Category: இன்றைய சிந்தனை

தாழ்த்தினால் உணர்வாய்

யோவான் 8: 21-30 கடவுளுக்கும் மோசேவுக்குமான உரையாடலில் மோசேவின் கேள்விக்கு கடவுளின் பதில் கிடைக்கிறது. காண்க வி.ப 3:13-14, “கடவுள் மோசேயை நோக்கி, இருக்கின்றவராக இருக்கின்றவர் நாமே” என்றார். இன்றைய நற்செய்தியில் அவர்களின் கேள்விக்கு இயேசு ‘இருக்கிறவர் நாமே’ என்ற பதிலினைக் கொடுக்கின்றார். கடவுளின் வார்த்தையை மோசே முழுவதுமாக புரிந்து கொண்டாரா? என்பது தெரியவில்லை, ஆனால் அவரின் வார்த்தை அடிமைத்தனத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க உந்தி தள்ளியது. அவரும் தன்னிடம் பேசிய அக்குரலினை நம்பி ஏற்றுக் கொண்டார். ஆனால் இன்றைய நற்செய்தியில் ஆண்டவரின் குரலினை மட்டும் அவர்கள் கேட்கவில்லை, மாறாக, அவரையும் அவரின் ஒவ்வொரு வல்ல செயல்களையும் தன் கண்களால் பார்த்தும் உணர்ந்தும் கொண்டவர்கள,; அவரை நம்ப தயங்கி, ‘இருக்கின்றவராக இருக்கிறவர் நானே’ என்பதினை இன்னும் எளிதாக்கி ‘நானே’ என்று ஏழுமுறை எடுத்துக்காட்டோடு பேசியவரின் (நேற்றைய சிந்தனையைப் பார்க்கவும்) வார்த்தைகள் இவர்களின் அதிமேதாவித்தனத்துக்கு புரியவில்லை. புரிந்தாலும் தன்னோடு பார்த்து பழகியவர்கள் என்பதால் அவர்களின்...

இயேசுவைப் பின்தொடர்வோம்

இயேசு தன்னைப் பின்தொடர்வதைப் பற்றி இன்றைய நற்செய்தியிலே பேசுகிறார். “பின் தொடர்தல்“ என்கிற வார்த்தைக்கான கிரேக்க வார்த்தை “அகோலேதின்“ (Akoluthein). இந்த கிரேக்க வார்த்தைக்கு ஐந்து அர்த்தங்கள் தரப்படுகிறது. 1. ஒரு போர்வீரன் தனது தளபதியைப் பின்தொடர்வது. தளபதி எங்கே சென்றாலும், என்ன செய்யச் சொன்னாலும் அவரையும், அவரது கட்டளையையும் பின்தொடர்வது. 2. ஓர் அடிமை தனது தலைவனைப் பின்தொடர்வது. அடிமைக்கு உரிமையில்லை. தலைவனைப் பின்தொடர வேண்டும். அதுதான் அவனது கடமை. 3. ஒரு ஞானியின் அறிவுரையைப் பின்பற்றுவது. நமது வாழ்வில் பல பிரச்சனைகள் வருகிறபோது, மூத்தவர்களிடத்தில் ஆலோசனைக்காகச் செல்கிறோம். அவர்களது அனுபவத்தில் கொடுக்கும் ஆலோசனைகளை ஏற்று நடந்து, அதனை பின்பற்றுகிறோம். 4. நாட்டின் சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கக்கூடிய நிலை. ஒவ்வொரு நாட்டிலும் கொடுக்கப்பட்டிருக்கிற சட்டங்களை, மதித்து அதற்கேற்ப, அதனை அடியொற்றி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளுதல். 5. ஆசிரியரின் அறிவுரையை ஏற்று நடப்பது. நமக்கு அறிவுபுகட்டுபவர் ஆசான். அவர்...

இயேசுவின் இரக்கம்

இயேசு தனது போதனையில் நோயாளிகளுக்காக, பாவிகளுக்காக தான் வந்திருப்பதாக அடிக்கடி கூறுகிறார். இன்றைய நற்செய்தியில் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் ஒருவரை அவரிடம் கொண்டு வருகிறார்கள். வந்திருக்கிற அனைவர் முகத்திலும் ஒருவிதமான அருவருப்பு காணப்படுகிறது. அந்த அருவருப்பின் பின்புலத்தில் ஒருவிதமான பெருமிதமும் காணப்படுகிறது. சட்டத்திற்கு எதிராகச் சென்ற பெண்ணை கையும், களவுமாக பிடித்துவிட்ட கர்வம், அவர்களது கண்களில் தெரிகிறது. ஆனால், இந்த நிகழ்ச்சி மூலமாக இயேசு நமக்கு அருமையான செய்தியை தருகிறார். எடுத்த எடுப்பிலேயே, தவறு செய்தவர்களை நாம் பார்க்கிறபோது, வெறுப்புணர்வோடு, கோப உணர்வோடு நாம் பார்க்கிறோம். ஆனால், அவர்களை முதலில் பரிதாப உணர்வோடு பார்ப்பதற்கு இயேசு அழைப்புவிடுக்கிறார். ஒரு மருத்துவர் கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னிடம் மருத்துவத்திற்காக வருகிறபோது, கோபப்படுவதில்லை. அவருடைய எண்ணமெல்லாம், நோயை தீர்ப்பதிலும், முடிந்தவரை நோயாளிக்கு ஆறுதலாக இருப்பதிலும் இருக்கிறது. அதேபோலத்தான், தவறு செய்தவர்களையும் நாம் அணுக வேண்டும். தவறு செய்கிற சூழ்நிலை, பிண்ணனி, அணுகுமுறை, தவறு...

ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்

இந்த உலகத்தில் வாழக்கூடிய மக்கள் ஒவ்வொரு விதத்தில், ஒவ்வொரு இடத்தில் அடைக்கலம் புகுகிறார்கள். ஒருசிலர், புகழுக்கு மயங்கி, புகழிடத்தில் அடைக்கலம் புகுகிறார்கள். ஒரு சிலர், வாழ்க்கை முழுவதும் செல்வம் சேர்க்க வேண்டும், செல்வம் தான் வாழ்க்கை என செல்வத்திடம் தங்களையே கையளிக்கிறார்கள். ஒரு சிலா் அதிகாரம் தான் எல்லாமே, என்று அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் தங்களது வாழ்க்கையை செலவழிக்கிறார்கள். இவர்கள் அனைவருமே எப்போதும் நிறைவைக் காணப்போவதில்லை. புகழும், பணமும், அதிகாரமும் எவருக்கும் நிறைவைத் தந்ததில்லை. நிம்மதியின்மையைத்தான் கொடுத்திருக்கின்றன. கடவுளிடம் நாம் அடைக்கலம் புகுவதுதான், நமக்கு நிறைவையும், மகிழ்வையும் தரும் என்று, திருப்பாடல் நமக்கு அழைப்புவிடுக்கிறது. கடளிடம் தஞ்சம் கொள்வதே நமக்கு நலம் என்பது திருப்பாடல் ஆசிரியரின் கருத்து மற்றும் வாழ்க்கைப்பாடம். கடவுளிடம் ஏன் நாம் அடைக்கலம் புக வேண்டும்? ஏனென்றால், கடவுள் தான் நமக்கு எல்லாமுமாக இருக்கிறார். கடவுள் தான் நம்மைப்படைத்தவர். கடவுள் தான், நமக்கு வழிகாட்டியாக இருக்கிறவர். நமக்கு வாழ்க்கைநெறிகளை வகுத்துத்தருகிறவர்....

ஆண்டவரே உமது இரக்கத்திற்கு ஏற்ப என்னை நினைவுகூறும்

திருப்பாடல் 106: 19 – 20, 21 – 22, 23 இந்த திருப்பாடல் “அல்லேலூயா” என்கிற வார்த்தையோடு தொடங்கி, அதே வார்த்தையோடு முடிவுறுகிறது. அதாவது, கடவுள் போற்றப்படுவாராக என்பது, இதனுடைய பொருளாக இருக்கிறது. புகழ்ச்சிக்குரிய இந்த இரண்டு வார்த்தைகளுக்கு இடையே, இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு எதிராக செய்த பாவங்கள், கடவுளின் பொறுமை தெளிவாக விளக்கப்படுகிறது. மனிதர்களின் பாவங்களும், கடவுளின் அளவுகடந்த இரக்கமும் இந்த திருப்பாடலில் வெளிப்படுகிறது. இஸ்ரயேல் மக்கள் கடவுளிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றிருந்தனர். நன்மைகளைப் பெற்றதற்கு மாறாக, அவர்கள் கடவுளுக்கு எதிராக பாவச்செயல்களில் ஈடுபட்டனர். படைத்தவரை மறந்தனர். படைக்கப்பட்ட பொருளை வணங்க ஆரம்பித்தனர். அதாவது, உண்மையான தெய்வத்தை விட்டுவிட்டு, தாங்களாகவே படைத்த தெய்வங்களை வணங்க ஆரம்பித்தனர். இறைவன் எகிப்திலிருந்து அவர்களை விடுவித்த அந்த நிகழ்ச்சிகளையெல்லாம் மறந்துவிட்டு, தங்கள் மனம்போன போக்கில் வாழ ஆரம்பித்தனர். ஆனாலும், கடவுள் அவர்கள் மட்டில் பொறுமையாக இருந்தார். அவர்களுக்கு இன்னும் அதிக உதவிகளைச் செய்தார்....