Category: தேவ செய்தி

உட்காருவதனால் உண்டாகும் பலன்கள் அதிகம்

லூக்கா 14:25-33 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். பரபரப்பான உலகில் வாழும் நாம் வாழ்க்கையில் எதையும் நிதானமாக உட்கார்ந்து சிந்திப்பதில்லை. உட்கார்ந்து சிந்திக்கும் போதுதான் நம்மைப் பற்றிய உண்மை நிலவரங்கள் வெளிப்படுகின்றன. அதிலே தான் நாம் நம்மை முன்னேற்றுவதற்கான செயல்பாடுகளைச் செய்ய முடிகிறது. உட்காருவதால் உண்டாகும் இரண்டு முக்கிய பலன்களை சொல்லித் தர வந்திருக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். 1. பலம் கிடைக்கிறது நாம் உட்கார்ந்து சிந்திக்கும்போது கடினமான வாழ்க்கையை சந்திப்பதற்கான பலம் கிடைக்கிறது. உட்கார்ந்து ஒரு சில மணித்துளிகள் சிந்திக்கும்போது நம் மனது பலவிதமான, புதுமையான யோசனைகளை அள்ளி அள்ளி வழங்குகிறது. இயேசுவின் பின்னால் செல்லும் போது ஏற்படும் துன்பங்களை எப்படி சளி்க்காமால் சமாளிக்க வேண்டும்...

கிறிஸ்துவின் மனநிலை

பிலிப்பியர் 2: 5 – 11 ”கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்”. கிறிஸ்து இயேசு இந்த உலகத்திற்கு வந்தபோது, எப்படிப்பட்ட மனநிலை கொண்டிருந்தார்? ”காலம் நிறைவேறி விட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” (மாற்கு 1: 15). இது தான் இயேசுவின் மனநிலையாக இருந்தது. இயேசு இந்த உலகத்திற்கு வந்தது, மக்களை மனம் திருப்பி, இறைவனின் பக்கம் அவர்களைக் கூட்டிச் சேர்க்க வேண்டும் என்பது தான் ஆகும். எந்த மக்கள்? லூக்கா நற்செய்தியாளர் இதற்கான பதிலைத் தருகிறார். ”ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றவர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்..”. இயேசு வருவதற்கு முன்னால், மேற்சொன்ன அனைவருமே, மற்ற போதகர்களால் விலக்கி வைக்கப்பட்டிருந்தனர். இனி அவர்களுக்கு இறையாட்சியில் இடமில்லை என்கிற நிலையே நீடித்தது. அவர்கள் சமூகத்திலிருந்து முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டனர். அவர்களைத் தீண்டுவாரும் எவருமில்லை. ஆனால், இயேசு...

அனைத்து ஆன்மாக்கள் திருவிழா

கல்லறைகளை கண்முன்னே வை யோவான் 6:37-40 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் அனைத்து ஆன்மாக்கள் திருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அனைத்து ஆன்மாக்களின் பரிந்துரை உங்களுக்கு இந்த நாளில் கிடைப்பதாக! இறந்தவர்களை நினைத்துப் பார்க்கும்விதமாக `அனைத்து ஆன்மாக்கள் தினம்’ அல்லது `கல்லறைத் திருநாளை” நாம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறாம். இறந்தவர்கள் அனைவரையும் இன்று நாம் நினைத்து அவர்களுக்காக ஜெபிக்கிறோம். நம் அன்னையாகிய திருச்சபை, மோட்சத்திலிருக்கும் தன் மக்களை நினைத்தபின் வேதனைப்படும் தன் மக்களை நினைக்கிறது. அவர்களுக்காக பரிந்து பேசுகிறது. அவர்களுக்கு தன்னாலான உதவி செய்ய முயற்சிக்கிறது. மோட்சத்தில் வாழும் தன் மக்களுடன் அவர்களை சீக்கிரம் ஒன்றிக்கும்படி மன்றாடுகிறது. இன்று ஒவ்வொரு குருவும் மூன்று திருப்பலிகள் வைக்கிறார்கள். முதல் திருப்பலி உத்தரிக்கிற ஸ்தலத்தில்...

புனிதர் அனைவர் பெருவிழா

சாதாரணமானது ஆனால் வரலாறானது மத்தேயு 5:1-12 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் புனிதர் அனைவரின் பெருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அனைத்து புனிதர்களின் பரிந்துரை உங்களுக்கு இந்த நாளில் கிடைப்பதாக! மனிதர்கள் என நாம் மரியாதை செலுத்துவோர் தங்களுடைய வாழ்வையும் பணியையும் முழுமையாக இறைசித்தத்திற்கு அர்ப்பணித்து துன்பங்களை, இன்பங்களாக ஏற்று, உலக மக்களின் நலனுக்காகவும், அவர்கள் நெறிபிறழாமல் வாழ வழிகாட்டிகளாக இவ்வுலகில் வாழ்ந்தவர்கள். இவர்களையே கத்தோலிக்கத் திருச்சபை புனிதர்கள் என அடையாளப்படுத்துகிறது. கடவுளை வழிபடுகிற நாம், அவரோடு நெருங்கிய உறவு கொண்டு நமக்காகப் பரிந்து பேசுகிற புனிதர்களுக்கு மரியாதை செலுத்துவது நமது மேலான கடமையாகும். அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்விற்கு நன்றி கூறுவது தகுதியும் நீதியுமாகும். இவ்விழா நாம் புனித வாழ்விற்குள் நுழைய...

பவுலடியாரின் அர்ப்பண வாழ்வு

கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாள் முதல், கிறிஸ்துவுக்காக உடல், பொருள், ஆன்மாக அனைத்தையும் முழுமையாக அர்ப்பணித்தவர் பவுலடியார். அவர் நற்செய்தியின் மீது கொண்ட தீராத அர்ப்பண உணர்வால், பல கடுமையான பயணங்களை மேற்கொண்டு, கிறிஸ்துவுக்கு உண்மையான சீடராக விளங்குவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அதனுடைய வெளிப்பாடாக இருப்பது தான், இன்றைய முதல் வாசகத்தில் அவர் சொல்லும் வார்த்தைகளாகும். ”நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே. நான் இறந்தால் அது ஆதாயமே” என்கிற வார்த்தைகள், அவர் தன் வாழ்வை எப்படி வாழ்ந்தார் என்பதற்காக அடித்தளமாக அமைந்திருக்கிறது. இந்த உலகத்தில் தனக்காக வாழ வேண்டும் என்று அவர் வாழவில்லை. தான் வாழ்ந்தால், இன்னும் ஏரளாமான ஆன்மாக்களை மீட்டெடுக்க முடியும். இன்னும் பல பயணங்களை மேற்கொண்டு, எங்கெல்லாம் கிறிஸ்துவை அறியாத மக்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம், நற்செய்தி அறிவிக்க முடியும், என்று அவர் நினைக்கிறார். அதே வேளையில், கிறிஸ்துவை சந்திக்க வேண்டும் என்கிற ஆவலும் அவரை வாட்டுகிறது. கிறிஸ்துவை முகமுகமாக தரிசிக்க...