Category: தேவ செய்தி

நம்பிக்கையிழந்த இளைய சமுதாயம்

நம்பிக்கை என்பது ஒரே சமதளத்தில் இருக்கக்கூடியது அல்ல. சில வேளைகளில் மிகுந்த நம்பிக்கை உணர்வு நம்மிடம் மேலோங்கியிருக்கும். பல நேரங்களில் நாம் நம்பிக்கை உணர்வு அற்றவர்களாக இருப்போம். அப்படிப்பட்ட மனநிலையைத்தான் சீடர்கள் தங்களது வார்த்தையில் பிரதிபலிக்கிறார்கள். நிச்சயமாக, இது குற்ற உணர்வில் வெளிப்படுகின்ற வார்த்தைகள். தங்களுடைய போதகரிடத்தில் உண்மையாக இல்லாத ஒரு நிலையில் வெளிப்படுகின்ற வார்த்தைகள். சாதாரண மனிதர்களின் நம்பிக்கை வாழ்வில் இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுகளை, உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தக்கூடிய வார்த்தைகள். சீடர்கள் தங்களின் நம்பிக்கை உணர்வை அதிகப்படுத்தும்படியாக இயேசுவிடத்தில் கேட்கிறார்கள். ஒன்று மட்டும், சீடர்களின் வார்த்தையில் தெளிவாக இருக்கிறது. தங்களிடம் நம்பிக்கை குறைவு என்பதை, ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த நம்பிக்கைக் குறைவை இயேசு ஒருவரால் தான், சரிப்படுத்த முடியும் என்பதிலும் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். இன்றைக்கு நம்பிக்கையை அதிகப்படுத்துவது, கடவுளின் வல்லமையால் மட்டும் தான் முடியும் என்பதை, இந்த நற்செய்தி நமக்குக் கற்றுத்தருகிறது. நமது வாழ்வில், நமது நம்பிக்கை இறக்கம் காண்கிறபோதெல்லாம், நாம் கடவுளின்...

உங்கள் பெயர் இருக்கிறதா?

லூக்கா 10:17-24 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நமது பெயர் திருமண அட்டையில் வர வேண்டும், திருவிழா அழைப்பிதழில் வர வேண்டும் மற்றும் மேடையில் நம் பெயர் உச்சரிக்கப்பட வேண்டும் என்று நாம் ஆசைப்படுவது உண்டு. அதுவெல்லாம் உயர்வல்ல. நம் பெயர் விண்ணத்தில் இருக்கிறதா? அதுதான் மிக முக்கியம். இன்றைய நற்செய்தி வாசகம் விண்ணகத்தில் உங்கள் பெயர் இருக்கிறதா? என்பதை பரிசோதித்துப் பாருங்கள். பெயர் இல்லையென்றால் எழுத முயற்சி எடுங்கள் என நம்மோடு பதமாக பேசுகிறது. மண்ணகத்தில் நாம் செய்யும் சிறப்புமிக்க செயல்கள் தான் விண்ணத்தில் நம் பெயர்கள் எழுதப்பட மிகச் சிறந்த காரணிகளாக உள்ளன. மண்ணகத்தில் நாம் இரண்டு செயல்களின் மீது கவனம் செலுத்தினால் அதுதான்...

