உண்மை – தூய ஆவியாரின் உறைவிடம்
திருத்தூதர் பணி 7: 51 – 8: 1 ஸ்தேவான் கடுமையான வார்த்தைகளால் மக்களையும், மூப்பர்களையும், மறைநூல் அறிஞர்களையும் சாடுகிறார். அவருடைய கடுமையான வார்த்தைகளுக்கு காரணம் இல்லாமல் இல்லை. அவர்கள் அனைவரும் மாசற்ற இயேசுவைக் கொலை செய்துவிட்டார்கள் என்பது தான். ஸ்தேவானின் பார்வையில், இயேசுவைக் கொலை செய்தது தற்செயலாக நடந்திருக்கவில்லை. இவர்கள் அனைவருமே குற்றப்பிண்ணனியோடு தான் இருந்திருக்கிறார்கள். ஏனென்றால், இயேசுவுக்கு முன்பிருந்த இறைவாக்கினர்களைக் கொன்றார்கள். இறைவாக்கினர்க்கெல்லாம் இறைவாக்கினராக இருந்த இயேசுவையும் கொன்றார்கள். ஆக, கொலை செய்வது என்பது அவர்களுக்கு புதிதானது அல்ல. அது மட்டுமல்ல, அத்தோடு அவர்கள் நிற்கப்போவதில்லை. இவற்றை எடுத்துரைக்கின்ற தன்னையும் கொலை செய்ய இருக்கிறார்கள், என்று தன்னுடைய சாவை ஸ்தேவான் முன்னறிவிக்கின்றார். ஸ்தேவானின் போதனையைக் கேட்டவர்களின் பதில்மொழி என்ன? ”அவரைப் பார்த்துப் பற்களை நறநறவென்று கடித்தார்கள். இவ்வளவுக்கு வஞ்சக எண்ணமும், பகைமை உணர்வும் அவர்களது உள்ளத்தில் எழக்காரணம் என்ன? தூய ஆவி இல்லாத நிலை தான், அவர்களின் பழிவாங்கும்...