Category: தேவ செய்தி

ஆண்டவரே என் ஆயர், எனக்கேதும் குறையில்லை

திருப்பாடல் 23: 1 – 3அ, 3ஆ – 4, 5, 6 இஸ்ரயேல் மக்கள் இயல்பிலேயே ஆடு மேய்ப்பவர்கள். ஆடு மேய்ப்பது என்பது அவர்களின் தொழிலாக இருந்தது. எங்கெல்லாம் மந்தைக்கு தேவையான மேய்ச்சல் நிலம் இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்று, அவர்கள் ஆடுகளை மேய்த்தார்கள். ஆடுகளைத் தாக்க வரும் ஓநாய்களிடமிருந்து, அவர்கள் ஆடுகளைப் பாதுகாத்தனர். ஆயன் இருக்கிறபோது, ஓநாய்களால் ஆடுகளைக் கவர முடியாது. ஆயன் இருக்கிறபோது, ஆடுகள் பாதுகாப்பை உணர்ந்தனர். ஆயனும் அந்த ஆடுகளை வெறும் ஆடுகளாகப் பார்க்காமல் அவைகள் மீது, மிகுந்த பாசம் காட்டி மகிழ்ந்தான். இந்த உருவகத்தைத்தான் திருப்பாடல் ஆசிரியர் இன்றைய திருப்பாடலில், கடவுளுக்கு பயன்படுத்துகிறார். கடவுள் தன்னுடைய பிள்ளைகளை எப்போதும் வளமையாக வைத்திருந்தார். எகிப்தில் அவர்கள் அடிமைகளாக இருந்தபோது, அவர்களை விடுவித்து வழிநடத்தினார். தாகத்தால் தவித்தபோது, அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து, தாகம் தணித்தார். உணவுக்காக ஏங்கியபோது, அவர்கள் எதிர்பாராத வண்ணம் அற்புதமாக உணவளித்தார். இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாத்தார்....

அரசியல்வாதி பரிசேயன்

லூக் 18: 9-14 மக்களின் பணத்தினைப் பறித்து, காசினைக் கறியாக்கி, மக்களை ஏமாற்றி அவர்களின் மானத்தையும் மரியாதையையும் அடகு வைத்து ‘இலவசம்’ என்ற பெயரில் சில பொருட்களைக் கொடுத்து மக்களைப் பிச்சைக்காரர்களாக்கி உங்களுக்கு நான் அதைச் செய்தேன், இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தேன், இதைக் கொண்டுவர வலியுறுத்துவேன் என்று மக்களை மையப்படுத்தாமல், தன்னையும் தனது குடும்பத்தையும் மையப்படுத்திப் பேசுகிற இன்றைய அரசியல்வாதிகளைப் போலவே நற்செய்தியில் வரும் பரிசேயனும் பேசுகிறான். இப்பரிசேயன் தான் சிறந்தவன், நல்லவன் என்பதைக் கூற செபத்தைக் கையாளுகிறான். இறைவனை மையப்படுத்துகிற செபத்தை, அவனை மையப்படுத்தி மாற்றியமைக்கிறான் (இதுவும் ஒரு வித சிலை வழிபாடே) தன்னை மேம்பட்டவன் என்று காட்ட மற்றவர்களை இகழ்கிறான். மொத்தத்தில் இப்பரிசேயன் தன்னிலன்பு, இறையன்பு, பிறரன்பு ஆகிய மூன்றிற்கும் எதிராகச் செயல்படுகிறான். இந்த மூன்றையும் நாம் வலுப்படுத்துவதற்காகக் கொடுக்கப்பட்டிருப்பதே இத்தவக்காலம். இதை மீண்டும் மீண்டும் உணர்ந்தவர்களாய் மாறி நம் அகந்தையை அகற்றி தாழ்ச்சியைக் கையிலெடுத்து நம்மை...

இணைந்து செல்லும் கட்டளை

மாற் 12:28-34 திருச்சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்கள் யூதர்கள். இவர்களைத் தலைமையின்று சட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வைத்து வலியுறுத்தியவர்களில் மறைநூல் அறிஞர்களின் பங்கும் மிகப் பெரியது. ஆனால் இயேசுவின் போதனையின் ஆழத்தை உணர்ந்த மறைநூல் அறிஞருள் ஒருவர் அவரை அணுகி சிறந்த கட்டளை ஏது? எனக் கேட்கின்றார். ஒரு கேள்விக்கு இரு பதில்கள் கூறப்பட்டது போலத் தோன்றினாலும், இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இறையன்பு இல்லாமல் பிறரன்பு இல்லை. பிறரன்பு இல்லாமல் இறையன்பு இல்லை. இந்த இரண்டுக் கட்டளையும் ஒன்றை விட்டு மற்றொன்று முழு அர்த்தம் பெற இயலாது. கடவுளை முழு மனத்தோடு நேசிக்கும் எவரும் கடவுளின் சாயலான (தொ.நூல் 1:27) மனித இனத்தை அன்பு செய்ய வேண்டும். ஏனெனில் அவர் வெளிப்படுத்துவது மக்களிடையே தான். எனவேதான் கடவுள் தனது ஒரே மகனை மனிதனாக இவ்வுலகிற்கு அனுப்புகிறார். (யோவான் 3:16) அதே யோவான் தனது திருமுகத்தில் கடவுளிடம்...

இரட்டை நிலைப்பாட்டைக் களைய

லூக் 11 : 14-23 இன்றைய நற்செய்தியை வாசித்தவுடன் ஒரு நகைச்சுவைதான் நினைவுக்கு வந்தது. “உனக்கு வந்தா இரத்தம் எனக்கு வந்தா தக்காளிச் சட்னியா” என்ற நகைச்சுவை. இது சிரிப்பதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்கும் நம்மை அழைக்கிறது. இதில் சிந்திக்க என்ன இருக்கிறதென்றால் நம்முடைய இரட்டை வேடம். இந்த வேடத்தை தேவைக்கு ஏற்றவாறு போட்டுக் கொள்கிறோம். தேவையில்லை என்றால் நாம் கழற்றி எறிந்து விடுகிறோம். இதனையே இன்றைய நற்செய்தியில் நம்மால் காணமுடிகிறது. பரிசேயர்கள் இயேசுவிடம் வந்து, ‘நீர் பேய்களின் தலைவரைக் கொண்டே பேய் ஓட்டுகிறீர்’ என்கிறார்கள். ஆனால் அவர்களைச் சார்ந்தவர்கள் செய்கின்ற வல்ல செயல்கள் அனைத்தும் கடவுளின் வல்லமையால் நடக்கிறது என்கிறார்கள். இதைத்தான் பலநேரங்களில் பரிசேயத்தனம் என்போம். இந்த இரட்டை நிலைப்பாட்டைக் களையவே இன்றைய நற்செய்தியும் தவக்காலமும் நம்மை அழைக்கிறது. சில இரட்டை நிலைகள் : • நான் எதையாவது சாதித்தால் அது என்னுடைய திறமையினால் என்கிறேன். அதையே மற்றவர்கள் சாதித்தால் ஏதோ...

GREAT SHAKES

“What great nation has statutes and decrees that are as just as this whole law which I am setting before you today?” —Deuteronomy 4:8 “God is Love” (1 Jn 4:16). Accordingly, He wants to give people the best, the greatest. Therefore, He raises up great people to do great things. God calls us to greatness because He is Love. We will be great and our nation will be great if we: 1) observe God’s law carefully (Dt 4:6-8; Mt 5:19), 2) teach God’s commands (Mt 5:19), and 3) love and serve God’s people (Mt 20:26). This obeying, teaching, and serving...