இறைவனோடு நாம் கொண்டிருக்கும் உறவு
”என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் தருவார்” என்று இயேசு சொல்கிறார். முன்பின் தெரியாத ஒருவர் நமக்கு அறிமுகமாகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடனான நமது உறவு நமக்கு எப்படி இருக்கும்? அவரிடத்தில் ஒரு மரியாதை இருக்கும். அவருக்கும் நமக்கும் இடையே நமது உறவில் சிறிது மரியாதை இருக்கும். அதே நபரிடத்தில் நாம் நெருங்கி, நண்பர் என்ற நிலைக்கு வந்தபிறகு எப்படி இருப்போம்? அந்த இடைவெளி குறைந்திருக்கும். மரியாதையுடன் அன்பும், நட்பும் பிணைந்திருக்கும். எதையும் அவரிடத்தில் கேட்பதற்கோ, பேசுவதற்கோ நமக்கு கூச்சம் இருக்காது. கடவுளுடன், அப்படி ஒரு உறவுநிலைக்கு இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். கடவுளைப்பார்த்து நாம் பயப்படத்தேவையில்லை. கடவுளை தந்தையாக, உற்ற நண்பராக நாம் பார்க்க வேண்டும். அந்த அன்பை நாம் உணர வேண்டும். அப்படி உணர்கிறபோது, நாம் வெளிப்படையாக இருப்பதற்கு கற்றுக்கொள்கிறோம். அவரிடத்தில் நம்மை ஒரு திறந்த புத்தகமாக காட்டுகிறோம். நமக்குத் தேவையானவற்றை நாம் கேட்கிறோம். நமக்கு அது கிடைக்குமா? கிடைக்காதா?...