Category: இன்றைய சிந்தனை

தொழுநோயாளியின் நம்பிக்கை

மத்தேயு 10: 8 ல் இயேசு பன்னிரு திருத்தூதர்களையும் பணிக்காக அனுப்பியபோது, தொழுநோயாளர்களைக் குணப்படுத்துங்கள், என்று பணிக்கிறார்.பொதுவாக, நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள் என்று சொன்ன இயேசு, தொழுநோயாளர்களைக் குறிப்பிட்டுச் சொல்வது இங்கே கவனிக்கத்தக்கது. இயேசுவின் இந்த குறிப்பிட்டு தொழுநோயாளிகளுக்குச் சொல்லும் வார்த்தைகள், யூத சமுதாயத்தில் நிலவிய, தொழுநோயாளிகளுக்கான கொடுமையை அறிவிப்பதாக அமைகிறது. தொழுநோயாளர்கள் உயிரோடு இருந்தும் இறந்தவர்களே, என்று சொன்னால், அது சரியான பார்வையாக இருக்கும். அந்த அளவுக்கு, யூத சமூகம் தொழுநோயாளிகளை நடத்தியது. தொழுநோயாளிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தது. அவர்கள் தங்களின் நிலையை நினைத்து, நினைத்து வருந்தக்கூடிய மிகப்பெரிய துயரமாக அவர்களின் வாழ்வு இருந்தது. அப்படி உருக்குலைந்த நிலையில் இருக்கக்கூடிய ஒரு தொழுநோயாளி, இயேசுவிடத்தில் “என்னைக் குணமாக்குங்கள்” என்று சொல்லாமல், ”நீர் விரும்பினால் என்னைக் குணமாக்கும்” என்று சொல்வது உண்மையிலே, அவரின் நம்பிக்கையின் ஆழத்தைக் குறிப்பதாக இருக்கிறது. தனது நிலை அவ்வளவுக்கு துர்பாக்கியமாக இருந்தாலும், கடவுளின் திருவுளம் எதுவாக இருந்தாலும்...

உதவி செய்வோம்

இயேசுவைப்பற்றிய செய்தி சுற்றுப்புறமெங்கும் பரவிக்கொண்டிருந்தது. அவருடைய வல்லமை, நோயாளர்களைக் குணமாக்கும் ஆற்றல், அதிகாரம் மக்கள் மத்தியில் பிரபலமாகிக்கொண்டிருந்தது. அதை நிச்சயமாக மறைத்து வைக்க முடியாது என்கிற அளவுக்கு, மக்கள் இயேசுவைத்தேடி வர ஆரம்பித்தனர். இயேசு பேதுருவின் இல்லத்தில் இருப்பதைக்கேள்விப்பட்டு, ஓய்வுநாள் முடிகின்ற நேரத்திற்காக காத்திருந்து, ஓய்வுநாள் முடிந்தவுடன், நோயாளர்களை இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள். மூன்று இடங்களில் இயேசு பொதுவாக நோயாளர்களைக் குணப்படுத்துகிறார். 1. தொழுகைக்கூடம் 2. நண்பர்களில் இல்லம் 3. தெரு வீதி. எங்கே இயேசுவின் உதவி தேவை என்றாலும், அங்கே உதவி செய்வதுதான் இயேசுவின் பணியாக இருந்தது. மனிதத்தேவையை நிறைவேற்றுவதற்கு, அவர் நாளோ, நேரமோ, இடமோ, ஆளோ பார்க்கவில்லை. தேவையைப்பூர்த்தி செய்வதில் கவனத்தோடு இருந்தார். தேவையில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் தனது உதவி கிடைக்க வேண்டும் என்பதில் இயேசு உறுதியா இருப்பதை இன்றைக்கு நற்செய்தி தெளிவாக்குகிறது. உதவி என்பது நாளோ, இடமோ, ஆளோ பார்த்து செய்வதல்ல. தேவையை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்....

