Category: இன்றைய சிந்தனை

மூவொரு இறைவன் பெருவிழா

கடவுள் தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூன்று ஆட்களாய் இருக்கின்றார். ஆயினும் ஒரே கடவுள் என்பதே மூவொரு கடவுள் பற்றிய அடிப்படையான இறையியல். இயேசுகிறிஸ்து மனிதனாகப் பிறந்தார். இவரில் மனிதத்தன்மையும் இறைத்தன்மையும் ஒருங்கிணைந்து உள்ளன. இவ்விசுவாசம் வழிபாட்டில் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு திருவழிபாடும் மூவொரு கடவுளின் புகழ்ச்சியோடுதான் தொடங்குகின்றது. திருப்பலியில் நற்கருணை மன்றாட்டின் முடிவில் ”இவர் வழியாக…” என்கிற மூவொரு கடவுளின் புகழ்ச்சி பாடப்படுகின்றது. திருமுழுக்கும் இவ்வாறு கொடுக்கப்படுகிறது. அதேபோல ஒவ்வொரு தொடக்கவுரையிலும் இந்த இறையியல் வெளிப்படுத்தப்படுகிறது. ஒன்பதாம் நூற்றாண்டு வரை, இது வழிபாட்டில் திருவிழாவாக ஏற்படுத்தப்படவில்லை. கி.பி. பதினோராம் நூற்றாண்டில் புனித பெனடிக்ட் சபையைச் சேர்ந்த துறவற மடங்களில் பெந்தகோஸ்தே நாளுக்குப் பிறகு இந்த திருவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை திருத்தந்தை 22 ம் ஜான், கி.பி 1334 ல் அறிமுகப்படுத்தினார். திருச்சபை வரலாற்றில் நெருக்கடியான வேளையில் பல்வேறு சவால்களை திருச்சபை சந்தித்த அக்காலக்கட்டத்தில் இறைவன் பராமரித்து பாதுகாத்து...

ஆண்டவர் எப்பொழுதும் சினம் கொள்பவரல்லர்

திருப்பாடல் 103: 1 – 2, 3 – 4, 8 – 9, 11 – 12 கோபப்படக்கூடிய மனிதர்களை பல வகைகளாக நாம் பிரிக்கலாம். எதற்கெடுத்தாலும் கோபப்படக்கூடிய மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தொட்டதெற்கெல்லாம் கோபப்படக்கூடியவர்கள். இது ஒரு வகையான உளவியல் நோய். அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சில நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு, இந்த உளவியல் நோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள். இரண்டாவது வகையான மனிதர்கள், தங்களை மறந்து கோபப்படக்கூடியவர்கள். அவர்களை அறியாமலேயே, இயல்பாகவே கோபத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள். தாங்கள் செய்வது சரியா, தவறா என்கிற சிந்திக்கிற திறன் இல்லாமல், கோபப்படக்கூடியவர்கள். இதுவும் ஓர் உளவியல் சிக்கல் தான். என்றாலும், விழிப்புணர்வோடு இருந்து முயற்சி எடுக்கிறபோது, இந்த சிக்கலிலிருந்து நாம் மீள முடியும். கடவுள் சினம் கொள்கிறார் என்பது இதுபோன்ற மனிதர்களோடு ஒப்பிட்டுக்கூறக்கூடியது அல்ல. அது நீதி அவமதிக்கப்படுகிறபோது எழுகிற கோபம். நேர்மையாளர்கள் அநியாயமாக தண்டிக்கப்படுகிறபோது உண்டாகிற கோபம். வலியவன் எளியவனை சுரண்டுகிறபோது...

