நம் பொக்கிஷம் எது ?
இந்த உலகத்தில் வாழும் அனைவருக்கும் விலையுயர்ந்த பொக்கிஷம் என்றால் அது நம்முடைய வேதமே! ஏனெனில் வேதத்தின் மூலம் நாம் நல்லது எது? கெட்டது எது? வாழ்வா,சாவா? அனுதின வாழ்க்கையின் போராட்டத்தில் இருந்து எப்படி நம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும், ஆசீர்வாதமா? சாபமா? எல்லாவற்றுக்கும் பதில் அதில் இருக்கிறது. அனுதினமும் வேதத்தை வாசித்து தியானித்து அதன்படி நடந்தோமானால் நம்மை யாராலும் எதுவும் செய்ய முடியாது. பயத்திலிருந்து விடுதலை, ஆபத்திலிருந்து பாதுக்காப்பு, நோயிலிருந்து சுகம், கடன் பிரச்சனையிலிருந்து சுதந்திரம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் நமக்கு கிடைக்க வேண்டுமானால் அதற்கு நாம் செய்ய வேண்டிய வேலை தினமும் காலையில் எழுந்து வேதத்தை வாசித்து ஆண்டவரை நோக்கி ஜெபித்துவிட்டு அந்த நாளுக்குரிய எல்லா காரியத்தையும் அவர் பாதபடியில் வைத்துவிட்டு அவர் சித்தப்படி நடந்துக்கொண்டால் இந்த உலகத்திலே நாம்தான் சிறந்தவர்கள். எல்லாம் நமக்கு கூட்டியே கிடைக்கும். மத்தேயு 6 :33. ஆனால் நாமோ அப்படிப்பட்ட விலையுயர்ந்த பொக்கிஷத்தை ஏதோ ஒரு மூலையில் தூசி படியவிட்டுவிட்டு எங்கெங்கோ தேடி அலைகிறோம். ஒரு பழமொழி சொல்வார்கள். “வெண்ணையை கையில் வைத்துக்கொண்டு எங்கெங்கோ தேடினார்களாம்...