Category: தேவ செய்தி

அன்பை அருளும் ஆண்டவர் நமக்கு உண்டு

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மீது அன்புக்கூர்ந்தார்.யோவான் 3 : 16. இந்த உலகில் வந்த யாவரையும் மீட்கும்படி தமது அன்பு முழுவதையும் நம்மேல் பொழிந்து நமக்கு நித்திய வாழ்வை அளித்திருக்கிறார். நாம் கவலை அற்றவர்களாய் வாழும்படி நம்முடைய சுமையை அவரே சுமந்து நமக்கெல்லாம் இளைப்பாறுதலை தந்திருக்கிறார். கனிவும், மனத்தாழ்மையும் உள்ள ஆண்டவர் நமது நுகத்தை அவர்மேல் ஏற்றுக்கொண்டு நமக்கு விடுதலை அளித்துள்ளார். அவரே நம் தந்தை. அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன.அவருக்காகவே நாம் இருக்கின்றோம். அதற்காகவே நம்மை படைத்துள்ளார். அந்த அன்பின் தெய்வத்தின் வழியில் நடந்து இளைப்பாறுதலை பெற்றுக்கொள்வோம். அவரே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. ஆண்டவரின் அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். அவரின் அன்புக்கு அழிவே இல்லை. இந்த உலகில் எந்த ஒரு கடவுளும் செய்யாத காரியத்தை நம்முடைய ஆண்டவர் நமக்கு செய்திருக்கிறார். அன்பின் மகத்துவத்தையும்,வல்லமையையும், நமக்கு புரிய வைக்கவே மனித உருக்கொண்டு இந்த உலகிற்கு வந்தார். தமது உயிரையும் கொடுத்தார்....

கர்த்தர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களை காப்பார்

இயேசுகிறிஸ்துவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப் பட்டவர்களாயுமிருக்கிற ஒவ்வொருவரின் பாதங்களையும் ஆண்டவர் காத்துக்கொள்வார். யார் அந்த பரிசுத்தவான் கள் என்றால் அவருக்கு கீழ்படிந்து பயந்து,அவரின் சித்தத்தை செயல்படுத்தும் ஒவ்வொருவரும் பரிசுத்தவான்களே ஆவார்கள். அவரால் பெயர் சொல்லி அழைக்கப்பட்டு அவரின் இரத்தத்தால் தூய்மையாக்கப்பட்டு அவருடைய நற்செய்தியை அறிவிப்பாளர்களாகவும் அவரின் நல்வாழ்வைப் பலப்படுத்தும் நலம்தரும் செய்தியை உரைத்து, அவர் தரும் விடுதலையை எல்லாம் மக்களும் பெற்றுக்கொள்ளும் வண்ணம் பறைசாற்றி நம் கடவுள் ஒருவரே அரசாளுகின்றார் என்று எடுத்துரைத்து வருபவர்களின் பாதங்களை ஆண்டவர் அழகாக ஒரு தீங்கும் அவர்களை தொடாதபடிக்கு அவர்களுடைய பாதங்களை காப்பார். ஏசாயா 52:7 :நாகூம் 1:15 மற்றும் உரோமையர் 10:15 ஆகிய வசனங்களில் வாசிக்கலாம். அப்பேற்பட்ட பரிசுத்தவான்கள் உலகத்தை நியாந்தீர்ப்பார்களென்று நாம் அறிந்து கொள்ளவேண்டும். நமக்கு ஒரு வழக்கு ஏதாவது உண்டானால் நாம் அவர்களிடம் சென்று நமது வழக்கை தீர்த்துக்கொள்ளலாம் என்று 1 கொரிந்தியர் 6:1,2,3 ஆகிய வசனங்கள் கூருகிறது. அவர்கள் தேவதூதர்களையும் நியாந்தீர்ப்பார்கள் . ஆண்டவர் இந்த உரிமையை நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கிறார். ஏனெனில் அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்ட...

இருளில் வாழும் மக்கள் வெளிச்சத்தை காண்பார்களாக!!!

