பாடுகளின் வழி மாட்சி
தொ.நூ 15:5-12, 17-18, பிலி 3: 17-4:1 லூக் 9: 28-36 கடந்த ஞாயிறன்று இயேசுவின் பாலைவன அனுபவத்திற்கு நம்மை அழைத்து சென்ற அதே லூக்கா நற்செய்தியாளர் இந்த வாரம் நம்மை ஆண்டவரின் மலை அனுபவத்திற்கு நம்மை அழைத்து செல்கிறார். மலை என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது அமைதி, இயற்கை எழில் கொஞ்சும் சூழல், குளுகுளுவென்ற காலசூழ்நிலை, இவையனைத்தையும் தவிர விவிலிய பின்னனியில் மலைக்கும் இறைவனுக்குமிடையே நிறையதொடர்பு இருப்பதை நம்மால் காணமுடிகிறது. இறை-மனித சந்திப்பு நடக்கின்ற இடமாக பல இடங்களில் இதை உணர முடிகிறது. எ.கா:- ஆபிரகாம் கடவுளின் குரலை மோரியா மலையில் அவரின் மகனை பலியிட முயற்சிக்கும்போது கேட்கிறார். சீனாய் மலையில் மோசே கடவுளிடமிருந்து பத்துக்கட்டளைகளை வாங்குகிறார். எலியா கார்மல் மலையில் பாகால் இறைவாக்கினர்கள் முன்னிலையில் இறைவனின் வல்லமையை வெளிப்படுத்துகின்றார். ஆனால் இன்றைய நற்செய்தியில் மலையின் பெயரினைக் குறிப்பிடாமல், ஓர் உயர்ந்த இடத்திற்கு தன் சீடர்களோடு செல்கிறார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது....