Category: இன்றைய சிந்தனை

உயர்த்தப்பட்டவரை உற்று நோக்கி

(யோவான் 3 : 7-15) பழைய ஏற்பாட்டினை நிறைவு செய்பவர் நம் ஆண்டவர் இயேசு. மறைவாக இருந்த அனைத்திற்கும் நல்ல விளக்கத்தைக் கொடுத்ததோடு, தன்னிலே பலவற்றை வெளிப்படுத்தினார். இயேசு, தான் சாகும் முன்பே அவர் எவ்வாறு இறந்து மாட்சிமைப்படப் போகிறார் என்பதனை நிக்கதேம் என்ற பரிசேயரிடம் பேசிக் கொண்டிருப்பதே இன்றைய நற்செய்தி. பழைய ஏற்பாட்டிலுள்ள இந்த வெண்கலப் பாம்பு என்பது ஒரு அடையாளம். பாலைவனத்தில் மோசே தலைமையில் இஸ்ரயேல் இனம் பயணம் செய்த பொழுது நச்சுப் பாம்புகளால் கடிபட்டு இறந்தனர். அப்பொழுது மோசே வெண்கலத்தால் செய்யப்பட்டப் பாம்பை உயர்த்தி, அதைப் பார்ப்போர் பாம்பின் நஞ்சுக்குப் பலியாக மாட்டார் என்று உறுதி மொழிந்தார். இந்த நிகழ்வுக்கும் கல்வாரி நிகழ்வுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. விலக்கப்பட்ட மரத்தின் மூலமாக நுழைந்த பாவம் சிலுவை மரத்தின் மூலமாகக் கழுவப்படுகிறது. முதல் ஆதாமின் மூலமாகக் கீழ்ப்படிதல் இல்லாமையால் வந்த பாவமும் சாவும் இயேசுவின் கீழ்ப்படிதலாலும் சாவினாலும்...

உயிர்ப்பும் திருமுழுக்கும்

(யோவான் 3 : 1 – 8) இயேசுவின் வாழ்வில் நிக்கதேமின் பங்களிப்பு அளப்பரியது. இவர் ஒரு பரிசேயராக இருந்தாலும் நேர்மையானவர். எனவேதான் தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் ஆண்டவரைச் சிறைப்பிடிக்க ஆள் அனுப்பியதைக் கண்டித்து, ஆண்டவர் இயேசுவின் சார்பாகக் குரல் கொடுத்தார் (யோவான் 7 : 51) இவரின் முதல் சந்திப்பே இன்றைய நற்செய்தி. நிக்கதேம் ஆணடவரின் உரையை முன்னரே கேட்டிருக்க வேண்டும். அவரது புதுமைகளைக் கண்டிருக்க வேண்டும். அவரே மெசியா என ஊகித்திருக்க வேண்டும். எனவேதான், “ராபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை அறிவேன். தன்னோடு கடவுள் இருந்தாலன்றி எவனும் நீர் செய்கிற அருங்குறிகளைச் செய்ய முடியாது” என்று தன் உரையைத் தொடங்குகிறார். ஆண்டவர் அப்படியே இறையாட்சியைப் பற்றியும், திருமுழுக்கின் முக்கியத்துவத்தைப் பற்றியும் விளக்குகின்றார். திருமுழுக்கிற்கும் இயேசுவின் உயிர்ப்பிற்கும் மிக நெருக்கமானத் தொடர்பு இருப்பது இதன் மூலம் இன்னும் வலுப்படுத்தப்படுகிறது. திருமுழுக்கு வழியாக நாம் கிறிஸ்துவோடு இணைந்து விடுவதால்...

ஆண்டவர் தோற்றுவித்த நாள் இதுவே

திருப்பாடல் 118: 2 – 4, 22 – 24, 25 – 27a, (1) ”கடவுள் தோற்றுவித்த நாள்“ என்கிற இந்த வரிகள் பல நேரத்தில் தவறாக விளக்கம் கொடுக்கப்படுகிறது. இது புதிய நாளை குறிக்கக்கூடிய அர்த்தத்தில் பார்க்கப்படுகிறது. ஆனால், அது தவறு. இது கடவுள் பிற்காலத்தில் அனுப்ப இருக்கிற மீட்பரின் நாளை குறிக்கக்கூடியதாக இருக்கிறது. அதாவது, இயேசுவைக் குறிக்கும் வார்த்தையாக இது இருக்கிறது. இயேசுவில் மீட்பிற்கான அடித்தளக்கல்லை கடவுள் நட்ட இருக்கிறார் என்பதை, இந்த வரிகள் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. பழங்காலத்தில், மிகப்பெரிய அரசுகள், வெகு எளிதாக தங்களது அதிகாரத்தை சாதாரண நாடுகள் மீது நிலைநாட்டின. இஸ்ரயேலை அவர்கள் ஒரு பொருட்டாக மதித்ததே இல்லை. ஆனால், கடவுள் அவர்கள் வழியாகத்தான் இந்த உலகத்தை மீட்டார். பாபிலோனிலிருந்து நாடுகடத்தப்பட்ட யூதர்கள், தங்களது நாட்டிற்கு வந்து, மீண்டும் கோவிலைப் புதுப்பிக்கத் தொடங்கிய நாட்களில், இந்த திருப்பாடல் எழுதப்பட்டிருக்கலாம். எனவே தான், கட்டிடத்தின் தொடர்பான...

ஆண்டவரது வலக்கை உயர்ந்துள்ளது

திருப்பாடல் 118: 1, 14 – 15, 16, 18, 19 – 21 (21a) நமது அன்றாட வாழ்வில், நமக்கு நெருக்கமானவர்களைப் பார்த்து நாம் சொல்வோம்: ”இவர் என்னுடைய வலக்கரம் போன்றவர்”. இங்கு வலக்கரம் என்பது நம்பிக்கைக்குரியவராக அடையாளப்படுத்தப்படுகிறது. எசாயா 41: 13 ”நானே உன் கடவுளாகிய ஆண்டவர். உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து, ”அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்”. பொதுவாக எல்லா மக்களுமே வலது கையை முக்கியமாக பயன்படுத்துவதால், அது ஒருவருடைய பலத்தை, ஆற்றலை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது. லூக்கா 20: 43 ”நான் உம் பகைவரை உமக்கு கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்” என்று திருப்பாடலில் உள்ள வசனம் மேற்கோள் காட்டப்படுகிறது. இங்கு வலது கரம், அதிகாரத்தின் அடையாளமாகச் சொல்லப்படுகிறது. மாற்கு 10: 37 ல், யாக்கோபு மற்றும் அவருடைய சகோதரர்கள், இயேசுவின் வலப்பக்கத்தில் அமரும் பாக்கியத்தைக் கேட்கின்றனர். மத்தேயு 25 வது அதிகாரத்தில், தந்தையின் ஆசீர்...

ஆண்டவரே உமது பெயர் எவ்வளவு பெயர் மேன்மையாய் விளங்குகின்றது

திருப்பாடல் 8: 1a, 4, 5 – 6, 7 – 8 கடவுளைப்பற்றியும், அவரது படைப்பின் மேன்மையைப் பற்றியும் உள்ளத்தில் ஆழமாக சிந்தித்த ஒரு மனிதரின் கூக்குரல் தான், இந்த திருப்பாடல். கடவுள் எந்த அளவுக்கு மாட்சிமையும், வல்லமையும் உடையவராய் இருக்கிறார் என்பதை, நாம் அவரைப்பற்றி சிந்தித்தால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். வெறுமனே படைப்புக்களை மேலோட்டமாக பார்த்தால், கடவுளின் மாட்சிமையை நாம் புரிந்து கொள்ள முடியாது. நேர்த்தியாகப் படைக்கப்பட்ட பறவையினங்கள், விலங்குகள், மரங்கள், அவைகளுக்கு உணவு வழங்கும் விதம், என்று ஒவ்வொன்றையும் நாம் இரசிக்கிறபோது, அதன் அழகைப் பருகுகிறபோது, கடவுளின் மேன்மையை நாம் உணர்ந்து கொள்ளலாம். கடவுளின் ஞானம் மனிதர்களோடு ஒப்பிடப்பட முடியாத ஒன்று. ஒவ்வொன்றையும் அவர் செதுக்கி வைத்திருக்கிறார். ஒவ்வொன்றிற்கும் ஒரு வடிவம் தந்திருக்கிறார். அது இயல்பாகவே இயங்குவதற்கு ஆற்றல் வழங்கியிருக்கிறார். படைப்புக்களையும், அவற்றின் மேன்மையையும் பேசுகின்ற திருப்பாடல் ஆசிரியர், படைப்பின் சிகரமாக இருக்கக்கூடிய மனிதர்களின் பெருமைகளையும்...