Category: தேவ செய்தி

விண்ணக வாழ்வு

இறப்பு என்பது இந்த உலகத்தின் கொடுமையான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஒருவிதத்தில் நம்முடைய அனுபவத்தில் அது உண்மையும் கூட. ஒருவருடைய இழப்பு எந்த விதத்திலும் ஈடுசெய்ய முடியாத ஒன்று. இது இந்த உலக கண்ணோட்டம். அதே வேளையில், நாம் அடைய வேண்டிய இலக்கைப்பற்றிய தெளிவு நம்மிடம் இருந்தால், இந்த இழப்பின் ஆழம், ஓரளவுக்கு நம்மை பாதிக்காமல் இருக்கும் என்பதுதான் உண்மை. அதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தி வாயிலாக கற்றுத்தருகிறார். இந்த உலகம் நாம் அடைய வேண்டிய இலக்கு அல்ல. இந்த உலகத்தைத் தாண்டிய இலக்கு தான் நமது இலக்கு. ஆனால், இந்த உலகத்தை நாம் இலக்காக வைத்திருக்கிறோம். இயேசு இன்றைய நற்செய்தியில் தெளிவாகச் சொல்கிறார்: ”நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால், நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி அடைவீர்கள்”. ஆக, இயேசு சீடர்களைவிட்டு பிரிந்து செல்லக்கூடிய அனுபவம், அவர்களுக்கு மகிழ்ச்சியைத்தர வேண்டும் என்று, கூறுகிறார். தந்தையிடம் செல்வதுதான் அனைவரின் இலக்கு. தந்தையிடம் செல்வது...

துன்பத்தின் வழியாகவும் நற்செய்தி அறிவிப்பு!

மாற்கு நற்செய்தியாளரின் விழாவாகிய இன்று நமது நற்செய்தி அறிவிப்புக் கடமையைப் பற்றிச் சிறிது சிந்திக்க அழைப்பு விடுக்கிறது திருச்சபை. நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்று கட்டளையிடுகிறார். நற்செய்தி அறிவிப்பின் அடையாளங்களையும் ஆண்டவர் பட்டியல் இடுகிறார். அவற்றில் முகாமையான ஒன்று உடல் நலமற்றோரைக் குணமாக்குவது. நோயுற்றோருக்காகப் பரிந்து மன்றாடி அவர்களை நலம்பெறச் செய்வது ஒரு நற்செய்தி அறிவிப்பு உத்தி. அதே வேளையில், முதல் வாசகத்தின்படி, “சிறிது காலத் துன்பங்களுக்குப் பின் அவர் உங்களைச் சீர்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார்” என்னும் செய்தியின் வழியாக பேதுரு, துன்பத்தின் வழியாகவும் நாம் நற்செய்தி அறிவிக்க முடியும் என ஊக்குவிக்கிறார். எனவே, நோயுற்றோருக்காக மன்றாடுவதோடு, அவர்கள் நலம் பெற இயலாவி’ட்டால், அத்துன்பத்தைப் பொறுத்துக்கொள்வதன் வழியாக சான்று பகரும் வாய்ப்பினை அவர்கள் பெறுகின்றனர் என்னும் செய்தியையும் நாம் பகிர்ந்துகொள்வோம். மன்றாடுவோமாக: உயிர்த்த மாட்சி மிகு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். இறைவா...

இயேசுவின் அன்பு

அன்பு என்கிற வார்த்தைக்கான விளக்கத்தை இன்றைய வாசகம் நமக்குத்தருகிறது. நான் ஒருவரை அன்பு செய்கிறேன் என்பதை, ஒரு மனிதன் பலவிதமான பண்புகள் மூலமாக வெளிப்படுத்துகிறான். மொத்த பண்புகளின் ஒட்டுமொத்த தொகுப்பே அன்பு என்றால், அது மிகையல்ல. இத்தகைய அன்பின் பலவிதமான பரிமாணங்களை இன்றைய நாளில் நாம் சிந்திப்போம். பொதுநலம், புரிதல், தியாகம் மற்றும் மன்னிப்பு இணைந்த ஒரு கலவை தான் அன்பு. இன்னும் இதற்குள் ஏராளமான பண்புகளை நாம் உள்ளடக்க முடியும். அன்பை வெளிப்படுத்தக்கூடிய காரணிகளாக இவை விளங்குகிறது. இயேசு தன்னுடைய சீடர்களை அன்பு செய்கிறேன் என்பதை, இதன் மூலமாகத்தான் வெளிப்படுத்துகிறார். இயேசுவின் வாழ்வில் பொதுநலம் மிகுந்திருந்தது. தன்னுடைய சீடர்கள் தவறு செய்தாலும், அதனை மிகைப்படுத்தாமல் புரிந்து கொள்கிறார். அவர்களை அவர் தீர்ப்பிடவில்லை. அவர்களுக்காக, மக்களுக்காக தன்னையே தியாகம் செய்கிறார். சீடர்கள் தவறு செய்தாலும் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார். இவ்வாறு இயேசு சீடர்கள் மட்டிலான தனது அன்பை வெளிப்படுத்துகிறார். அன்பு என்பது...

