அதிகாரவர்க்கத்தின் போலித்தனம்
திருத்தூதர் பணி 12: 1 – 11 திருத்தூதர்கள் காலத்தில், அரசருக்கு வணக்கம் செலுத்துவது, அரசருடைய உருவங்களுக்கு ஆராதனை செலுத்துவது வெறும் கடமை மட்டுமல்ல, அது அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியது. அவர்கள் அதனைச் செய்ய தவறினால், கடுமையான கொடுமைகளுக்கும், சித்ரவதைகளுக்கும் உள்ளாகினர். ஆனால், இயேசுகிறிஸ்துவை நம்பிய கிறிஸ்தவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஏனென்றால், அவர்களைப் பொறுத்தவரையில், இயேசு ஒருவரே ஆண்டவர். அவரைத் தவிர வேறு யாருக்கும், அடிபணிய மறுத்தனர். இது நிச்சயமாக, ஏரோது அரசனுக்கு கோபத்தை வருவித்திருக்கும். இன்றைய வாசகத்தில், ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. “திருச்சபையைச் சார்ந்த மக்கள்” என்கிற வார்த்தைகள், திருத்தூதர்களைக் குறிக்கிற வார்த்தைகளோ, அல்லது, மேல் மட்ட கிறிஸ்தவ திருச்சபையின் தலைவர்களையோ குறிக்கலாம். ஏரோதுவின் இந்த செயல், கிறிஸ்தவர்கள் தனக்கு எதிராக கலகம் செய்யலாம் என்று அஞ்சியோ, அல்லது பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களின் தூண்டுதலினாலோ எழுந்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக, அவர்களை சட்டத்திற்கு...