Category: இன்றைய சிந்தனை

கடிகாரத்தைப் பார்! ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை

லூக்கா 12:54-59 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். “ஒரு பவுண்ட் தேனை சேகரிக்க, தேனீ இருபது லட்சம் மலர்களைத் தேடிச்செல்கிறது”. வாழ்க்கையை நேசிப்பவர்கள், நேரத்தை நிச்சயமாக நேசிப்பார்கள். ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் ஆனது. நேரத்தின் மதிப்பு தெரியுமா? அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும். இன்றைய நற்செய்தி வாசகம் காலத்தின் மதிப்பை நமக்குக் கற்றுத் தருகிறது. ஆகவே கேளுங்க.. கேளுங்க நற்செய்தி வாசகத்தை நல்லா கேளுங்க. மாறுங்க இன்றே மாறுங்க.. காலத்தை சரியாக பயன்படுத்தும்போது இரண்டு சாகசங்களை நாம் செய்ய முடிகிறது. 1. சமாதானம் செய்ய முடிகிறது எதிரியோடு சண்டை என்றால் சரியாக நேரத்தை பயன்படுத்தும் போது அங்கே சமாதானம் அறுவடை செய்யப்படுகிறது. எல்லா பகைவர்களையும் இந்த சரியான...

அக்டோபர் மாத அதிர்ச்சி…

லூக்கா 12:49-53 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மண்ணுலகில் தீமூட்டவே வந்தேன் என்ற வார்த்தையோடு இன்றைய நற்செய்தி வாசகம் ஆரம்பமாகிறது். ஆரம்பமே அதிரடி அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த வார்த்தைதான் அக்டோபர் மாத்திற்கான அதிரடி அதிர்ச்சியாகும். தீமூட்ட இந்த வார்த்தை எதிர்மறையானது அல்ல. மாறாக நேர்மறையானதும் நம்மை நேராக்க கூடியதும் இந்த வார்த்தைதான். எப்படி? இந்த நெருப்பு அல்லது தீ என்ற வார்த்தை இயேசுவைக் குறிக்கிறது. இயேசு என்ற நெருப்பிடம் நாம் நெருங்கி வரும்போது பல வல்ல செயல்கள் நடக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமான இரண்டு. 1. எரிக்கிறது நெருப்பின் மிக முக்கியமான பணி எரி்ப்பது. அசுத்தத்தை எரித்து அழகை அளிப்பது. இயேசு என்ற நெருப்பு நமக்குள் இருக்கும்...

எதையும் குறைக்காதே! மிகுதியாக்கு…

லூக்கா 12:39-48 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதா்களாகிய நமக்கு கடவுள் எல்லாவற்றையும் கொடுக்கும்போது கணக்குப் பார்க்கவில்லை. அள்ளி அள்ளி மிகுதியாக தந்தார். அவரிடமிருந்து அறிவு, ஆற்றல், திறமை, பணம், செல்வம் அனைத்தையும் மிகுதியாகப் பெற்ற நாம் பிறருக்கு வழங்கும்போது குறைப்பது ஏன்? மிகுதியாக்குங்கள் என்ற மிக முக்கியமான அறிவிப்போடு இன்று வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். நாம் நம்மை மிகுதியாக்க வேண்டும். நாம் கஞ்சத்தனமாக செயல்படாமல் கொடுப்பதில், நம்மை செலவழிப்பதில் செல்வந்தர்களாக செயல்பட வேண்டும். அதற்காக இரண்டு சிந்தனைகளை நம் மனதில் நிறுத்துவது சாலச் சிறந்தது. 1. எதுவும் வராது நாம் பிறரோடு நம்முடன் இருப்பவைகளை பகிராமல் இருக்கும் போது ஒரு கருத்தை மிகவும் ஆழமாக...

வருமுன் காத்துவிட்டீர்களா? தூங்கிவிட்டீர்களா?

லூக்கா 12:35-38 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். வருமுன் காப்பது சிறந்தது என்பார்கள். வாழ்க்கை என்னும் தேர்வுக்காக தங்களை தினமும் விழிப்போடு தயார் செய்பவர்கள் ஒருசிலரே. அவர்களால் மட்டுமே வாழ்க்கையை மிக அழகாக கொண்டு போக முடியும். ஆனால் பலர் இந்த தேர்வில் தோல்வியையே சந்திக்கிறார்கள். இப்படி தோல்வியைச் சந்தித்து துவண்டு போயிருக்கிறவர்களை தூக்கி விடவே இன்றைய நாள் நற்செய்தி வாசகம் வருகிறது. இரண்டு செயல்களை செய்ய சொல்கிறது. 1. வெறி நான் விழிப்பாக இருந்து என்னுடைய பங்களிப்பை என்னைச் சூழ்ந்து இருக்கின்றவர்களுக்கு கொடுப்பேன் என்ற வெறி கண்டிப்பாக நமக்கு வேண்டும். இந்த வெறி நமக்குள்ளே ரிங்டோனாக இருபத்து நான்கு மணிநேரமும் ஒலிக்க வேண்டும். அந்த ஒலி...

பேராசையை சுட்டு பொசுக்குங்கள்…

லூக்கா 12:13-21 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். வாழ்வில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருக்கும். ஆனால், அந்த ஆசைகள் பேராசையாக மாறும் போது தான் பிரச்னைகளும் சேர்ந்து வருகின்றன. அத்தகைய பேராசைகளை வேரறுக்க வேண்டும் என, நமக்கு உணர்த்தும் நாளே தித்திப்பான திங்கள்கிழமை. எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள் என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். பேராசை பொல்லாதது அந்த பொல்லாததை எப்படி சுட்டு பொசுக்க வேண்டும் என்பதை நாம் இரண்டு வழிகளில் தெரிந்துக்கொள்ள வேண்டும். 1. சிறிய வழி பேராசை பெரும்பாலும் நிறைய பொருட்களை குவிக்க வேண்டும், நிறைய சொத்துக்களை குவிக்க வேண்டும். பணக்காரர்களாக மாற வேண்டும் என்பதில் உள்ளது. அப்படிப்பட்ட நம்முடைய எண்ணம் தவறானது...