கடவுளின் மீட்பு
விண்ணுலகையும், மண்ணுலைகையும் படைத்து, விண்ணுலகை ஆள்வதற்கு தேவதூதர்களையும், மண்ணுலகை ஆள்வதற்கு தமது தொற்றத்தின்படியே மனிதனை உருவாக்கி, ஒரே இரத்தத்தால் தோன்றச் செய்து ஆசீர்வதித்து உலகம் தோன்றின காலமுதல் இன்றுவரை யதார்த்தமாய் வழிநடத்திய நம் கடவுளுக்கு மிகவும் பிரியமான அன்பானவர்களே! நாம் பாவத்திலும், சாபத்திலும், விழுந்து போகாதபடிக்கு சாத்தானின் நரித்தனமான சோதனைகளிலிருந்து மீட்கவே நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இவ்வுலகில் குழந்தையாய் அவதரித்து நம்முடைய சமாதானத்துக்காக, சந்தோசத்திற்காக அவர் தம்மையே சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தார். இயேசுகிறிஸ்து தம்மை தாழ்த்தி சிலுவையை சுமந்து தலையில் முள்முடி சூட்டப்பட்டது எதற்காக? மனுகுலமே உங்கள் ஒவ்வொருவருக்காக. கிறிஸ்து என்பது ஒருவழி. அதுவும் ஒரேவழி அதுமட்டும்தான். திருத்தூதர்பணி 4:12; யோவான் 14:6 ; அவராலே அன்றி மீட்பு யார் மூலமாகவும் இல்லை என்பதை அறிந்துக்கொள்ளுங்கள். சிலபேர் அறியாமல் அவர் கிறிஸ்துவர்களுக்காய் சிலுவை சுமந்தார் என்று நினைத்து [நானும் ஒருகாலத்தில் இதுமாதிரி அறியாமல் இருந்ததால் இதை உங்களுக்கு சொல்கிறேன்.] தங்களுக்கென்று ,ஒரு கல்லினாலோ அல்லது மரத்தினாலோ ஒரு தெய்வத்தை உண்டுபண்ணி வணங்கி அதற்கு பலி செலுத்துகிறார்கள். இந்த உலகத்தையே படைத்த கடவுளை நாம் படைக்க...