திருந்த மறுத்தால் பின்விளைவுகள் அதிகம்

லூக்கா 10:13-16 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதர்கள் உடலிலும் மனதிலும் ஆரோக்கியமாக வாழ வேண்டும். நம் பாவங்கள் பல நேரங்களில் அந்த ஆரோக்கியமான சூழ்நிலையை வழங்குவதில்லை. அந்த நேரங்களில் எல்லாம் நாம் வலுவற்றவர்களாக இருக்கிறோம். அப்படி வலுவற்றவர்களாய் இருக்கும் நமக்கு இன்றைய நற்செய்தி வாசகம் வலு கொடுப்பதாய் வருகிறது. பாவங்களிலிருந்து திருந்த அழைக்கிறது. திருந்தவில்லை என்றால் பின்விளைவுகள் அதிகம் எனவும் சொல்கிறது. ஆண்டவர் இயேசு திருந்த மறுத்த நகரங்களுக்கான பின்விளைவுகள் என்னென்ன என்பதை விளக்குகிறார். ஏன் உங்களுக்கு நல்லது செய்தேன்? என்று கடவுள் மனவருத்தம்படும் அளவுக்கு பாவம் கொண்டு செல்கிறது. திருந்தாவிடில் பின்விளைவுகள் இரண்டு. 1. சினம் கடவுள் பல சூழ்நிலைகளை நமக்கு அமைத்து தருகிறார்....

புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள்

இருந்து பார்ப்போமா… சந்தித்து சாதிப்போமா.. மாற்கு 6:17-29 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துதுகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்புமிக்கவர்களே! இன்று நாம் புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் பற்றி சிந்திக்கிறோம். ஐயோ பாடுகளா? என பாடுகளைப் பார்த்ததும் பயந்து ஒளிந்துக் கொள்ளும் மனிதர்கள் வாழும் உலகம் இது. இன்றைய திருவிழா பாடுகளை மகிழ்வோடு ஏற்ற புனித திருமுழுக்கு யோவானை சுட்டிக்காட்டுகிறது. அவருக்கு எதற்காக பாடுகள்? எதற்காக அச்சுறுத்தல்கள்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவர் நேர்மையோடும் தூய்மையோடும் இருந்தார். ஆகவே அவர் பாடுகளை சந்தித்தார். அதற்காகவே அவர் கொலை செய்யப்பட்டார். நாமும் அவரைப் போல இருந்து பாடுகளை சந்திப்பதே, கிறிஸ்துவுக்கு சாட்சியாவதே இந்த விழாவின் நோக்கமாகும். பொய்யிலிந்து உண்மைக்கும், அசுத்தத்திலிந்து தூய்மைக்கும் கடந்து...

இயேசுவின் பெருந்தன்மை

கலிலேயாவிலிருந்து யெருசலேமுக்கு நேரடியாக, எளிதாகச் செல்ல வேண்டுமென்றால் சமாரியா பகுதி வழியாகச் செல்ல வேண்டும். ஆனால், யூதர்கள் சமாரியா வழியாக செல்வதை வெறுத்தனர். காரணம், சமாரியர்களுக்கும், யூதர்களுக்குமிடையே நூற்றாண்டுகளாகப் பகை இருந்தது. வேறு வழியில்லாமல் சமாரியா பகுதி வழியாகச்செல்லும் யூதர்களை சமாரியர்கள் வழிகொடுக்காமலும், அல்லது அவர்களை அவமானப்படுத்தவும் செய்தனர். சில வேளைகளில் காயப்படுத்தவும் செய்தனர். இயேசு யெருசலேமுக்குப்போவதற்கு சமாரியர் ஊர் வழியாகச்செல்வதைத் தோ்ந்தெடுத்தது சற்று ஆச்சரியத்தைக்கொடுக்கிறது. ஏனென்றால், அங்கே விருந்தோம்பலை எதிர்பார்ப்பது அறிவீனம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும், இயேசு அதை பொருட்படுத்தாமல் அந்த வழியாகச்செல்ல ஆவண செய்கிறார். காரணம், இயேசு பகைமையை மறந்து, நட்புறவாட ஒரு முயற்சியைச் செய்கிறார். சமாரியர்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டனர். எனவே, யூதராகிய இயேசு அவர்களோடு நட்பு பாராடட முயல்வது, மற்றவர்கள் பார்வையில் மிகப்பெருந்தன்மையான ஒன்று. அத்தகையை பெருந்தன்மையை இழிவுபடுத்துவதை சீடர்களால் தாங்க முடியவில்லை. எனவேதான், யோவானும், யாக்கோபும் கோபம் கொள்கிறார்கள். இயேசு அதனை விரும்பவில்லை. மேன்மக்கள்...