ஆசையே அழிவு
ஆண்டவர் உன்வாழ்வில் உனக்குக் குறை எதுவும் வைக்கவில்லையே. உனக்குப் போதுமானவை எவை என்பதை தெளிவாகத் தெரிந்து, போதுமானதைப் போதுமான அளவு தந்துள்ளார். செழிப்பான திராட்சைத் தோட்டம், சுற்று வேலி, காவல் மாடம், பிழிவு தொழிற்சாலை, போதுமான வருமானம் இப்படி உன் தெய்வம் உனக்குத் தந்துள்ள வாழ்க்கை வசதிகளை வரிசைப்படுத்திப் பார். மேலும் ஆசைப்பட்ட தோட்டத் தொழிலாளன் சொத்துக்கே ஆசைப்பட்டான். அனைத்தையும் உரிமை கொண்டாட ஆசைப்பட்டான். ஆசை அவனைக் குற்றவாளியாக்கியது. கொலைக்காரனாக்கியது. இருந்ததையும் இழந்துவிட்டு குற்றவாளியாக சிறையில் தண்டனை பெறும் நிலை. தோட்டத்தொழிலாளியை மட்டும் அல்ல. ஆசைப்படும் உன்னையும் என்னையும் எல்லோரையும் இப்பரிதாப நிலையில் பார்க்க வேண்டிய பரிதாப நிலை. கடவுள் கொடுத்ததில் நிறைவு அடைந்து, கடவுளுக்கு உரிமையுடையதை கடவுளுக்கும், கடவுள் பணிக்கும் கொடுத்து மேலும் நிறைவடைவோம். அதுவே அருளுடையோர் செயல். இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன். ~ அருட்திரு ஜோசப் லியோன்