Category: தேவ செய்தி

மகிழ்ச்சியும் இரக்கமுமே நற்செய்தி

தூய லூக்கா நற்செய்தியாளர் திருவிழா லூக்கா 10:1-9 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் நற்செய்தியாளர் தூய லூக்கா திருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். சிரியாவின் அந்தியோக்கு நகரில் பிறந்த லூக்கா, ஒரு மருத்துவர். ஓவியரும் கூட என்று வரலாறு கூறுகிறது. புறவினத்தாராகிய லூக்கா, அப்போஸ்தலர் பவுலுடன் இணைந்து உழைத்தார். “அன்புமிக்க மருத்துவர் லூக்கா” என்று பவுல் இவரைக் குறிப்பிடுகிறார். நான்கு நற்செய்தியாளர்களும் இயேசுவின் பணிவாழ்வை இறையரசுப் போதனையை மிகவும் சிறப்பான விதத்தில் வடித்துத் தந்துள்ளார்கள். அவற்றுள் தூய லூக்காவின் நற்செய்தியானது மகிழ்வின் நற்செய்தியாக இரக்கத்தின் நற்செய்தியாக விளங்குவதை பார்க்கின்றோம். தூய லூக்கா இயேசுவைக் கனிவுள்ளவராக இரக்கமுள்ளவராக எல்லோருக்கும் வாழ்வளிப்பவராகப் படம் பிடித்துக் காட்டுகிறார். கிரேக்க குலத்தைச் சார்ந்தவரான தூய லூக்கா சிரியாவில்...

கவனிக்காதே, கடைப்பிடிக்காதே

லூக்கா 11:42-46 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். வழக்கமாக பல்வேறு விதமான போதனைகளை நற்செய்தியில் தந்து நம் வாழ்வை சீராக்க, நேராக்க அழைக்கும் நம் ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தியில் இருவரை சுட்டிக்காட்டி அவர்களைப் போன்று வாழ வேண்டாம், அவர்களை கவனிக்கவும் வேண்டாம், அவர்கள் செய்வதை கடைப்பிடிக்கவும் வேண்டாம் என்கிறார். அந்த இருவர் யார்? ஏன் அவர்கள் செய்வது போன்று செய்யக் கூடாது என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது. வாருங்கள் பார்ப்போம். 1. பரிசேயர் மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய கடவுளின் நீதியை பரிசேயர்கள் கடைப்பிடிக்கவில்லை. கடவுளின் அன்பை ஒரு பொருட்டாக அவர்கள் கருதவில்லை. அவற்றை எல்லாம் மிக எளிதாக விட்டுவிட்டனர். கடவுளுக்கு விருப்பம் இல்லாததை அவா்கள்...

இது என்ன தர்மம்? இதுவரை தெரியலையே!

லூக்கா 11:37-41 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். தா்மம் தலை காக்கும் என்பது நாம் வாழ்க்கையில் பிறருக்கு செய்யும் உதவிகள் பிறகு நமக்கு திருப்பி கிடைக்கும் என்பது பொருள். இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு சொல்வது மிகவும் வித்தியாசமாக உள்ளது. உங்கள் உள்ளத்தில் உள்ளதை தர்மமாக கொடுங்கள். உங்கள் உள்ளத்தில் உள்ள அன்பு, அக்கறை, பாசம், இரக்கம், மன்னிப்பு, மகிழ்ச்சி போன்ற நற்பண்புகளை தர்மமாக பிறருக்கு கொடுங்கள் என்கிறார். இங்கு இயேசு சொல்வது பொருள் அல்ல மாறாக நற்பண்புகள். நாம் தர்மம் கொடுக்க வேண்டுமென்றால் நமக்குள் கண்டிப்பாக அந்த நற்பண்புகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்த நற்பண்புகளை நாம் பெற்றிருக்க இரண்டு செயல்களில் மிக விரைவாக...

THE SIGN IS THE LENGTH OF THE LINE

“This is an evil age. It seeks a sign. But no sign will be given it except the sign of Jonah.” –Luke 11:29 To the Pharisees who wanted a dazzling, miraculous sign, Jesus offered the sign of Jonah. What was the sign of Jonah? It was a sign with two meanings. First, it was a sign of the Resurrection of Jesus. Jonah was buried in the water in the belly of a large fish, and was delivered safely to land on the third day (Jon 2:1, 11). Second, another sign of Jonah was the sign of repentance. The entire population...

அடையாளம் அவசியமா வேணுமா?

லூக்கா 11:29-32 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஆண்டவரை அடையாளத்திற்காக, அதிசயத்திற்காக மட்டும் நாம் தேடினால் ஏமாற்றம் தான் அதிகமாக வரும். அப்போது தான் நம் நம்பிக்கையில் இருள் படா்ந்து நிற்கும். அற்புதத்திற்காக தேடாமல் மனமாற்றம் பெறுவதற்காக தேடினால் அவரின் கட்டளைகளைக் கண்டிப்பாக நாம் கடைப்பிடிப்போம். ஆண்டவரிடம் அதிசயம், அற்புதம் கிடைக்கும் என எதிர்பார்ப்பவர்களிடம் இரண்டு தவறான பண்புகள் இருப்பதை இன்றைய நற்செய்தி வாசகம் அடிக்கோடிட்டு காட்டுகிறது. 1. அவநம்பிக்கை ஒருசிலர் ஆண்டவா் அதிசயம் செய்தால் தான் அவரை நம்புவேன். அவர் அதிசயம் செய்யவில்லை என்றால் ஆலயம் வரமாட்டேன். அவரை பார்க்கமாட்டேன். அவருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்ற எண்ணம் கொண்டிருப்பது மிகவும் தவறானது. இப்படிப்பட்டவர்களுக்கு நம்பிக்கையும் இருப்பதில்லை....