Category: தேவ செய்தி

முழுமையை நோக்கி…

திருவிவிலியத்தை இரண்டாகப் பிரித்தோமென்றால் அது (1) பழைய ஏற்பாடு, (2) புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாட்டை இரண்டாகப் பிரித்தோமென்றால், (1) முதல் ஐந்து புத்தகங்களான தோரா, இவை அனைத்தும் திருச்சட்டங்களைப் பற்றியும் அவற்றை நாம் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைக்கின்றது. (2) மற்ற அனைத்தையும் இறைவாக்குகளலாக (பல உட்பிரிவுகள் இருந்தாலும்) எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இவையனைத்திலும் ஏதோ ஒன்று குறையிருப்பதாகவும், முழுமையைப் பெறுவதற்காக காலம் காலமாகக் காத்திருப்பதையுமே நாம் அனைவரும் அறிந்ததே. இந்த நிறைவைக் கொடுப்பவரே இயேசு. அவரது படிப்பினைகள் அனைத்தும் பழைய ஏற்பாட்டோடு இணையும் பொழுதே, ஒரு முழுமையும் நிறைவும் பெறுகிறது. இந்த நிலையை அறிந்து கொள்வது வெறும் முதல் படிநிலைதான். (யூதர்களைச் சற்று சிந்திக்கவும் அவர்கள் இன்னும் பழைய ஏற்பாட்டை மட்டுமே தமது புனித நூலாகக் கொண்டிருக்கிறார்கள்) அடுத்தநிலை என்னவென்றால் அறிந்தவற்றை அறிக்கையிடுதல், கற்பித்தல். இந்த நிலையில் இருப்பவர்கள் விண்ணகத்தில் சிறியவர்களே. (நம்மில் பலரையும் குறிப்பாக...

அவரைப் போல …!

மத்18:21-35 என் மட்டில் கடவுளின் அன்பு அளவற்றது என்பதை மறந்து பிறர் செய்த தவறுகளை நான் மன்னிக்கின்றேனா என்பதை சிந்திக்க இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது. மன்னிப்பு, நாம் இன்னும் ஆன்மீகத்தில் ஆழச் செல்ல உதவுகின்றது. மன்னிக்கின்றவனே வாழத் தெரிந்தவன், வலிமையானவன். ஆனால் பல நேரத்தில் நாம் பிறரை அடக்கி ஆளும் போதும், பிறர் என் பேச்சினை அப்படியே கடைபிடிப்பார்கள் என்று கூறுவதில்தான் பெருமை கொள்கிறோம். பிறரைப் பழி வாங்குவதே சிறந்த தலைமைப் பண்பு என்று எண்ணி வாழ்ந்து வருகிறோம். காரணம் இவ்வுலகம், குறிப்பாக மாயக் கவர்ச்சிகளைக் கொண்ட திரைப்படங்களின் கதைக்கரு அனைத்தும் பழிவாங்கும் படலமாகவே இருக்கின்றது. பழிவாங்குபவனே கதாநாயகன், மன்னிப்பவன் கோழை என்ற மனநிலைக்கு இன்றைய உலகம் நம்மைத் தள்ளி விட்டுவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைய நற்செய்தி நம் முதுகில் தட்டி ‘திரும்பிப் பார் ராஜா’ என்று அன்போடு அழைக்கின்றது. உவமையில் பெரிய கடன் தொகையைக் கொண்டவன், அரசனிடம் என்...

