட்டது. அதற்காக பெருந்தொகையை மக்கள் செலவிட்டனர். அவர்கள் செல்வத்தில் கொழித்ததால், பணத்தை வாரி இறைத்தனர். இத்தகையப்பிண்ணனியில், மக்களும் உணவின் மீது அதிகம் நாட்டம் கொண்டவர்களாக இருந்தனர். அத்தகைய மனப்போக்கை இயேசு கண்டிக்கிறார். உண்மையின் மீது, நேர்மையின் மீது, இறையரசை இந்த மண்ணில் கொண்டு வர பசி உள்ளவர்களாக வாழ வேண்டும் என்று, அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்தார். இன்றைய...

கனிவோடு கண்டிப்பது கடமையே!

மத்தேயு 14:1-12 நம்மோடு வாழும் ஒருசிலர் தவறான வழிகளில் நடக்கும் போது அவர்களுக்கு ஆழமான ஆன்மீக அறிவுரை வழங்கி அவர்களை ஆண்டவரின் அருகில் கொண்டு வர உதவி செய்ய வேண்டியது அவர் அருகில் இருக்கும் நம் கடமை. அறிவுரை சொல்லும் போது ஒருவேளை கேட்காமல் போனால் கனிவோடும் மிகுந்த அக்கறையோடும் கண்டிப்பது மிகவும் அவசியம். இன்றைய நற்செய்தி வாசகம் திருமுழுக்கு யோவானின் கனிவாக கண்டிப்பை நம் கவனத்திற்கு கொண்டு வருகிறது. திருமுழுக்கு யோவான் தன் சகோதரனின் மனைவியை ஏரோது வைத்திருப்பது முறையல்ல என அவனை கனிவோடு கண்டிக்கிறார். திருமுழுக்கு யோவானின் இந்த கண்டிப்பு இரண்டு அவசியமான காரணங்களுக்காக.1) ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுங்கை அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், வருங்கால தலைமுறையினருக்கு அது ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதற்காகவும் 2) தவறு என்றால் அது யார் செய்தாலும் அது தவறுதான் என்பதை அழுத்தமாக அறிவிக்கவும் இந்த இரண்டு காரணங்களை அவர்...

உங்கள் உற்காசத்தால் உங்கள் ஊர்க்காரர் உயரட்டும்!

மத்தேயு 13:54-58 ஒரே ஊரில் வாழும் மனிதர்கள் தங்கள் ஊர்க்காரரின் வளர்ச்சியில் மகிழ்ச்சி அடைவதில்லை. பெரும்பாலும் பொறாமை தான் பொங்கி வருகிறது. இப்படி இருப்பதனால் ஒருவருக்கொருவர் வளர்ச்சியை காண்பதில்லை. அதோடு மட்டுமல்லாமல் அந்த மொத்த ஊரிலும் வளர்ச்சி என்பது இல்லாமல் போகிறது. பல நல்ல காரியங்கள் நடக்காமலே போகிறது. அதற்கு மிக சிறந்த உதாரணம் தான் இன்றைய நற்செய்தி வாசகம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து மிகச்சிறந்த திறமையுடன் மறைநூலை எடுத்துரைத்த போது அவர்கள் தன் சொந்த ஊார்க்காரன் தானே என்று அலட்சியமாக இருந்ததால் இயேசு தன்னுடைய ஆற்றலை அங்கு வெளிப்படுத்த ஆசைப்படவில்லை. அதனால் இயேசு கிறஸ்துவின் திறமை அங்கே வெளிப்படுத்தப்படவில்லை. ஆகவே அந்த ஊரின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலே தடை ஏற்படுகிறது. நம் ஊார்க்காரன் என்ற உணர்வு நமக்குள் மேலோங்க வேண்டும். ஒருவருக்கொருவர் அன்பு கொள்ள வேண்டும். ஒருவரையொருவர் மனதார பாராட்ட வேண்டும். மிக அதிகமாகவே உற்சாகப்படுத்த வேண்டும். அதற்காகவே நாம் ஒரே...

அழுகிய மீனா? அழகான மீனா?

மத்தேயு 13:47-53 இந்த அவனியில் பிறந்த அனைவரும் கடவுள் கொடுத்த மிக உயா்ந்த பரிசான வாழ்க்கையை வைத்து மிக சிறப்பான பணிகளை செய்ய வேண்டும் என்பதே நம் கடவுளின் எதிர்பார்ப்பு. மிகவும் உயரே பறப்பதற்கான அனைத்து ஆற்றலும், அருளும், ஆசீர்வாதமும் எல்லாம் வல்ல கடவுள் ஒவ்வொரு மாந்தருக்கும் நிறைவாகவே பொழிந்திருக்கிறார். ஆகவே கடவுளைப் போலவே நாம் சக்திமிக்கவர்களாக மாற முடியும். நடக்கும் இடமெல்லாம் நன்மையை செய்ய முடியும். அதிசயங்களை அனுதினமும் செய்ய முடியும். ஆனால் நடைமுயைில் இவைகள் ஏன் நடப்பதில்லை? ஏன் நம்மால் மாறமுடியவில்லை? மேலே நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வதாய் வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். காரணம் இரண்டு வகையான மீன்களாக மனிதர்கள் வலம் வருகிறார்கள். ஒன்று அழுகிய மீன்கள் மற்றொன்ற அழகான மீன்கள். அழுகிய மீன்கள் தங்கள் வாழ்வின் பொறுப்பை மறந்து கடமைகளை செய்யாமல் தண்ணீர் போகின்ற போக்கிலே அவர்களும் செல்வதால் அதாவது உலகின் போக்கிலே அவர்கள்...