தம் சகோதரர்,சகோதரிகளிடம்,சினம் கொள்வோர் தண்டனை தீர்ப்புக்கு ஆளாவார்.மத்தேயு 5 : 22
விண்ணும்,மண்ணும்,ஒழிந்துபோகும்முன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். திருச்சட்டத்தையோ, இறைவாக்குகளையோ, நான் அழிக்க வந்தேன் என நினைக்க வேண்டாம். அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். இதில் ஒரு சிறு எழுத்தும் ஒழியாது என உறுதியாக சொல்கிறேன் என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சொல்கிறார். கொலை செய்யாதே: கொலை செய்கிறவர்கள் எவரும் தண்டனைத்தீர்ப்புக்கு ஆளாவார் என்று கேள்விபட்டிருப்பீர்கள் ஆனால் நான் உங்களுக்கு சொல்கிறேன், தம் சகோதரர், சகோதரிகளிடம், சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார். தம் சகோதரரையோ, சகோதரியையோ முட்டாளே” என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார். “அறிவிலியே” என்பவர் எரிநரகத்திற்கு ஆளாவார். ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையை பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவு வந்தால் பலிபீடத்தின் முன் காணிக்கையை வைத்துவிட்டு முதலில் அவரிடம் சமாதானமாகுங்கள். என்று இயேசுநமக்கு அறிவுறுத்துகிறார். மத்தேயு 5 : 21 to 24. தமக்கு அடுத்திருப்போரை மறைவாகப் பழிப்போரை நான் ஒழிப்பேன். கண்களில் இறுமாப்பும் உள்ளத்தில் செருக்கும் உள்ளோரின்...