Category: இன்றைய சிந்தனை

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்

ஏழைகள் என்றால் யார்? ஏழைகளுக்கு, விவிலியத்திலே இரண்டு வார்த்தைகள், கிரேக்க மொழியில் பயன்படுத்தப்படுகிறது.   தங்களுடைய உழைப்பை மட்டுமே நம்பி இருப்பவர்கள். இவர்கள் தினமும் உழைப்பதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, தங்கள் வாழ்க்கையை ஓட்டுபவர்கள். தங்களுக்கென்று, வேறு எதுவும் கிடையாது. உழைப்பை நம்பி வாழ்க்கையை நடத்துபவர்கள். Pவழமழள என்றால், தங்களுடைய ஒருவேளை உணவுக்காக கூட மற்றவர்களுடைய தயவை எதிர்பார்த்து இருப்பவர்கள். மனிதன் என்கிற தங்களுடைய மாண்பை இழந்து, மற்றவர்களிடம் கையேந்துபவர்கள். ஒருவேளை உணவு கிடைத்தாலும் உண்டு, இல்லையென்றால் பட்டினி என்ற நிலையோடு வாழ்பவர்கள். மத்தேயு நற்செய்தியிலே, இந்த இரண்டாவதாக பொருள்படக்கூடிய ஏழையைத்தான் இங்கே குறிப்பிடுகிறார். அதாவது, ஒருவேளை உணவுக்காகக்கூட, மற்றவர்களை எதிர்பார்த்து, சார்ந்து இருக்கக்கூடிய ஏழைகளை, இங்கே கூறுகிறார். அப்படியானால், ஏழையரின் உள்ளத்தவர்கள் என்றால் என்ன பொருள்: யாரெல்லாம், தங்களுடைய செல்வம், திறமை, அழகு, பதவி, பட்டங்கள் மீது நம்பிக்கை வைக்காமல், கடவுள் ஒருவர்தான் எங்களுடைய வாழ்க்கை, கடவுள் தான் எனக்கு எல்லாமே...

ஆண்டவர் பெயர் வாழ்த்துக்குரியது

தானியேல் 1: 29, 30 – 31, 32 – 33 சாத்ராக்கு, மேசாக்கு, ஆபெத்நெகோ என்கிற மூன்று இளைஞர்கள் ஆண்டவர்க்கு அஞ்சி வாழ்ந்தவர்கள். அதனால், அவர்கள் தண்டிக்கப்பட இருந்தார்கள். ஒன்று கடவுளை மறுதலிப்பது அல்லது மடிவது. இதுதான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சோதனை. அவர்கள் மடிவதை தேர்ந்தெடுத்தார்கள். எனவே அவர்கள் தீச்சூளையில் தூக்கி எறியப்பட்டனர். சூளையின் தீ எந்தளவுக்கு அதிகமாக இருந்தது என்றால், அவர்களைத் தூக்கி எறியச் சென்ற காவலர்கள், தீயின் தாக்கம் தாங்காமல் எறிந்து போயினர். ஆனால், இவர்கள் எரியாமல், தீச்சூளையினுள் நடமாடிக்கொண்டிருந்தார்கள். இறைவன் அவர்களுக்குச் செய்த ஆச்சரியத்தில், அவர்கள் கடவுளைப் புகழ்ந்து பாடுவதுதான் இன்றைய பாடல். கடவுளை மூதாதையரின் கடவுளாக அவர்கள் பாடுகிறார்கள். அவர்களது முன்னோர்களாக இருந்த ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் கடவுள் மாட்சியும், தூய்மையும் நிறைந்தவர் என்று பாடுகிறார்கள். கடவுள் வாக்குறுதி மாறாதவராக இங்கே சித்தரிக்கப்படுகிறார். கடவுளின் வாக்குறுதி ஏதோ ஒரு தலைமுறையோடு நின்றுவிடவில்லை. வழிவழியாக கடவுளின்...

