ஒன்றுபடுவோம்
ஒரு ஊரில் ஒரு பெற்றோர் தன் பிள்ளைகளுடன் மிகவும் சந்தோஷமாக சமாதானமாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு மூன்று ஆண்பிள்ளைகள் இருந்தனர். அந்த பெற்றோர் 3 பிள்ளைகளிடம் எந்தவித பாரபட்சமும் இன்றி அன்பு செய்து வளர்த்து,பராமரித்து வந்தார்கள். பிள்ளைகளும் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலை செய்து தங்கள் பெற்றோரை நேசித்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தார்கள். இப்படியாக வருஷங்கள் பல போயின.பெரியமகன் [முதல்] தன் பெற்றோரின் பாரம்பரியத்தை அப்படியே கடைப்பிடித்து வந்தார். 2 வது மகன் அதிகம் கொஞ்சம் படித்ததால் பெற்றோரின் பாரம் பரியத்தில் இருந்து சில கூடுதலான செயல்களை கடைப்பிடித்தார். 3 வது மகன் இரண்டு அண்ணன்களை விட இன்னும் சில கூடுதலான செயலில் ஈடுபட்டு தான் செய்வதே, தான் சொல்வதே தான் போகும் பாதையே சரி என்று நினைத்தார். ஆனால் பெற்றோருக்கு அவர்கள் 3 பேரும் அவர்களுடைய பிள்ளைகள். அவர்கள் மூன்று பேரையும் ஒரே அளவில் அன்பு செய்தார்கள். அதில் எந்தவித பாரபட்சமும் இல்லை. கடவுளும்...