ஆண்டவரே! நான் உமக்கு நன்றிப்பலி செலுத்துவேன்

திருப்பாடல் 116: 10 – 11, 15 – 16, 17 – 18 வேதனையின் விளிம்பில் இருக்கிற ஒரு மனிதனின் புலம்பல் தான் இந்த திருப்பாடல். அவன் வேதனையின் உச்சத்தில் இருந்தாலும், கடவுளுக்கு நன்றியுள்ளவனாக வாழ ஆசைப்படுகிறான். கடவுளின் நன்றியை மறவாதவனாக இருக்கிறான். தன்னுடைய துன்பமான நேரத்திலும், சாதாரண மனிதர்கள் கடவுளைப் பழித்துரைப்பது போல அல்லாமல், தன்னுடைய வேதனையான நேரத்தில், கடவுளுக்கு நன்றிப்பலி செலுத்த ஆவல் கொண்டிருப்பதாக அவன் தன்னை வெளிப்படுத்துகிறான். பொதுவாக, துன்பம் நம்மைத் தாக்குகிறபோது, நமக்குள்ளாக எழக்கூடிய கேள்வி, கடவுள் எங்கே? அதிலும் குறிப்பாக, நம்பிக்கையோடு, கடவுளைப் போற்றி புகழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரின் உள்ளத்தில் இந்த கேள்வி தான், நிச்சயமாக எழும். எந்த ஒரு மனிதன் ஆன்மீகத்தில் பக்குவமடைந்திருக்கிறானோ, கடவுளைப் பற்றிய சரியான புரிதலைக் கொண்டிருக்கிறானோ, அவன் மட்டும் தான், கடவுளுக்கு எந்நாளும் நன்றிக்குரியவனாக இருக்க வேண்டும் என்று எண்ணுவான். நம்முடை வாழ்க்கையில் இத்தகைய ஆழமான ஆன்மீக...

நல்லதையே ஆண்டவர் அருள்வார்

திருப்பாடல் 85: 8 – 9, 10 – 11, 12 – 13 இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் கடவுளைப் பற்றி பல்வேறு புரிதல்களை வைத்திருந்தனர். அதில் ஒன்று, கடவுள் கண்டிப்புமிக்கவர். தவறுக்கு தண்டனை வழங்கக்கூடியவர். மக்களின் துன்பங்களுக்கு காரணம், அவர்கள் செய்த தவறுகளே. அது கடவுளிடமிருந்து வருகிறது என்று, அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். கடவுள் மக்களை நல்வழிப்படுத்த கண்டிப்புமிகுந்தவர் தான். எப்படி ஒரு தாய், தன்னுடைய குழந்தை நன்றாக வளர, கண்டிப்பு காட்டுகிறாளோ, அதேபோல, நாம் மகிழ்ச்சியாக வாழ கடவுளும் கண்டிப்பு காட்டுகிறார். ஆனால், இந்த திருப்பாடல், கடவுளின் கண்டிப்பை விட, கடவுளின் இரக்கமும் அருளும் மிகுதியாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. கடவுள் எப்போதும் நமக்கு நல்லதை வழங்குவதற்கே விரும்புகிறார் என்று இந்த திருப்பாடல் கற்றுக்கொடுக்கிறது. கடவுள் நல்லவர். நன்மைகளைச் செய்கிறவர். நாம் நல்லவர்களாக வாழ வேண்டும் என்பதையே விரும்புகிறவர். கடவுள் எப்போதும் நாம் அழிந்து போக வேண்டும் என்பதை விரும்பக்கூடியவர்...

நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர்

திருப்பாடல் 99: 5, 6, 7, 8, 9 தூயவர் என்கிற வார்த்தையை நாம் கடவுளுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும். ஏனெனில் கடவுள் மட்டும் தான், தூய்மையின் வடிவமாக இருக்கிறார். எபிரேய மொழியில், ஒரு வார்த்தையின் நிறைவைக் குறிப்பதற்கு மூன்றுமுறை அதனைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். எனவே தான், பழைய ஏற்பாட்டில், ”தூயவர், தூயவர், தூயவர்” என்று மூன்றுமுறை இந்த வார்த்தை தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கடவுள் எந்த அளவுக்கு தூய்மையின் நிறைவாக விளங்குகிறார் என்பதை நமக்குக் குறித்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. கடவுள் தூயவராக இருப்பதால், கடவுளுக்குப் பணிசெய்வதற்கென்றே தூய குருத்துவத்தை அவர் ஏற்படுத்துகிறார். மோசேயும், ஆரோனும் அவர் தம் குருக்கள் என்று இந்த திருப்பாடல் சொல்கிறது. அவர்கள் தூய வாழ்வு வாழ அழைக்கப்பட்டவர்கள். அவர்கள் மட்டும் தான் தூய வாழ்வு வாழ வேண்டுமா? இல்லை. நாம் அனைவருமே தூய வாழ்வு வாழ அழைக்கப்படுகிறோம். ஆனால், சிறப்பாக, கடவுளின் பணிக்காக தங்களையே...