ஏழை எளியவர்களின் கடவுள்

மறைநூல் அறிஞர்களுக்கு இன்றைய நற்செய்தி மூலம், இயேசு எச்சரிக்கை விடுக்கிறார். அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அடுக்குகிறார். தொங்கலான ஆடை என்பது, ஒரு மதிப்பைக் கொடுக்கக்கூடிய ஆடை. ஆடை தரையில் பட நடந்து வருவது, மேன்மையைக் குறிக்கக்கூடியதாக, மக்கள் மத்தியில் உணரப்பட்டது. ஏனென்றால், கடினமாக உழைப்பவர்களோ, அவசரமாக நடந்து செல்கிறவர்களோ, இந்த ஆடையை அணிய முடியாது. தங்களை மேன்மைமிக்கவர்களாக, தங்களுக்கு பணிசெய்ய வேலையாட்கள் இருக்கிறார்கள், என்பதைக் காட்டிக்கொள்ளக்கூடியவர்களால் மட்டும் தான், இதுபோன்ற ஆடைகளை அணிய முடியும். ஆக, மற்றவர்களை தங்களுக்குக் கீழானவர்களாக மதிக்கக்கூடிய எண்ணம் தான், அவர்களை தொங்கலான ஆடை அணியச்செய்திருக்கிறது. சட்ட வல்லுநர்கள் தங்களுடைய போதனைகளுக்கு, எந்த கூலியும் பெற்றுக்கொள்ளக் கூடாது. தங்களது வாழ்விற்குத் தேவையான பொருளாதாரத்தை, செல்வத்தை அவர்கள், வேலை செய்து சம்பாதித்துக் கொள்ள வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல், ஏழை, எளியவர்களை ஏமாற்றி, தங்களுக்கு வேண்டியதை, கடவுளின் பெயரால் இவர்கள் பெற்றுக்கொண்டார்கள். சாதாரண, பாமர மக்களை ஏமாற்றிப்பிழைக்கக்கூடிய செயல்கள்,...

புதிய சிந்தனைகள்

எபிரேய மொழியிலிருந்து எழுதப்பட்ட கிரேக்க விவிலியத்தில், “ஆண்டவர்“ (Lord) என்ற வார்த்தை ”யாவே” (Yahweh) என்ற வார்த்தையின் மொழிபெயர்ப்பு. இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறபோதெல்லாம், இஸ்ரயேல் மக்கள் மனத்தில், கடவுளைப்பற்றிய எண்ணம் தான் வரும் எப்போதெல்லாம், அவர்கள் ”ஆண்டவர்” என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்களோ, அப்போதெல்லாம், கடவுள் செய்த நன்மைகள், அவருடைய ஆற்றல்கள், மாண்பு மற்றும் மகத்துவம், இஸ்ரயேல் மக்களுக்கு நினைவில் வரும். இயேசு இந்த வார்த்தையை பயன்படுத்துவதன் மூலம், மக்கள் மனதில் ஒரு புதிய சிந்தனையை விதைக்கிறார். மெசியா என்றாலே, அரசர், போர், மண்ணகத்தில் அரசாட்சி என்ற மனநிலையோடு, சிந்தனையோடு வாழ்ந்து வந்த மக்களுக்கு, இயேசு இந்த வார்த்தையின் மூலம் கடவுளின் அரசை நினைவுறுத்துகிறார். மக்கள் மனதில் இருக்கக்கூடிய மெசியா, போர் தொடுத்து, கடவுளின் அரசை நிலைநிறுத்த வேண்டும் என்ற, எண்ணத்தை எடுத்துவிட்டு, உண்மையான மெசியா, அமைதியின் அரசர் என்ற செய்தியை அவர் விதைக்கிறார். இயேசுவின் மிகப்பெரிய சவால், மக்களின் தவறான புரிதல்களை...

பவுலடியாரும், இயேசுவின் பாடுகளும்

2தீமோத்தேயு 2: 8 – 15 தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில், இதுவரை பவுலடியார், துன்பத்தைத் தாங்குவதில் அவர் கொண்டிருந்த தனித்துவத்தைப் பற்றி அறிவுரையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், இரண்டாவது அதிகாரத்தின் தொடக்கத்திலிருந்து, அவருடைய அறிவுரை இயேசுவின் பாடுகளை நோக்கி நகர்கிறது. ”இயேசு உயிர் பெற்று எழுந்தார் என்பதை நினைவில் கொள்” என்று சொல்கிறார். அதாவது, இயேசுவின் பாடுகள் அழுத்தம் பெறுகிறது, அவருடைய துன்பங்கள் அறிவுரையின் மையமாகிறது. கடவுளுடைய வார்த்தையை யாரும் சிறைப்படுத்த முடியாது. இயேசுவை, அவருடைய சாவு சிறைப்படுத்தி விடும் என்று, பரிசேயர்களும், சதுசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் தப்புக்கணக்கு போட்டார்கள். ஆனால், இயேசு சாவிலிருந்து உயிர் பெற்றெழுந்தார். பவுலடியாருடைய துன்பங்களும், பாடுகளும் யாருக்கும் மீட்பைப் பெற்றுத்தரப் போவதில்லை. ஆனால், அவருடைய வாழ்க்கை பலருக்கு உந்துசக்தியாக இருக்கப்போகிறது. குறிப்பாக, துன்பங்களைத் தாங்குவதற்கு மற்றவர்கள் கற்றுக்கொள்கின்ற வாழ்க்கை அனுபவமாகவும் இருக்கிறது. நாம் கிறிஸ்துவோடு இருக்கிறபோது, துன்பங்களைத் தாங்குவதற்கான வல்லமையைப் பெற்றுக்கொள்கிறோம் என்பதுதான் பவுலடியார் இங்கு சொல்ல...