ஆண்டவரே என் ஒளி, அவரே என் மீட்பு
திருப்பாடல் 27: 1, 2, 3, 13 – 14 சவுல் மக்களின் மனதில் தன்னைவிட பிரபலமாகிக்கொண்டிருந்த தாவீதைக் கொல்ல தேடுகிறார். அதற்கு காரணம் பொறாமை. எங்கே தன்னுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற பயம். தன்னை விட யாரும் புகழ்பெற்றுவிடக்கூடாது என்கிற அகம்பாவம். அவர்களை எதிரிகளாக பாவிக்கக்கூடிய முதிர்ச்சியற்ற தன்மை. இந்த பிரச்சனைக்கு அவர் கொலை தான், சரியான முடிவு என்று நினைக்கிறார். தனக்கு எதிராக யார் வளர்ந்தாலும், அவர்களை வேரோடு வெட்டிச் சாய்க்க வேண்டும் என்று அவர் முடிவெடுக்கிறார். அந்த கொலைவெறியோடு தாவீதைக் கொல்ல தேடுகிறார். அரசருடைய இந்த முடிவு தாவீதிற்கு நிச்சயம் அதிர்ச்சியளித்திருக்கும். அரசருக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்து, இப்போது எதிரியாக தன்னைச் சித்தரிப்பதை அவர் நிச்சயம் விரும்பியிருக்க மாட்டார். அதிகாரவர்க்கத்தை எதிர்த்து நிற்பது என்பது இயலாத காரியம். எந்த அளவிற்கும் செல்வதற்கு பயப்பட மாட்டார்கள். இந்த உலகமே அவருக்கு எதிராக நிற்பது போலத்தான் தாவீது பயந்துபோயிருப்பார்....