வாழ்க்கைப் போராட்டம்
வாழ்க்கை என்பது ஒரு போராட்டம். இந்த போராட்டத்தில் நம்மை நிலைநிறுத்தி வெற்றிகாண்பதில் வாழ்வின் வெற்றி அடங்கியிருக்கிறது. எதற்காக வாழ்க்கை என்பது ஒரு போராட்டம்? நாம் நினைப்பது ஒன்றாக இருக்கிறது. ஆனால், நாம் செய்வது மற்றொன்றாக இருக்கிறது. ஏன்? இந்த உலகத்தில் நடக்கிற நிகழ்வுகள். நாம் நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்காக எதிர்ப்புக்களைச் சந்திக்கிறோம். ஆனால், இறுதியில் நாம் தனித்து விடப்படுகிறோம். இந்த உலகத்தின் பார்வையில் பிழைக்கத் தெரியாதவனாக தோன்றுகிறோம். அப்போது நமக்குள்ளாக பல கேள்விகள் தோன்றுகிறது. நாம் செல்லக்கூடிய பாதை சரி தானா? மற்றவர்கள் சொல்வது போல நாம் பிழைக்கத் தெரியாதவர்களா? இது ஒரு போராட்டம். இந்த போராட்டத்தில் நாம் எடுக்கும் முடிவு முக்கியமானது. இந்த உலகம் தனக்கென்று ஒரு சில மதிப்பீடுகளை வழிவகுத்து இருக்கிறது. ஆனால், இந்த உலகத்தில் வாழ்கிறவர்கள், அந்த மதிப்பீடுகளை புறந்தள்ளும்விதமாக, தங்களுக்கென்று, தங்களுக்காக ஒருசிலவற்றை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். மற்றவர்களையும் அப்படி வாழ்வதற்கு தூண்டுகிறார்கள்....