எதை கேட்டாலும் செய்வேன்

நம் வாழ்க்கையில் மிகப் பெரிய ஆசீர்வாதம் நாம் கேட்டவை அனைத்ததையும் பெற்றுக்கொண்டோம் என்பதுதான். “நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன்” (யோவான் 14:13, 14:14) இரண்டு முறை இயேசு இதைச் சொல்லுகிறார்.அவ்வாரே நம்பிக்கையோடு கேட்ட யாவரும், கேட்ட அனைத்தையும் பெற்றுள்ளனர் என்பதையும் விவிலியத்தின் பல சான்றுகளில் அறிய வருகிறோம். இவ்வாறு கேட்ட அனைத்தையும் நாம் பெற வேண்டுமானால், அந்த ஆளைப்பற்றிய அனுபவம், அறிவு இருக்கவேண்டும். இந்த ஆளிடம் இதைக்கேட்டால் கிடைக்கும் என்ற அனுபவமும் அறிவும் அவசியம் தேவை.இயேசுவைப்பற்றிய அனுபவமும் அறிவும் நாம் கேட்ட அனைத்தையும் நமக்குத் தர வல்லது. இதைத்தான் கடவுள் நம்பிக்கை அல்லது விசுவாசம் என்று சொல்லலாம். இன்று வரையிலும் அந்த அன்பு தெய்வம் நமக்குச் செய்துவருகிற நன்மைகளை நாம் ஆழ்ந்து சிந்தித்தாலே இந்த இறை அனுபவத்தைப் பெற்றுவிடுவோம்.பெரும்பாலும் கடவுள் நமக்குச் செய்து வரும் நன்மைகளை நாம் சிந்திப்பதே இல்லை. ஏதோ நமது திறமையால் பணத்தால் நாம் சாதித்ததாக...

உள்ளம் கலங்க வேண்டாம்

இயேசு தன்னுடைய சீடர்களைப் பக்குவப்படுத்துகிற ஒரு அருமையான செய்தி இன்றைய நற்செய்தியில் நமக்குத் தரப்பட்டுள்ளது. மூன்றாண்டுகள் இயேசுவோடு தங்கியிருந்து, இயேசுவின் புதுமைகளையும், அருங்குறிகளையும் கண்டுமகிழ்ந்து, அப்பங்களை வயிறாற உண்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்றவர்களுக்கு இயேசுவின் செய்தி கலக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அப்படிப்பட்ட கலக்கமான துன்பமான நேரத்தில், கடவுள் மீது முழுமையான நம்பிக்கையை வைப்பதற்கு இயேசு அழைப்புவிடுக்கிறார். எனவேதான், வேதனையான, வருத்தமான நேரத்தில் உள்ளம் கலங்க வேண்டாம் என்ற ஆறுதல் செய்தியைத்தருகிறார். திருப்பாடல்27: 13ல் பார்க்கிறோம்: “வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்”. எவ்வளவு துயரங்கள், வருத்தங்கள் இருந்தாலும், இன்னும் கடவுள் மீது முழுமையான நம்பிக்கையை வைத்திருக்கிறேன் என்கிற செய்தி இங்கே நமக்குத்தரப்படுகிறது. திருப்பாடல் 141: 8 சொல்கிறது: “ஏனெனில், என் தலைவராகிய ஆண்டவரே! என் கண்கள் உம்மை நோக்கியே இருக்கின்றன: உம்மிடம் அடைக்கலம் புகுகின்றேன்: என் உயிரை அழியவிடாதேயும்”. கடவுள் மீது திருப்பாடல் ஆசிரியர் வைத்திருக்கிற...