”அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்” (லூக்கா 12:7)
விவிலியத்தில் பல இடங்களில் ”அஞ்சாதீர்கள்” என்னும் சொல் ஆளப்படுவதை நாம் காணலாம். இதோ ஒருசில எடுத்துக்காட்டுகள்: எசாயா 43:1-2; நீதிமொழிகள் 3:25-26; லூக்கா 1:30; மத்தேயு 10:29-30. மனிதரின் வாழ்க்கையில் அச்சம் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நமக்கு ஏதோ ஆபத்து நிகழப்போகிறதோ என்னும் எண்ணம் மேலோங்குகின்ற வேளையில் நாம் அச்சமடைகிறோம். நமக்கு ஏற்படுகின்ற பயம் பிற மனிதர் நமக்குத் தீங்கிழைக்கப் போகிறார்களோ என நாம் நினைப்பதால் ஏற்படலாம். அல்லது இயற்கை நிகழ்வுகள் நம் உள்ளத்தில் பயத்தை எழுப்பலாம். அன்றாட உணவும், வாழ்வதற்குத் தேவையான பொருளாதாரமும் நமக்கு இல்லையே என்னும் உணர்வினால் பயம் தோன்றலாம். நோய்நொடிகள் ஏற்படும்போதும், நம்மைச் சார்ந்திருப்போருக்குத் தீங்கு ஏற்பட்டுவிடுமோ என நாம் நினைப்பதாலும் அச்சம் தோன்றலாம். மனித வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் அச்சம் ஏற்படக் கூடும். ஆனால் விவிலியம் நமக்குத் தருகின்ற செய்தி, ”எதைக் கண்டும் நீங்கள் அஞ்சவேண்டாம்” என்பதே. நாம் உண்மையிலேயே அஞ்சவேண்டிய ஒருவர் உண்டு....