இயேசுவின் போதனையும், தாக்கமும்

இதுவரை கேட்டிராத போதனை யூதர்களை குழப்பத்திலும், இயேசுவின் மீது கோபத்தோடு தாக்கவும் செய்கிறது. தாங்கள் மட்டும் தான் இறையாட்சி விருந்துக்கு தகுதியானவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த யூதர்களுக்கு, இயேசுவின் போதனை புதிய போதனையாக இருக்கிறது. இதுவரை கேட்டிராத போதனையாகவும் இருக்கிறது. அவர்களுக்கு குழப்பம் என்பதைக் காட்டிலும், கோபம் அதிகமாக இருக்கிறது. யூதர்கள் மத்தியில் வாழ்ந்த போதகர்கள் அனைவருமே, யூதர்கள் மட்டும் தான், இறையாட்சி விருந்திற்கு தகுதிபெற்றவர்கள், என்கிற ரீதியில் போதித்துக்கொண்டிருந்தனர். அவர்களது போதனை மக்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், அவர்கள் சொல்வது யூதர்களுக்கு மகிழ்ச்சியைத்தருவதாக அமைந்திருந்தது. ஒருவிதமான மயக்கத்தில் இருந்தனர். கேட்கக்கூடிய பொய்யான வாக்குறுதிகளுக்கு அவர்கள் கட்டுண்டு கிடந்தனர். அதனைத்தாண்டி அவர்களால் எதையும் சிந்திக்க முடியவில்லை. வாழ்வு வறுமையாக இருந்தாலும், எதிர்கால இறையாட்சி விருந்து அவர்களுக்கு மகிழ்வைத் தந்தது. ஆனால், அதற்கு தடையாக வந்தது, இயேசுவின் புதிய போதனை. தான் போதிப்பது மக்கள் மத்தியில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பதை,...

உண்மையான வழிபாடு

உண்மையான வழிபாடு என்றால் என்ன? என்பதற்கு, இயேசு சமாரியப்பெண் உடனான இந்த உரையாடலில் நமக்குப் புரிய வைக்கிறார். சமாரியர்கள் முதல் ஐந்து புத்தகங்களை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், இறைவாக்கினர் நூல்களையோ, திருப்பாடலையோ ஏற்றுக்கொள்ளவில்லை. யூதப்போதகரின் கருத்துப்படி, சமாரியர்கள் மூடநம்பிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். அவர்களின் வழிபாடு பயத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது. அன்பின் அடிப்படையில் அல்ல. அவர்கள் வணங்கிய பல தெய்வங்களில் யாவே இறைவனும் இடம்பெற்றிருந்தார். அதுவும் பயத்தின் அடிப்படையில் தான். கடவுளை நாம் பயத்தின் அடிப்படையில் வணங்குவது சரியான வழிபாடாக இருக்க முடியாது. கடவுள் அன்புமிக்கவர். கடவுள் இரக்கமிக்கவர். கடவுள் நம்மை பயமுறுத்துகிறவர் கிடையாது. மாறாக, நாம் தவறு செய்தாலும், நம்மை தொடர்ந்து அன்பு செய்கிறவர். நம்மை வழிநடத்துகிறவர். கடவுள் அன்பானவர் என்ற நம்பிக்கை நமக்கு இருந்தால்தான், நாம் அவரை சுதந்திரமாக வழிபட முடியும். இறுக்கம் தளர்ந்து, உண்மையான மனத்தோடு. முழு ஆன்மாவோடு அவரை நாம் வழிபடுவோம். பயத்தின் அடிப்படையில் வழிபடுவது உண்மையான...

மூத்தவனா? இளையவனா?

லூக் 15 : 1-3, 11-32 “உன் நண்பன் யாரென்று சொல் நீ யாரென்று சொல்கிறேன்” என்றும் உன் எதிரி யாரென்று சொல் நீ யாரென்று சொல்கிறேன்” என்றும் கூற கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த இரண்டையும் மாற்றி, “நீ வணங்கும் கடவுள் யாரென்று சொல் நீ யாரென்று சொல்கிறேன்” என்கிறது ஊதாரி மகன் நற்செய்தி. ‘மொத்த நற்செய்தி நூல்களின் சாரம்’ என்று இந்த உவமையைக் குறிப்பிடலாம். சில விவிலிய அறிஞர்கள் இப்பகுதியினை, ‘விவிலியத்திற்குள் ஒரு விவிலியம்’ என்கிறார்கள். பிற மதத்தினர் கடவுளை நீதியோடு தண்டிக்கக் கூடியவராகவே பார்க்கிறார்கள். ஆனால் நாம் கடவுளை நீதியோடு அன்பு செய்கிறவராகப் பார்க்கிறோம். இங்கு மூத்தமகன் கட்டளைகள் அனைத்தையும் கடைபிடித்து வாழ்ந்த யூதர்களையும், சொத்துக்களை எல்லாம் இழந்த இளையமகன் பிற இனத்தவர்களையும் பாவிகளையும் குறிக்கின்றனர். இந்த உவமையில் சிறப்பானது இறுதியில்தான் உள்ளது. அது என்னவென்றால் மூத்தமகன் வீட்டிற்குள்ளே சென்றானா? இல்லையா? என்பது தான். இதனை ஆண்டவர் இயேசு...