Category: தேவ செய்தி

மனமாற்றம்

உண்மையான மனமாற்றம் என்றால் என்ன? மனமாற்றம் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு இன்றைய நற்செய்தியில் வரும், இளைய மகன் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறான். மனமாற்றம் என்பது, ஒருவரின் வாழ்க்கையையே புரட்டிப்போடுகிற அனுபவம். இறந்து, மீண்டும் உயிர்த்த அனுபவம். வாழ்க்கை முடிந்து விட்டது, என்ற நம்பிக்கையிழந்த சூழலில், மீண்டும் ஒருமுறை வாழ்வதற்கு கொடுக்கப்பட்டிருக்கிற வாய்ப்பு. தவறுகள் கொடுத்த பாடங்களை அனுபவமாக ஏற்று, சிறப்பாக வாழ வேண்டும் என துடிக்கும் ஒரு வேட்கை. அது தான் உண்மையான மனமாற்றம். தன்னை மகனாக ஏற்க வேண்டும் என்று, அவன் நினைக்கவில்லை. தன்னுடைய தந்தையின் பணியாட்களுள் ஒருவனாக ஏற்றுக்கொண்டாலே போதும், என்பதுதான் அவனின் எண்ணம். தன்னுடைய தகுதியின்மையை, இளைய மகன் உணர்கிறான். தந்தை அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவன் ஒருபோதும் எண்ணவில்லை. தான் செய்தது தவறு. அதற்கு விமோசனமே கிடையாது என்பதுதான், இளைய மகனின் மனநிலை. அந்த மனநிலையோடு தான் அவன் தந்தையிடம் திரும்பி வருகிறான்....

உண்மையான செபம் எது?

பக்தியுள்ள யூதர் காலை, மதியம், மாலை என மூன்றுவேளைகள் செபம் செய்வார். அதுவும் ஆலயத்திற்கு வந்து செபிப்பது சிறந்த அருளைப்பெற்றுத்தரும் என்பதால், ஆலயத்திற்கு வந்து பலர் செபித்தனர். யூதச்சட்டம் ஆண்டிற்கு ஒருமுறை பாவக்கழுவாய் நாளன்று மட்டும் நோன்பிருக்க அறிவுறுத்தியது. ஆனால், சிலர் கடவுளின் அருளை சிறப்பாகப் பெறுவதற்காக வாரம் இருமுறை திங்களும், வியாழனும் நோன்பிருந்தனர். இந்த இரண்டு நாட்களும்தான் யெருசலேமில், மக்கள் பொருட்களை வாங்க சந்தைகளில் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, விளைச்சலில் பத்தில் ஒரு பங்கு கொடுக்க வேண்டுமென்று இணைச்சட்டம்(14:22), கூறுவதன் அடிப்படையில், யூதர்கள் இதைப்பின்பற்றினர். இந்தப்பாரம்பரிய முறைகளை பரிசேயர்கள் மக்கள் பார்க்க வேண்டுமென்பதற்காக செய்தார்கள். மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஆலயத்திற்கு வந்து செபித்தார்கள், தாங்கள் நோன்பிருப்பது தெரியவேண்டும் என்பதற்காக, தங்கள் முகத்தை வெள்ளையாக்கிக்கொண்டு சந்தைவெளிகளில் நடந்தார்கள், அதேபோல கொடுக்கத்தேவையில்லாத பொருட்களிலும் பத்திலொரு பங்கைக்கொடுத்தார்கள். இன்றைய நற்செய்தியில், பரிசேயர் மற்றும் வரிதண்டுபவர் ஆலயத்தில் நின்று செபிக்கிறார்கள்....

கடவுளன்பும், பிறரன்பும்

யூதச்சட்டங்களைப்பொறுத்தவரையில், இரண்டுவிதமான பார்வைகள் இருந்தது. சட்டங்களில் பெரிய சட்டங்கள் தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என ஒரு குழுவும், சிறிய பெரிய என அனைத்து சட்டங்களும் முக்கியத்துவம் வாய்ந்தது என மற்றொரு குழுவும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். இப்படிப்பட்டச் சூழ்நிலை இருந்த காலத்தில்தான், ஒருவர் இயேசுவிடம் வந்து, ”அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்கிறார். அந்த மனிதர் இந்த இரண்டு பார்வையைப் பிரதிபலிக்கிறார். அனைத்திலும் முதன்மையானது கடவுளன்பா? அல்லது பிறரன்பா? என்பதுதான் அவர் கேட்ட கேள்வி. ஒரு குழு கடவுளை அன்பு செய்வதுதான் முதன்மையானது என்று நம்பியது. ஏனென்றால், கடவுள்தான் அனைத்திற்கும் மேலானவர். அவரன்றி அணுவும் அசையாது என்று உறுதியாக நம்பினர். மற்றொரு குழுவோ, மற்றவர்களை அன்பு செய்வதைத்தான் கடவுள் முழுமையாக விரும்புகிறார் என்று நம்பினார்கள். இயேசு இரண்டையும் இணைத்துப்பேசுகிறார். அதுதான் இயேசுவின் சிறப்பு. இதுவரை எந்த யூத போதகர்களும், இரண்டையும் இணைத்து விளக்கம் தந்ததில்லை. ஆனால், இயேசு கடவுளன்பையும், பிறரன்பையும்...

