Category: தேவ செய்தி

வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகள்

திருமுழுக்கு யோவானின் பிறப்பு நிகழ்ச்சிகளையெல்லாலம் அனுபவித்திருந்த செக்கரியா, தனது மகனைப்பற்றிய நீண்டதொரு கனவை வைத்திருந்தார். கடவுள் பக்தியுள்ள ஒவ்வொரு பாரம்பரிய யூதரும் மெசியாவின் வருகைக்காகக் காத்திருந்தனர். கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்ட மெசியா வந்து, அவர்களை அடிமைத்தளையிலிருந்து மீட்பார் என்று அவர்கள் உறுதியாக நம்பினர். மெசியாவின் வருகைக்கு முன்னால், அவருடைய முன்னோடி வந்து, அவருக்கான வழியை ஆயத்தம் செய்வார் என்றும் உறுதியாக நம்பினர். செக்கரியா தனது மகனை மெசியாவின் முன்னோடியாக கனவு கண்டார். தான் அனுபவித்த நிகழ்ச்சிகள், கண்ட காட்சிகள் வழியாக, திருமுழுக்கு யோவான் தான், மெசியாவின் முன்னோடி என்பதை, அவர் ஆணித்தரமாக நம்பினார். நமது வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுமே ஏதோ ஒரு செய்தியை நமக்குத் தந்து கொண்டிருக்கிறது. தெளிவான பார்வையுடன், நமது அனுபவத்தையும் அத்தோடு இணைத்துப் பார்த்தால் நம்மால் அதை தெளிவாக உணர முடியும். அத்தகைய தெளிவைத்தான், செக்கரியா தனது வாழ்க்கையில் கண்டார். கடவுளின் செய்தியை நாம் அறிந்து கொள்ள,...

இறைவனின் திருவுளம் அறிந்து கொள்ள…

2 அரசர்கள் 22: 8 – 13, 23: 1 – 3 “ஆண்டவரின் இல்லத்தில் சட்டநூலைக் கண்டெடுத்தேன்” என்று, தலைமைக்குரு இல்க்கியா கூறும் வார்த்தைகள் இன்றைய வாசகத்தின் தொடக்கத்தில் அமைந்திருக்கின்றன. இந்த நூலின் முக்கியத்துவம் என்ன? இந்த நூல் எதைப்பற்றிக் கூறுகிறது? இந்த நூலில் மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்திருந்த சட்டங்களும், இஸ்ரயேல் மக்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளும் கொடுக்கப்பட்டிருந்தன. 2 அரசர்கள் 23: 2ல், இது உடன்படிக்கை நூல் என்று குறிப்பிடப்படுகிறது. 2 குறிப்பேடு 17: 9 ல், “ஆண்டவரின் திருச்சட்ட நூலுடன் அவர்கள் போதித்தனர்” என்கிற வார்த்தைகள் இந்த நூலையே குறிப்பிடுகிறது. 2 அரசர்கள் 11: 12 ல், யோவாசு அரசனாகிறபோது, உடன்படிக்கைச் சுருளேடு அவனிடம் கொடுக்கப்படுவது, அதனுடைய இருப்பை வெளிப்படுத்துகிறது. இணைச்சட்டம் 31: 26 ல், மனாசேயின் ஆட்சிக்காலத்தில், உடன்படிக்கைப் பேழை அருகில் அது வைக்கப்படுவதைப் பார்க்கிறோம், “இத்திருச்சட்ட நூலை எடுத்து, ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின்...

