இறைவனின் திருவுளம்
திருத்தூதர் பணி 11: 21 – 26, 13: 1 – 3 ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்பட்ட பின்பு, கிறிஸ்தவர்களுக்கு எதிரான சித்ரவதைகள் அதிகமாயின. திருத்தூதர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் யூதேயா மற்றும் சமாரியா பகுதிகளுக்கு தப்பியோடினர் (8: 1). ஆங்காங்கு சிதறுண்டவர்கள் அமைதியாக இல்லை. மாறாக, தாங்கள் சென்ற இடங்களிலேயே நற்செய்தியை அறிவித்து வந்தனர்(8: 4). குறிப்பாக, பிலிப் அன்னகர் ஒருவருக்கு நற்செய்தியை விளக்கிக்கூறுவதைப் பார்க்கிறோம்(8: 5 – 40). சவுலின் மனமாற்றம்(9ம்அதிகாரம்) மற்றும் புறவினத்து மக்களுக்கான பேதுருவின் நற்செய்திக்குப்பிறகு(10ம் அதிகாரம்), மீண்டும் எருசலேம் நோக்கி அனைவருடைய பார்வையும் திரும்புகிறது. எருசலேமில் வாழ்ந்த யூத கிறிஸ்தவர்களுக்கு, புறவினத்து மக்களுக்கான தன்னுடைய நற்செய்தியையும், அவர்களின் மனமாற்றத்தையும் எடுத்துரைக்கிறார்(11: 18). ஸ்தேவானை முன்னிட்டு உண்டான துன்புறுத்தலால் மக்கள் பெனிசியா, சைப்பிரசு, அந்தியோக்கியா வரை சிதறிப்போயினர். (11: 19). அவர்கள் தாங்கள் சென்ற இடங்களில் நற்செய்தியை அறிவித்து வந்தனர். அவர்களது நற்செய்தியின் பொருட்டு, பெருந்தொகையான...