Category: தேவ செய்தி

இன்றைய சிந்தனை : கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது;அதுவே ஏற்புடையது. தி.பா.147:1

யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர். தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர். ஏனெனில் அவரே விண்ணையும், மண்ணையும், கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர். என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே! ஆண்டவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார். பசியாயிருக்கிரவர்களுக்கு ஆகாரங்கோடுக்கிறார். கட்டுண்டவர்களைக் விடுதலையாக்குகிறார். ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார். தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார். நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். அனாதைப் பிள்ளைகளையும் கைம் பெண்களையும் ஆதரிக்கின்றார். நாடு கடத்தப்பட்டோரை கூட்டிச் சேர்க்கின்றார். உடைந்த உள்ளத்தை குணப்படுத்துகின்றார். அவர்களின் காயங்களை கட்டுகின்றார். விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி,அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார். அவரே வல்லமையுள்ளவர். அவருடைய நுண்ணறிவு அளவிடமுடியாது.எளியோருக்கு ஆதரவு அளித்து பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார்.ஆகையால் ஆண்டவருக்கு நன்றி செலுத்து பாடுங்கள்.நம் கடவுளை யாழ்கொண்டு புகழ்ந்து பாடுங்கள். நாம் இந்த உலகில் ஒவ்வொருநாளும் வாழ்வது அவரது கிருபையே ஆகையால் எந்த நிலையிலும் அவரை போற்றி துதித்து ஆராதிப்போம். அவரால் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும்...

இன்றைய சிந்தனை : ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர். எரேமியா 17:7

இன்றைய சிந்தனை: ஆண்டவர் கூறுவது இதுவே: மனிதரில் நம்பிக்கை வைப்போரும்,வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக் காண்போரும் சபிக்கப்படுவர். அவர்கள் பாலைநிலத்துப் புதர்ச்செடிக்கு ஒப்பாவார்.பருவ காலத்திலும் அவர்கள் பயனடையார்கள்;பாலை நிலத்தின் வறண்ட பகுதிகளிலும் யாரும் வாழா உவர் நிலத்திலுமே அவர்கள் குடியிருப்பார். ஆனால், ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்:ஆண்டவரே அவர்களது நம்பிக்கை.அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட மரத்துக்கு ஒப்பாவார்கள்.அது நீரோடையை நோக்கி வேர்விடுகின்றது. வெப்பமிகு நேரத்தில் அதற்கு அச்சமில்லை.அதன் இலைகள் பசுமையாய் இருக்கும் வறட்சிமிகு ஆண்டிலும் அதற்குக் கவலை இராது; அது எப்போதும் கனி கொடுக்கும். ஒருநாள் ஒரு சிறு பையன் ஆலயத்தில் போதகர் சொன்ன வசனத்தைக் கேட்டுக்கொண்டு இருந்தான்.அன்று அவர் மத்தேயு 17:27 ல் உள்ள வசனத்தை விளக்கிக் கொண்டு இருந்தார்.அதைக்கேட்ட அவனுக்குள் ஆண்டவர் பேரில் நம்பிக்கை அதிகமாகியது.இயேசு பேதுருவிடம் நீ கடலுக்கு போய் தூண்டில் போட்டு முதலில் அகப்படும் மீனின் வாயை திறந்துப்பார். அதில் என் சார்பாகவும்,உன் சார்பாகவும், செலுத்த வேண்டிய நாணயத்தை காண்பாய்.அதை கொடுத்து நீ வரியை செலுத்துவிடு என்று சொல்கிறார். இதை போதகர் சொன்னதைக் கேட்டு...

