Category: இன்றைய சிந்தனை

அரசியல்வாதி பரிசேயன்

லூக் 18: 9-14 மக்களின் பணத்தினைப் பறித்து, காசினைக் கரியாக்கி, மக்களை ஏமாற்றி அவர்களின் மானத்தையும் மரியாதையையும் அடகு வைத்து ‘இலவசம்’ என்ற பெயரில் சில பொருட்களைக் கொடுத்து மக்களைப் பிச்சைக்காரர்களாக்கி உங்களுக்கு நான் அதைச் செய்தேன், இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தேன், இதைக் கொண்டுவர வலியுறுத்துவேன் என்று மக்களை மையப்படுத்தாமல், தன்னையும் தனது குடும்பத்தையும் மையப்படுத்திப் பேசுகிற இன்றைய அரசியல்வாதிகளைப் போலவே நற்செய்தியில் வரும் பரிசேயனும் பேசுகிறான். இப்பரிசேயன் தான் சிறந்தவன், நல்லவன் என்பதைக் கூற செபத்தைக் கையாளுகிறான். இறைவனை மையப்படுத்துகிற செபத்தை, அவனை மையப்படுத்தி மாற்றியமைக்கிறான் (இதுவும் ஒரு வித சிலை வழிபாடே) தன்னை மேம்பட்டவன் என்று காட்ட மற்றவர்களை இகழ்கிறான். மொத்தத்தில் இப்பரிசேயன் தன்னிலன்பு, இறையன்பு, பிறரன்பு ஆகிய மூன்றிற்கும் எதிராகச் செயல்படுகிறான். இந்த மூன்றையும் நாம் வலுப்படுத்துவதற்காகக் கொடுக்கப்பட்டிருப்பதே இத்தவக்காலம். இதை மீண்டும் மீண்டும் உணர்ந்தவர்களாய் மாறி நம் அகந்தையை அகற்றி தாழ்ச்சியைக் கையிலெடுத்து நம்மை...

இணைந்து செல்லும் கட்டளை

மாற் 12:28-34 திருச்சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்கள் யூதர்கள். இவர்களைத் தலைமையின்று சட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வைத்து வலியுறுத்தியவர்களில் மறைநூல் அறிஞர்களின் பங்கும் மிகப் பெரியது. ஆனால் இயேசுவின் போதனையின் ஆழத்தை உணர்ந்த மறைநூல் அறிஞருள் ஒருவர் அவரை அணுகி சிறந்த கட்டளை ஏது? எனக் கேட்கின்றார். ஒரு கேள்விக்கு இரு பதில்கள் கூறப்பட்டது போலத் தோன்றினாலும், இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இறையன்பு இல்லாமல் பிறரன்பு இல்லை. பிறரன்பு இல்லாமல் இறையன்பு இல்லை. இந்த இரண்டுக் கட்டளையும் ஒன்றை விட்டு மற்றொன்று முழு அர்த்தம் பெற இயலாது. கடவுளை முழு மனத்தோடு நேசிக்கும் எவரும் கடவுளின் சாயலான (தொ.நூல் 1:27) மனித இனத்தை அன்பு செய்ய வேண்டும். ஏனெனில் அவர் வெளிப்படுத்துவது மக்களிடையே தான். எனவேதான் கடவுள் தனது ஒரே மகனை மனிதனாக இவ்வுலகிற்கு அனுப்புகிறார். (யோவான் 3:16) அதே யோவான் தனது திருமுகத்தில் கடவுளிடம்...