அன்பாவர்களே!! MyGreatMaster.com ஆரம்பித்து இன்றுடன் நான்கு வருஷம் முடிந்து 5 வது வருஷத்தில் காலடி எடுத்து வைக்கிறது. இந்த உலகின் ஒளி யாகிய இயேசுகிறிஸ்து இருளில் இருக்கும் மக்கள் யாவரும் வெளிச்சத்தை காணும்படிக்கு இந்த உலகிற்கு ஒளியாக வந்தார். அவரை அறியாத மக்கள் யாவரும் அவரை அறிந்துக்கொள்ள வேண்டுமாக இந்த website மூலம் அவரைப்பற்றி பறைசாற்றி அவருடைய நிலைவாழ்வை எல்லா மக்களும் பெற்றுக்கொள்ள வேண்டுமாக எங்களால் ஆன முயற்சிகளில் ஈடுபட்டு ஆண்டவரின் வார்த்தைகளை பல வடிவில் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம் . அவரை அறிந்த மக்கள் இன்னும் அவரின் வார்த்தைகளில் பெலப்பட்டு அவரின் வருகைக்கு ஆயத் தமாக வேண்டுமாக விரும்புகிறோம். இந்த உலகில் வந்து பிறந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி .[ யோவான் 1:9 ] காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது.”மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ” எனப் பறைசாற்றத் தொடங்கினர் என்று மத்தேயு 4 : 16,17 ஆகிய...

ஆண்டவரின் இரக்கம் தீர்ந்து போகவில்லை

ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை. காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன! நீரே பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!” ஆண்டவரே என் பங்கு” என்று என் மனம் சொல்கின்றது! எனவே அவரில் நம்பிக்கை கொள்கிறேன். ஆண்டவரில் நம்பிக்கை வைப்போருக்கும், அவரைத் தேடுவோருக்கும் அவர் நல்லவர்! அவர் அருளும் மீட்டுப்பாக அமைதியுடன் காத்திருப்பதே நலம்!அவர் நம்மை வருத்தினாலும் தம் பேரன்பால் இரக்கம் காட்டுவார். மனமார அவர் நம்மை வருத்துவதுமில்லை. துன்புறுத்துவதுமில்லை. துன்பங்களின் வழியாக நாம் கடந்து செல்லும்பொழுது நாம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறோம். தங்கம் அக்கினியினால் உருக்கப்பட்டால்தான் புது, புது வடிவத்தில் பலவகையான ஆபரணங்கள் கிடைக்கிறது. நம்முடைய ஆத்துமாவோ அதைவிட மேலானது. அது சோதிக்கப்படும்பொழுது நமக்குள் பொறுமையும், அமைதியும், அன்பும் நிலைத்திருக்க உதவி செய்கிறது. உபத்திரவம் பொறுமையை கற்றுக்கொடுக்கிறது. தி.பாடல்கள் 119:71 ம் வசனம் இதையே சொல்கிறது. எனக்கு துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே: அதனால் உம் விதிமுறைகளைக் கற்றுக்கொண்டேன். கடவுள் ஒரு காரியத்தை கட்டளையிடவில்லை என்றால் அவர் சொல்லியதை யாரால் நிறைவேற்றக்கூடும்? நன்மையும் தீமையும் உன்னதரின் வாயினின்றே புறப்படுகிறது. ஆகையால்...

நம்முடைய பாவங்களை மன்னித்து நலன் அளிப்பார்

எனது பெயரைப் போற்றிடும் என் மக்கள் சிறுமையுற்று, தங்கள் பாவங்களிலிருந்து மனம் வருந்தி, இரந்து மன்றாடி, என் திருமுகத்தை நாடினால், வானகத்திலிருந்து அவர்களது மன்றாட்டைக் கேட்டு அவர்கள் பாவங்களை மன்னிப்பேன். அவர்களது நாட்டுக்கு நலன் அளிப்பேன் என்று நம்முடைய ஆண்டவர் நமக்கு வாக்கு அருளியிருக்கிறார். 2 குறிப்பேடு 7 : 14. நாம் நமது பாவங்களை அறிக்கை செய்து மறுபடியும் அதை செய்யாதபடிக்கு விட்டுவிட்டால் ஆண்டவரும் நமக்கு மன்னித்து அவற்றை கடலின் ஆழத்தில் போட்டுவிட்டு நம்மை எல்லா ஆபத்துக்கும் விலக்கி காத்து நம்மேல் அன்புக்கூர்ந்து உயர்த்தி ஆசீர்வதிப்பார். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டால் நாமும் ஆண்டவரைப்போல் மறுரூபமாக்கப்படுவோம். எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது. ஏசாயா 60:1ல் வாசிப்பதுபோல ஆண்டவர் அவரின் முகத்தை நம்மேல் உதிக்கப்பண்ணுவார். இதோ! இருள் பூவுலகை மூடும்: காரிருள் மக்களினங்களைக்கவ்வும்: ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்: அவரது மாட்சி உன்மீது தோன்றும். அன்பானவர்களே! நாமும் ஒவ்வொருநாளும் காலையில் எழுந்து ஆண்டவரின் சமூகத்தை நித்தமும் தேடினால் அந்தந்த...