ஒரு குழந்தையின் ஏக்கம்
விமலா தனக்கு வந்த விசாவை பார்த்தவுடன் மகிழ்ச்சியில் பெரிதும் மகிழ்ந்தாள். ஏனெனில் இன்னும் ஒரு வாரத்தில் அவள் லண்டன் போகப் போகிறாள். அதற்கான விசா வந்து விட்டது. இனி என் வாழ்வில் எல்லாம் சந்தோசமே என்று பயணத்துக்கான ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தாள். அதற்குமுன் இங்கு உள்ள எல்லா காரியங்களையும் ஒழுங்குபடுத்தவேண்டும் என்று அதற்கான யோசனையில் மூழ்கினாள். விமலா நன்கு படித்தவள். வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்று விரும்புபவள். அவளின் பெற்றோர் எட்டு வருடங்கள் முன் அவளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நடத்தி வைத்தனர். நல்ல கணவர்.திருமணமான அடுத்த ஆண்டிலேயே அவளுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இபொழுது தனது குழந்தைக்கு ஏழு வயதாகிறது. ஆனால் குழந்தை சிறிது ஊனமுடன் இருப்பதால் மற்ற குழந்தைகள் போல் அதுவால் ஓடியாடி விளையாட முடியாது. போன வருஷம் தனது கணவர் ஒரு விபத்தில் இறந்து விட்டார். இதனால் மனது உடைந்துபோன விமலா மிகவும் கவலைக்குள்ளானாள். கணவனும் இல்லை. குழந்தையும் ஊனம் . அதனால் வாழ்க்கையே...