மக்களுக்கு நேரிடும் தீங்கை எவ்வாறு காண இயலும்? எஸ்தர் 8:6

தாய்,தகப்பன் இல்லாத படிப்பறிவில்லாத எஸ்தர் தன்னை வளர்த்து ஆளாக்கிய மொர்தெகாய் என்ற சகோதரனுக்கு எல்லா விஷயத்திலும் கீழ்படிந்து நடந்து தனது மிகுந்த அன்பினாலும், பொறுமையினாலும் தன்னுடைய குலமாகிய யூதா குலம் முழுதும் அழியும் சூழ்நிலையில் இருந்ததை காப்பாற்றி சரித்திரத்தில் இடம் பெற்றிருப்பதை பார்க்கும்பொழுது, அதை படிக்கும் பொழுது பெண்களாகியநாம் ஒவ்வொருவரும் நன்கு தியானிக்க வேண்டுமாய் இதை எழுதுகிறேன். இந்தியா முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்கும் உள்ள 127 மாநிலங்களையும் ஆட்சி செய்த ஒரு ராஜாவிடம் சென்று தன் குலத்தை காப்பாற்ற நான் செத்தாலும் சாகிறேன்,என்று சொல்லி துணிந்து ராஜாவின் முன் சென்று தன்னுடைய விண்ணப்பத்தை தெரிவிக்கிறதை பார்க்கிறோம்.ஆனால் அதற்கு முன் மூன்று நாள் இரவு,பகல் உண்ணாமலும், தண்ணீர் முதற்கொண்டு குடியாமலும் பக்தியோடு இறைவனிடம் வேண்டுதல் செய்து நோன்பிருந்து பின் ராஜாவிடம் சென்று தனது விருப்பத்தை தெரிவித்து, அதுவும் உடனே தெரிவிக்கவில்லை. ஞானமாக நடந்து அதாவது இரண்டு நாள் ராஜாவுக்கு விருந்து ஏற்பாடு செய்து அதில் ராஜாவை கலந்துக்கொள்ள பணிவுடன் அழைத்து பின் தனது மன்றாட்டை தெரிவிக்கிறாள். இன்றைய சூழ்நிலையில்...

எல்லா வேண்டல்களையும்,மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள்.எபேசியர் 6:18

ஆண்டவரோடு இணைந்து அவர் தரும் வலிமையாலும் ஆற்றலாலும் வலிவூட்டப்பெறுங்கள். ஏனெனில் சாத்தானின் சோதனைகளால் மனம் சோர்ந்து விடுவோம். அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமைபெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. ஆட்சிபுரிவோர்,அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின்மீது ஆற்றல் உடையோர் வான்வெளியிலுள்ள தீய ஆவிகள்,ஆகியவற்றோடும் போராடுகிறோம்.எபே 6:10 to 12. எனவே பொல்லாத நாள் வரும்போது, எதிர்த்து நின்று அனைத்தின்மீதும் வெற்றிபெற்று நிலைநிற்க வல்லமை பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆகையால் உண்மையை இடைக்கச்சையாகக் கட்டிக்கொண்டு, நீதியை மார்புக் கவசமாக அணிந்து நில்லுங்கள். அமைதியை அருளும் நற்செய்தியை அறிவிப்பதற்காக உங்கள் காலில் ஆயத்த நிலையை மிதியடிகளாக போட்டுக்கொள்ளுங்கள். எந்நிலையிலும் நம்பிக்கை என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள். அதைக்கொண்டு தீயோனின் தீக்கணைகளையெல்லாம் அணைத்து விட முடியும். ஆண்டவர் அருளும் மீட்பைத் தலைச் சீராகவும், கடவுளின் வார்த்தையைத் தூய ஆவிஅருளும் போர்வாளாகவும் எடுத்துக்கொள்ளுங்கள். எல்லா வேண்டல்களையும்,மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள். எப்போதும் தூய ஆவி துணைக்கொண்டு வேண்டுதல் செய்யுங்கள். இதில் உறுதியாய் நிலைத்திருந்து விழிப்பாயிருங்கள். இறைமக்கள்...

கடவுளுக்கு அஞ்சுங்கள் ; அவரைப் போற்றிப் புகழுங்கள்.தி.வெ 14 : 7

திருத்தூதர்களாகிய பேதுருவும்,யோவானும்,மக்களோடு பேசிக்கொண்டிருக்கையில் குருக்களும், சதுசேயர்களும் அங்கு வந்து இயேசுவை குறித்து அறிவிப்பது பிடிக்காததால் அவர்களை காவலில் வைத்து பின்பு இயேசுவைப் பற்றி எதுவும் பேசக் கூடாது என்று சொல்லி பின் விடுதலை செய்தனர். அப்பொழுது பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நீங்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார். இந்த இயேசுவே, ” கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகிறார் “. இயேசுவாலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால், நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை, என்று இயேசுவுக்கு என்று அவரின் நாமத்துக்காக,துணிவோடு மக்களுக்கு எடுத்துரைத்தனர். அவர்களின் துணிவைக்கண்ட தலைமைச் சங்கத்தார் வியந்து நின்றனர். ஏனெனில் அவர்களால் சுகம் பெற்ற மனிதர் பக்கத்தில் நின்றதால் சங்கத்தாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் இயேசுவைப்பற்றி சொல்லக் கூடாது என்று சொல்லியும் கேட்காமல் தைரியத்துடன் உங்களுக்கு செவிசாய்ப்பதா ? கடவுளுக்கு செவிசாய்ப்பதா...