இயேசுவோடு இருப்போம்

நேர்மையான வழியில் இயேசுவை எதிர்கொள்ளமுடியாத, திராணியில்லாத இயேசுவின் எதிரிகள் அவர் மீது காழ்ப்புணர்ச்சிகொண்டு, ஆதாரமில்லாத பழியை அவர்மீது போடுகிறார்கள். இயேசு பழிச்சொற்களைக்கண்டு பயந்து நடுங்குகிற கோழையல்ல. அவர்களின் வார்த்தைகளைக்கொண்டே வாதத்தைத் தொடங்குகிறார். அவர்களின் தீய எண்ணத்தை முறியடிக்கிறார். இயேசுவின் வல்லமை கடவுளிடமிருந்து அல்ல, பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலிடமிருந்து வருகிறது என்பது அவருடைய எதிரிகளின் குற்றச்சாட்டு. இயேசு அவர்களுக்குத் தருகிற பதில்: ‘நான் பெயல்செபூலைக்கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால், உங்களைச்சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? என்பது. பாலஸ்தீனத்திலே பேயை ஓட்டுகிறவர்கள் பலர் இருந்தார்கள். அவர்கள் சாலமோன் பேய் ஓட்டுவதற்கு கண்டுபிடித்த ஒருசில முறைகளை கையாண்டு பேய்களை ஓட்டிவந்தனர். அதை மக்கள் ஏற்றுக்கொண்டனர். எனவேதான், இயேசு அவர்களிடம் இப்படியொரு கேள்வியைக்கேட்கிறார். இயேசுவை அவர்கள் குற்றம் சாட்டுவது அவர்கள் மீதே அவர்கள் குற்றம்சாட்டுவதற்கு சமம். இயேசுவோடு இராதவர்கள் கடவுளோடு இல்லை என்பதாக இயேசு சொல்கிறார். “என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார். என்னோடு இணைந்து...

அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்

திருச்சட்டத்தையோ, இறைவாக்குகளையோ நான் அழிக்க வரவில்லை, மாறாக அதை நிறைவேற்றவே வந்தேன்’ என்று இயேசு கூறுகிறார். ‘நிறைவேற்றுதல்’ என்பதை முழுமைப்படுத்துதல், முழு அர்த்தத்தைக்கொண்டு வருதல், உண்மையான பொருளை உணரவைத்தல் என்று நாம் பொருள்படுத்தலாம். திருச்சட்டம் வாயிலாக கடவுளின் திருவுளம் என்பதை அறிந்து, அதை நிறைவேற்றுவதற்காக, தன்வாழ்வையே முழுமையாக அர்ப்பணிப்பதாகும். இயேசு திருச்சட்டத்தை அழிக்கவரவில்லை, மாறாக, அதனுடைய உண்மையான அர்த்தத்தை நாம் அறியவேண்டும் என்பதற்காக வந்திருப்பதாகச்சொல்கிறார். அப்படியானால், திருச்சட்டத்திற்கு பொறுப்பாளர்களாக அதுவரை இருந்த, மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் அதனுடைய உண்மையான அர்த்தத்தைக்கூறவில்லையா? என்ற கேள்வி நமக்குள்ளாக எழலாம். மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும் கடவுளின் திருவுளத்தை, திருச்சட்டம் வாயிலாக அறிவதில் முழுமுனைப்பு காட்டினார்கள். உண்மைதான். அதை அறிந்து அர்ப்பண உணர்வோடு வாழ முனைப்பும் காட்டினார்கள். ஆனால், பிரச்சனை அவர்களின் செயல்பாட்டில் இருந்தது. உதாரணமாக, அனைத்துக்கட்டளைகளுக்கும் ஆதாரமாக இருக்கக்கூடிய பத்துக்கட்டளைகளை எடுத்துக்கொண்டால், அவற்றின் பொருளை ஒரே வார்த்தையில் நாம் அடக்கிவிடலாம். அதுதான் அன்பு. எல்லாவற்றிற்கும் மேலாக...