எல்லாவகை அச்சத்தினின்றும் ஆண்டவர் விடுவித்தார்
திருப்பாடல் 34: 1 – 2, 3 – 4, 5 – 6, 7 – 8 இந்த உலகத்தில் வாழ்கிற மனிதர்களுக்கு இயல்பாகவே அச்சம் என்பது உள்ளத்திலே இருக்கிறது. அந்த அச்சம் பலவிதமான காரணங்களுக்காக ஒருவருக்குள் எழலாம். இருளைப் பார்த்து ஒரு சிலர் பயப்படலாம். படிப்பைப் பார்த்து பயப்படலாம். பாம்பைப் பார்த்து பயப்படலாம். எதிர்காலத்தை நினைத்து அச்சம் கொள்ளலாம். மனிதர்கள் அச்சம் கொள்வதற்கு ஏராளமான காரியங்கள் இந்த உலகத்திலே இருக்கிறது. வாழ்க்கையில் எப்படிப்பட்ட அச்சம் இருந்தாலும், கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்களை, ஆண்டவர் அச்சத்தினின்று விடுவிக்கிறார் என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர் நிச்சயம் அச்சம் கொள்ளமாட்டார். ஏனென்றால், கடவுளின் பிரசன்னம் தன்னோடு இருப்பதாக அவர் உணர்கிறார். நெருக்கடி வேளையில் ஆண்டவர் கைதூக்கி விடுவார் என்கிற நம்பிக்கை அவரிடத்தில் இருக்கிறது. எத்தகைய தீங்கு வந்தாலும், கடவுள் நிச்சயம் பாதுகாப்பார் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஏனென்றால்,...