தன்னைக் கரைக்க

மத் 1:16, 18-21,24 தவக்காலத்தில் நாம் கொண்டாடும் விழாக்களில் மிகவும் முக்கியமானது தூய வளனாரின் பெருவிழா. இத்தவக்காலத்தில் இவரை நாம் நினைவு கூர்வது இன்னும் அதிகமாக இத்தவக்காலத்தை வாழ்வாக்க எளிதாக இருக்கும். காரணம் இவர் மௌனத்தில் பேசியவர், பேசியதைக் காட்டிலும் செயலினால் அதிகம் இறைத் திருவுளத்தை நிறைவேற்றியவர். உப்பாக, ஒளியாக இருங்கள் என்று சொன்ன நம் ஆண்டவரின் வார்த்தைகளை உலகின் உப்பாக இருந்து வாழ்ந்து காட்டியவர். நேற்றைய நற்செய்தியில் ‘தீர்ப்பிடாதீர்கள்’ என்ற இறைவார்த்தையை தன் வாழ்க்கை மந்திரமாகக் கொண்டவர். உன் உள் அறைக்கு சென்று செபி என்ற இறைவார்த்தை தன்வார்த்தையாக்கியவர். இதுவரைக்கும் இத்தவக்காலத்தில் நாம் பார்த்த அனைத்து நற்செய்தியின் மதிப்பீடுகளின் மறுஉருவமே இன்றைய விழா நாயகர் தூய வளனார். தன் விருப்பு வெருப்புகளை இறைவனின் விருப்பத்திற்காக கரைத்துக் கொண்டவர். தன்னால் முடிந்தவரை நல்லவர்களின் நற்பெயருக்கு கலங்கம் வராதபடி தன்னையே கட்டி கோட்டையாகப் பார்த்துக் கொண்டவர். மொத்தத்தில் இத்தவக்காலம் நம் கண்முன் காட்டுகிற...

முழுமையை நோக்கி…

மத் 5: 17-19 திருவிவிலியத்தை இரண்டாகப் பிரித்தோமென்றால் அது (1) பழைய ஏற்பாடு, (2) புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாட்டை இரண்டாகப் பிரித்தோமென்றால், (1) முதல் ஐந்து புத்தகங்களான தோரா, இவை அனைத்தும் திருச்சட்டங்களைப் பற்றியும் அவற்றை நாம் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைக்கின்றது. (2) மற்ற அனைத்தையும் இறைவாக்குகளலாக (பல உட்பிரிவுகள் இருந்தாலும்) எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இவையனைத்திலும் ஏதோ ஒன்று குறையிருப்பதாகவும், முழுமையைப் பெறுவதற்காக காலம் காலமாகக் காத்திருப்பதையுமே நாம் அனைவரும் அறிந்ததே. இந்த நிறைவைக் கொடுப்பவரே இயேசு. அவரது படிப்பினைகள் அனைத்தும் பழைய ஏற்பாட்டோடு இணையும் பொழுதே, ஒரு முழுமையும் நிறைவும் பெறுகிறது. இந்த நிலையை அறிந்து கொள்வது வெறும் முதல் படிநிலைதான். (யூதர்களைச் சற்று சிந்திக்கவும் அவர்கள் இன்னும் பழைய ஏற்பாட்டை மட்டுமே தமது புனித நூலாகக் கொண்டிருக்கிறார்கள்) அடுத்தநிலை என்னவென்றால் அறிந்தவற்றை அறிக்கையிடுதல், கற்பித்தல். இந்த நிலையில் இருப்பவர்கள் விண்ணகத்தில் சிறியவர்களே....

அவரைப் போல …

மத்18:21-35 என் மட்டில் கடவுளின் அன்பு அளவற்றது என்பதை மறந்து பிறர் செய்த தவறுகளை நான் மன்னிக்கின்றேனா என்பதை சிந்திக்க இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது. மன்னிப்பு, நாம் இன்னும் ஆன்மீகத்தில் ஆழச் செல்ல உதவுகின்றது. மன்னிக்கின்றவனே வாழத் தெரிந்தவன், வலிமையானவன். ஆனால் பல நேரத்தில் நாம் பிறரை அடக்கி ஆளும் போதும், பிறர் என் பேச்சினை அப்படியே கடைபிடிப்பார்கள் என்று கூறுவதில்தான் பெருமை கொள்கிறோம். பிறரைப் பழி வாங்குவதே சிறந்த தலைமைப் பண்பு என்று எண்ணி வாழ்ந்து வருகிறோம். காரணம் இவ்வுலகம், குறிப்பாக மாயக் கவர்ச்சிகளைக் கொண்ட திரைப்படங்களின் கதைக்கரு அனைத்தும் பழிவாங்கும் படலமாகவே இருக்கின்றது. பழிவாங்குபவனே கதாநாயகன், மன்னிப்பவன் கோழை என்ற மனநிலைக்கு இன்றைய உலகம் நம்மைத் தள்ளி விட்டுவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைய நற்செய்தி நம் முதுகில் தட்டி ‘திரும்பிப் பார் ராஜா’ என்று அன்போடு அழைக்கின்றது. உவமையில் பெரிய கடன் தொகையைக் கொண்டவன், அரசனிடம் என்...