உங்கள் உள்ளத்துக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.மத்தேயு 11 : 29
வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய ஆண்டவர் நம்மேல் அன்புகொண்டு, மனதுருகி நம்முடைய கஷ்டங்களையும், துன்பங்களையும் நீக்கிப்போட, நமக்கு சந்தோஷத்தையும், சமாதானத்தையும், தர நம்மை நோக்கி கூப்பிட்டு இவ்வாறு சொல்கிறார்.பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள் . நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும், மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது.” என்றார். மத்தேயு 11:28,29 ல் படிக்கிறோம். மேலும் ஆண்டவர் நமக்கு இவ்வாறாக வாக்கு அருளுகிறார். அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். யோவான் 14 : 27. இவ்வளவு அன்பும், மனதுருக்கமும் உள்ள ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாம் எதற்காக கவலைப்படவேண்டும். நமக்காக உயிரையே கொடுத்த கடவுள் நம்மோடு இருக்கும்பொழுது நாம் எதற்கு தேவையில்லாமல்...