பரிபூரண ஆசீர்வாதம்
அன்பார்ந்த இறை மக்களே! உங்கள் ஒவ்வொருவருக்கும் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். நாம் ஒவ்வொருவரும் மிகவும் விரும்பும் காரியம் ஆசீர்வாதம். அதிலும் பரிபூரண ஆசீர்வாதம் கிடைத்தால் கூடுதல் சந்தோஷமே ஆனால் அந்த பரிபூரண ஆசீர்வாதத்தை எப்படி பெற்றுக்கொள்வது என்று யோசிப்போம். நீதிமொழிகள் 28:20 ல் இதைக்குறித்து வாசிக்கிறோம். நேர்மையாக அதாவது உண்மையாக நடப்பவர்களுக்குதான் கிடைக்கும் நீங்கள் நினைக்கலாம், உலகத்தில் எவ்வளவோ பேர்கள் அநியாயம் செய்து எல்லா ஆசீர்வாதங்களுடன் வாழவில்லையா? நீங்கள் கேட்பது சரியே. ஆனால் அவர்களின் வாழ்க்கையை உற்று பார்த்தீர் களானால் அவர்கள் எப்படி சீக்கிரமாய் பெற்றுக்கொண்டார்களோ அப்படியே சீக்கிரம் காணாமல் போய்விடும். நீதிமொழிகள் 20:21. இஸ்ரயேல் மக்களுக்கு கடவுள் சவுல் என்ற அரசரை நியமித்தார். காணாமல் போன கழுதையை தேடிச்சென்ற அவரை சாமுவேல் என்ற இறைவாக்கினர் ஆண்டவரின் திருவுளசித்தப்படி சவுலை திருநிலைப்படுத்தி இஸ்ரயேல் மக்களுக்கு அரசராக நியமித்தார். சவுல் அரசராக பொறுப்பெடுத்து அந்நாட்டை ஆட்சி செய்த பொழுது நிறைய தடவைகளில் ஆண்டவரின் வார்த்தை மீறி செயல்படுவதாக 1 சாமுவேல் புத்தகத்தில் வாசிக்கிறோம். அதனால்...