நம்முடைய சூழ்நிலைகளை அறிந்து செயல்படும் தேவன்
இயேசுகிறிஸ்து இந்த உலகில் வந்து பிறந்து தமது தந்தையின் எல்லா நினைவுகளையும் செயல்படுத்தி சென்றுள்ளார். மீதி பணியை நிறைவேற்ற மனிதர்களை ஏற்பாடு செய்திருக்கிறார். இயேசு எப்படி தம் தந்தையின் திருவுளத்தை அறிந்து செயல்பட்டாரோ அதேபோல் நாமும் அவரின் சித்தம் அறிந்து செயல்படவே விரும்புகிறார். நாம் திருப்பாடல்கள் 4 : 3 ல் இவ்வாறு வாசிக்கிறோம். ஆண்டவர் என்னைத்தம் அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்; நான் மன்றாடும்போது அவர் எனக்குச் செவி சாய்க்கின்றார் என்றும் 8 : 5 ம் வசனத்தில் ஆயினும் அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர் ; மாட்சியையும், மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டி உள்ளீர். உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர் என்று வாசிக்கிறோம். தந்தை எப்படி தமது குமாரனுக்கு எல்லா அதிகாரத்தையும் கொடுத்தாரோ, ஆண்டவர் அவரைப் பின்பற்றி நாமும் செயல்படவேண்டுமாக விரும்புகிறார். ஆண்டவர் அதற்காகவே நம்மை அழைத்து இருக்கிறார். எல்லாவற்றையும் அவர் விரும்பும் விதத்தில் செய்து முடிக்கும்படி நமக்கு ஞானத்தையும், அறிவையும் கொடுத்திருக்கிறார். நம்முடைய எல்லா சூழ்நிலைகளையும்...