கடவுளின் அழைப்பு என்னும் கொடை

அழைப்பு என்பது கடவுளின் கொடை தான். அந்த கொடையை கடவுள் நமது நிலையைப் பார்த்து வழங்குவதில்லை. நமது உள்ளத்தைப் பார்த்து வழங்குகின்றார். எனவே, அது ஒரு கொடையாக கருதப்பட்டாலும், கடவுளின் அளப்பரிய அன்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்தாலும், நமது தகுதியின்மையில் இருக்கக்கூடிய தகுதியும், இதில் சிறந்த பங்கு வகிக்கிறது. கடவுள் முன்னிலையில் நாம் தகுதி என்றே சொல்ல முடியாது. எனவே, நமது தகுதியின்மையில் ஏதாவது தகுதி இருக்கிறதா? என்பதைப் பார்த்து, அதற்கேற்பவும் நிச்சயம் அந்த தகுதி வழங்கப்படுகிறது. இயேசு தனது பணிவாழ்வை தொடங்குகிறார். எந்த ஒரு பயணத்தைத் தொடங்குகிறபோதும், ஏதாவது ஒரு இடத்தில் இருந்து ஆரம்பித்தே ஆக வேண்டும். இயேசுவின் பணி அவரோடும், அவரது வாழ்வோடும் முடிந்துவிடக்கூடிய பணி அல்ல என்பது அவருக்கு நன்றாகத்தெரியும். எனவே, தனது பணியை ஆரம்பிப்பது ஆண்டாண்டு காலமாக, பல தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும். அதற்கு தொடக்கமாக, கடலில் வலைவீசி மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை அழைக்கிறார். நாம் நினைக்கலாம்? மீனவர்கள்,...

ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்குவாராக

இந்த திருப்பாடலை தாவீது அரசர் எழுதியபோது இயற்கைச்சீற்றங்கள் நிறைந்த ஒரு சூழலாக இருந்திருக்கும் என்று நம்பப்படுகிறது. மழை, மின்னல், இடி போன்ற இயற்கைச்சீற்றங்களின் தாக்கம் அதிகமாக இருந்த ஒரு சூழலை நாம் எதிர்கொண்டால் எப்படி இருக்கும்? பயம், கலக்கம், அச்சம் நம்மில் அதிகமாக இருக்கும். ஆனால், தாவீது அரசர் இயற்கையின் சீற்றத்திலும் கடவுளின் வல்லமையை, ஆற்றலை பார்க்கிறார். எந்த அளவுக்கு கடவுள் வலிமையும், வல்லமையும் படைத்தவராக இருக்கிறார் என்பதை, இங்கே நாம் அறிந்து கொள்ள முடியும். இப்படிப்பட்ட நெருக்கடியான நிலை இயற்கையில் மட்டுமல்ல. நமது வாழ்விலும் எதிரொலிக்கிறது. இந்த நெருக்கடியான நிலை குறிப்பிட்ட மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா மனிதர்களின் வாழ்விலும் எதிரொலிக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் வாழும், வாடும் மனிதர்களுக்கு அமைதியைத்தர வேண்டுமென்று ஆசிரியர் மன்றாடுகிறார். ஏனென்றால், உண்மையான அமைதியை ஆண்டவர் ஒருவர் மட்டும் தான் வழங்க முடியும். அந்த அமைதியை வழங்கக்கூடிய ஆண்டவரில், தூய ஆவி நிழலிடுவதை இன்றைய நற்செய்தியும் நமக்கு...

போதிப்பவரின் கடமை

யோவான் நற்செய்தியாளர் இயேசுவைப்பற்றி செய்தி அறிவிப்பதற்குத்தான் தனது நற்செய்தியை எழுதுவதன் நோக்கமாக தொடக்கத்திலேயே சொல்கிறார். அப்படி இருக்கிறபோது, எதற்காக திருமுழுக்கு யோவானின் நற்செய்திப்பணி பற்றி அவர் கூற வேண்டும்? எதற்காக இயேசுவின் பணிவாழ்வோடு திருமுழுக்கு யோவானின் பணிவாழ்வையும் கலந்து சொல்ல வேண்டும்? இதற்கு பதில் இல்லாமல் இல்லை. திருமுழுக்கு யோவான் இயேசுவின் முன்னோடி மட்டும்தான். அவர் வரவிருந்த மெசியா அல்ல. இது திருமுழுக்கு யோவானுக்கும் தெரிந்திருந்தது. அவருக்குரிய இடம் நிச்சயமாக அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இயேசுவுக்கான இடம் அதற்கும் மேலான இடம். ஆனால், இயேசுவுக்கான இடத்தை திருமுழுக்கு யோவானுக்குக் கொடுத்து, அவரை மெசியா எனவும், மீட்பர் எனவும் மக்கள் அழைக்கக்கூடிய அளவுக்கு, அவர் பெயர் பெற்றிருந்தார். இந்த நிலையில் தான், இயேசு, நிச்சயமாக திருமுழுக்கு யோவானைவிட உயர்ந்த இடத்தில் இருக்கிறார் என்பதை காட்டுவதற்காக, நற்செய்தியாளர் இந்த பகுதியில், இரண்டு கேள்விகளுக்கும் பதில் கொடுக்கிறார். இந்த பகுதி திருமுழுக்கு யோவானின் தாழ்ச்சியின் மகிமையையும்...