இறைவன் மீதான நம்பிக்கை

2 அரசர்கள் 19: 9 – 11, 14 – 21, 31 – 35, 36 அசீரிய மன்னன் சனகெரிபு, செதேக்கியாவிற்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அவன் கடிதம் எழுதுகிறபோது, எத்தியோப்பிய மன்னன் திராக்கா, அவனுக்கு எதிராக படைதிரட்டிக் கொண்டு வருகிறான். இந்த திராக்கா பிறப்பால் ஒரு எத்தியோப்பியன். தொடக்கத்தில் நபதாவில் தன்னுடைய ஆட்சியைத் தொடங்கிய அவன், மெல்ல மெல்ல எகிப்து முழுமைக்குமாக தன்னுடைய ஆளுமையைச் செலுத்தினான். பல போர்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். பல வெற்றிகளையும் பெற்றான். குறிப்பாக, அசீரியர்களுக்கு எதிராக பல போர்களில் ஈடுபட்டு வெற்றிகளைப் பெற்றான். கிரேக்கர்களால் மிகச்சிறந்த போர்வீரனாக அறியப்படுகிறான். கி.மு.699 ல், அவன் இன்னும் எகிப்தின் அரசனாகவில்லை. எத்தியோப்பியாவின் அரசனாகவே இருந்தான். ஆனால்,எகிப்தை தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே வைத்திருந்தான். அது அசீரிய மன்னன் சனகெரிபின் தாக்குதலுக்கு உட்பட்டதால், அதனைக் காப்பாற்றுவதற்காக, அசீரியர்களுக்கு எதிராக படைதிரட்டிக் கொண்டு வருகிறான். அதுதான், இந்த பகுதியில்...

இறைவனுக்கு கீழ்ப்படிவோம்

2அரசர்கள் 17: 5 – 8, 13 – 15, 18 வடக்கு மகாணத்தில் உள்ள, பத்து இனங்களும் வீழ்ந்து போகிற நிகழ்வுகளை இன்றைய வாசகம் நமக்கு எடுத்துக் கூறுகிறது. நெபாவின் மகனான் யெரோபாவின் தலைமையில் தொடங்கிய இந்த வடக்கு மகாண அரசு, 265 ஆண்டுகள் நீடித்தது. இந்த அதிகாரத்தின் முதல் ஆறு இறைவார்த்தைகள், இதன் அழிவைப்பற்றி நமக்கு விளக்குகிறது. அதற்கு பிறகான 25 வரை உள்ள வசனங்கள், அழிவுக்கான காரணத்தையும், கடவுள் அந்த அழிவைக் கொண்டு வந்ததை நியாயப்படுத்துவதையும், மற்றவர்களுக்கான எச்சரிக்கையாகவும் இது தருகிறது. அவர்களை அடக்கி ஆண்ட அரசுகளைப் பற்றி மற்ற இறைவார்த்தை நமக்கு எடுத்துச் சொல்கிறது. இந்த பகுதியில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம், இறைவனுடைய வார்த்தைகளுக்கு நாம் செவிகொடுக்கவில்லை என்றால், அழிவு நிச்சயம் என்பதுதான். இறைவன் இந்த மனித இனத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவராகவே இருந்திருக்கிறார். முதல் மனிதன் ஆதாமைப் படைத்தபோதும், வெள்ளத்திலிருந்து...

இயேசுவின் திருவுடல், திரு இரத்தப் பெருவிழா

உடலும், இரத்தமும்… இன்று ஆண்டவர் இயேசு தம் திருவுடலையும், இரத்தத்தையும் நமக்கு உணவாகத் தரும் அவரது பேரன்பைப் பெருவிழாவாகக் கொண்டாடுகிறோம். உடல் என்பது ஒருவரது ஆளுமையின் மிக வெளிப்படையான கூறு. மனம், ஆன்மா, உணர்வுகள் என்பவை வெளியில் தெளிவாகக் காணக்கிடைக்காத ஆளுமையின் தளங்கள். ஆனால், உடல் மட்டுமே அனைவருக்கும் அறிமுகமான, வெளிப்படையான தளம். அது மட்டுமல்ல, உடல்தான் இறைவனுக்கு அர்ப்பணம் செய்யத் தகுந்த மிகச் சிறந்த தளமும்கூட. அதனால்தான், ஆண்டவர் இயேசு தம் உடலை இறைவனுக்காகவும், நமக்காகவும் கையளித்தார். “கிறிஸ்’து உலகிற்கு வந்தபோது, ‘பலியையும், காணிக்கையையும் நீர் விரும்பவில்லை. ஆனால், ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எனவே, நான் கூறியது: உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ நான் வருகின்றேன்””“ (எபி 10: 5-7) என எபிரேயர் திருமடலில் வாசிக்கிறோம். “இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறி’ஸ்து ஒரே ஒருமுறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்”“ (எபி 10:...