மெல்லிய சத்தம்
இறைவாக்கினர் எலியாவின் காலத்தில் ஆட்சி செய்து வந்த மன்னரின் மனைவி ஈசபேல் எலியாவைக் கொல்ல நினைத்து அந்த ஈசபேல் எலியாவிடம் தூது அனுப்பி, எலியாவே நீர் என்னுடைய இறைவாக்கினர்களை கொன்றது போல நானும் நாளை இந்த நேரத்தில் உன் உயிரை எடுக்காவிடில் என் தெய்வங்கள் எனக்கு தண்டனை கொடுக்கட்டும் என்று சொல்லச் சொல்லி ஆள் அனுப்புகிறாள்.ஏனெனில் இதற்குமுன் பொய்யான இறைவாக்கினரை எலியா கொன்று போட்டார்.அதனால் அவளின் சொல்லுக்கு பயந்து எலியா தனது உயிரைக்காத்துக்கொள்ள தப்பி ஓடுகிறார்.அவர் பாலைநிலத்தில் ஒருநாள் முழுதும் பயணம் செய்து அங்கே ஒரு சூரைச்செடியின் அடியில் அமர்ந்துக்கொண்டு தான் சாகவேண்டும் என ஆண்டவரிடம் மன்றாடுகிறார். ஆண்டவரே! நான் வாழ்ந்தது போதும்,என் உயிரை எடுத்துக்கொள்ளும்,என சொல்லிவிட்டு உறங்கிவிடுகிறார். அப்போது வானதூதர் அவரை தட்டி எழுப்பி எழுந்து சாப்பிடு,என்று சொல்லி ஒரு தட்டில் அப்பமும்,ஒரு குவளையில் தண்ணீரும் இருக்கக்கண்டு அவற்றை சாப்பிட்டுவிட்டு மறுபடியும் படுத்து உறங்குகிறார். இரண்டாம்முறை தூதன் அவரை எழுப்பி எழுந்திரு நீ பயணம் செய்ய...